சிறுவர் கதை; அமுதாவின் பிறந்தநாள்!

short story...
short story...
Published on

முதா தன் பிறந்தநாளன்று பெற்றோருடன் முருகன் கோவிலுக்கு வந்தாள். கோவிலுக்குள் வந்தவுடன் அமுதா மற்றும் அவள் பெற்றோர் அதிர்ச்சியாகினர், காரணம் அன்றைய தினம் விஷேச நாள் என்பதால் மக்கள் கூட்டம் கோவிலை சுற்றி அலைமோதியது. அமுதாவின்  தந்தைக்கு பயம் வந்தது ‘ஆஹா இப்பதான் நான் புதுச்செருப்பு வாங்கியிருக்க இந்த கூட்டத்தில் யாராவது களவாடிவிட்டால் என்ன செய்வது’ என்று யோசித்துக் கொண்டிருந்தார்.

அப்போது கோவில் வாசலில் பிச்சை எடுக்கும் ஒருத்தர் வர பக்தர்களின் செருப்புகளை தன் பக்கத்தில் விட்டு போக சொல்லி காசு வசூலித்திருந்தார். இதை பார்த்த அமுதாவின் தந்தை ‘வாருங்கள் அங்கே போய் நமது செருப்புகளை கழட்டி போடுவோம் என்று சொல்லி, பிச்சைக்காரரிடம் செருப்புகளை ஒப்படைத்துவிட்டு கோவிலுக்குள் சென்றனர்.

சுமார் ஒன்றரை மணி நேரம் வரிசையில் நின்று தரிசனம் செய்து முடித்து வந்தனர். அதிக நேரம் நின்றதால் அவர்களுக்கு பயங்கர பசி. கோவிலில் விற்கப்படும் பிரசாதங்களை வாங்கலாம் என்ற முடிவுடன் அதற்காக இன்னொரு வரிசையில் நின்றனர். அப்போது அமுதா கோவிலை சுற்றி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள், அந்த நேரம் கோவில் வாசலில் பிச்சைக்காரர்கள் யாசிக்கும் குரல் அவள் காதில் விழுந்தது.

இதையும் படியுங்கள்:
ஆர்வமும், திறமையும். நம்மை வளர்க்கும்!
short story...

தன் அப்பாவிடம் ‘அப்பா நீ வெளியே உட்கார்ந்து இருப்பவர்களிடம் காசு கொடுத்தியா என்று கேட்டாள்’ அதற்கு அவள் அப்பா ‘ இல்லை இனிமேல்தான் தரணும் என்றார்’ இதைக் கேட்ட அமுதாவுக்கு மனதில் ஒன்று தோன்றியது  ‘அவர்களும் பசியை போக்க தான் இப்படி கெஞ்சி கொண்டிருக்கிறார்கள்’, நாமும் நம் பசியை போக்கத்தான் இந்த வரிசையில் நிற்கிறோம், ஆகையால் இருவருக்கும் தேவை ஒன்றுதான் என்று கருதி. தன் அப்பாவிடம் ‘அப்பா ஒரு இருபது பிரசாதங்களை  வாங்குங்கள்’ என்றாள். 

மகள் சொல்வதை கேட்டு அவள் தந்தை வாங்கிக் கொடுத்த பிரசாதத்தை கோவில் வாயிலில் அமர்ந்திருந்த வர்களிடம் கொடுத்தாள் அமுதா. அமுதாவின் தந்தை, அவளை ஆச்சரியத்துடன் பார்க்க, அமுதா சொன்னாள். அவங்களும் பசியைப் போக்கதானே யாசிக்கிறார்கள். இன்று மாலை என் நண்பர்களுக்கு நான் ட்ரீட் கொடுக்கப்போறேன். இவர்களின் பசியைப்போக்க என் பிறந்தநாளுக்கு நான் தருகின்ற ட்ரீட் இது ‘என்று கூறினாள். அவள் பெற்றோரைப் பெருமைப்படுத்தினாள் அமுதா.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com