சிறுவர் சிறுகதை; முல்லாவின் தந்திரம்!

Children's short story; Mullah's trick!
Children's short story
Published on

ரு நாள் முல்லா தான் வாங்கிய புதுக் காலணிகளை  அணிந்து பெருமையுடன் தெருவில் நடந்து சென்றார். அப்போது ஒரு ஆலமரத்து நிழலில்  ஒரு சிறுவர் கூட்டம் விளையாடிக்கொண்டு இருந்தார்.

அதில் ஒருவன் முல்லா அணிந்து இருந்த புதுச் செருப்புகளை வியந்து பார்த்து, மற்றவர்களிடம் "டேய் நம்ம முல்லா ஜி போட்டிருக்கும்  செருப்பை பாருங்க எவ்வளவு அழகு, பளபளப்பு, அதில் முகம் கூட பார்க்கலாமே? அதில் பூசியிருக்கும்  கண்ணாடிச் சில்லுகளை  பதித்து, அதில் சூரிய ஒளிபட்டு தெறித்து வர்ண ஜாலம் காட்டுகிறது பார்" என்று சிறுவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர்.

அதில் ஒரு சிறுவன், டேய் இந்த செருப்புகளைத் தந்திரமாக அவரிடமிருந்து பறித்து விடலாமா? என்றான்.

கண்டிப்பாக செய்யலாம் என்று எல்லாச் சிறுவர்களும் ஒரே  குரலில் சொன்னார்கள்.

அப்போது, முல்லா களைப்பு தீர ஆலமர நிழலில் சற்று ஓய்வு எடுக்கலாம் என்று எண்ணி வந்தார்.

உடனே, சிறுவர்கள் 'வாங்க மாமா! என்று வரவேற்றனர்.

என்னடா, பசங்களா வரவேற்பு பலமாக இருக்கிறது என்றார் முல்லா.

உடனே, ஒரு சிறுவன் ஒன்றுமில்லை என்றான்.

அப்போது கூட்டத்திலிருந்த ஒருவன், முன்னால் வந்து முல்லா மாமா, இந்த ஆலமரத்தின் மீது யாராலுமே  ஏற முடியாதாம்! என்றான்.

அப்படியா, யாராலும் ஏற முடியாது என தவறாக முடிவு செய்யக்கூடாது என்றார் முல்லா.

அப்படி என்றால் உங்களால் முடியுமா? என்றான்.

உடனே, முல்லா வேறு யாராவது  உங்களில் ஒருவன் ஏற வேண்டியது தானே? என்றார்.

உடனே, எங்களால் முடியாது என்பதால்தானே உங்களைக் கேட்கிறோம் என்றான் ஒரு சிறுவன்.

முல்லா, இதில் ஏறினால் என்ன பெரிய பலன் கிடைக்கும் என்றார்.

உடனே ஒரு சிறுவன், அவருக்கு வயதாகிப் போச்சுடா? அதுதான் நழுவுறாருடா? அவரை இனிமேல், 'முல்லா தாத்தா' எனக் கூப்பிடுவோம் என்றான். உடனே, எல்லா  சிறுவர்களும் அவரை தாத்தா, தாத்தா எனக் கூறினார்கள்.

இதைக் கேட்டு கோபம் அடைந்த முல்லா, என்னையா தாத்தா என்கிறீர்கள்? இப்போதே இந்த மரத்தில் ஏறி நான் கிழவனல்ல என நிரூபிக்கிறேன் என கத்தினார்.

எங்கே ஏறுங்கள் பார்க்கலாம்? என சிறுவர்கள் விடாப்பிடியாக கத்தினார்கள்.

வேறு வழியில்லாமல் முல்லா மரம் ஏற தயாரானார். உடனே செருப்புகளை கழட்டி தான் கொண்டு வந்திருந்த பைக்குள் போட்டு இடுப்பில் கெட்டியாக செருகிக் கொண்டுகிடு கிடு என மரம் ஏறினார்.

சிறுவர்கள், முல்லா செருப்புகளை கீழே விட்டுச் சென்ற பின் எடுத்துச் சென்றுவிடத் திட்டமிட்டு இருந்தனர்.

முன்னெச்சரிக்கையாக முல்லா செருப்புகளை மடியில் கட்டிக்கொண்டு மரம் ஏறினதால் தங்கள் திட்டம் தோல்வியடைந்ததைப் பார்த்து சிறுவர்களில் ஒருவன், முல்லாவிடம் மரத்தின் மீது என்ன தெருவா உள்ளது?

இதையும் படியுங்கள்:
The Magical World of Disney: History and Fun Facts
Children's short story; Mullah's trick!

செருப்பை ஏன் எடுத்துச் செல்கிறீர்கள்? எனக்கேட்டான்.

உடனே முல்லா, இங்கு ஏதாவது தெரு இருந்தால் நான் மீண்டும் கீழே இறங்கி வந்து செருப்பை எடுக்க முடியாது?

இரண்டு வேலை எதற்கு? அது முட்டாள் தனம் அல்லவா? என்று சொல்லியபடி மரத்தின் மேல் கிளையில் உட்கார்ந்து கொண்டார்.

தங்கள் தந்திரம் பலிக்காததால், மாமா, நீங்கள் கிழவரல்ல! நீங்கள் ஜெயித்து விட்டீர்கள்? என்று ஏமாற்றத்தோடு குரல் கொடுத்தனர்.

முல்லா புன்சிரிப்போடு மரத்திலிருந்து இறங்கினார். பெருமிதத்தோடு, மடியில் இருந்த செருப்புகளை எடுத்து கால்களில் அணிந்து கொண்டு, சிறுவர்களை  வெற்றிப் பார்வையுடன் ஒரு பார்வை  பார்த்தார். தனது தந்திரத்தால் ஜெயித்த பிறகு வீட்டை நோக்கி 'டக் டக்...' என நடந்து சென்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com