சிறுவர் கதை: எளிதில் கிடைத்துவிட்டது!

Children's Story: Easy to get!
Short StoryImage credit - momjunction.com
Published on

ருஷத்துக்கு ஒரு தடவை, அரசனும், அரண்மனை பிரதானிகளும் மலைவாசம் செய்யச் சென்று விடுவது வழக்கம். அவ்வண்ணம் அரசன் அப்போது ராமதுர்க்கத்தில் மலைவாசம் செய்து கொண்டிருந்தார். அது வெகு தூரமாதலால் தெனாலி ராமன் குதிரை மீதேறி அரசனைப் பார்க்கப் புறப்பட்டான்.

கரடு முரடான பாதையில் குதிரை ஏறியும், இறங்கியும் சென்றதால் தெனாலி ராமனுக்கு உடம்பு வலி எடுத்தது. வழியில் மழை வேறு ‘சோ' வென்று பெய்ததால்  உடல் முழுவதும் நனைந்து நடுங்க தொடங்கி விட்டது.

காற்றும், மழையும் அதிகமாக இருந்ததால் மலையடிவாரத்தில் சத்திரத்தில் இறங்கிவிட்டான். அரண்மனை பிரதானிகளும் மேலே போகாமல் அங்கேதான் இருந்தார்கள்.

ஈரத்துணியுடன் வெடவெட என்று நடுங்கி கொண்டே உள்ளே எட்டிப்பார்த்தான் தெனாலிராமன். உள்ளே கணப்பு மூட்டி அதில் மாமிசத்தைப் பொரித்துத் தின்று கொண்டே வட்டமாக உட்கார்ந்து குளிர் காய்ந்து கொண்டிருந்தார்கள் அரண்மனை பிரதானிகள்.

எட்டிப்பார்த்த தெனாலிராமனை உள்ளே அழைக்காமல் இவன் இங்கே ஏன் வந்தான்! என்றத் தோரணையில் இருந்தார்கள் பிரதானிகள். அதை பொருட்படுத்தாமல் உள்ளே சென்றான் தெனாலிராமன். இங்கு உனக்கு இடம் இல்லை என்றனர் பிரதானிகள்.

தெனாலிராமனுக்கு கோபத்தில் மூளை வேலை செய்ய தொடங்கி விட்டது. உடனே “எனக்குக் கொஞ்சம்  மாமிசம் தருகிறீர்களா? என்றான்.

என்ன! உனக்கு மாமிசம் வேண்டுமா! என்னய்யா அக்கிரமாயிருக்கு? நீர் கூட மாமிசம் சாப்பிடக் கற்றுக் கொண்டீரா என்ன!” என்று அனைவரும் ஏககுரலில் பரிகாசம் பண்ணினார்கள்.

“அடக்  கண்ணராவியே! எனக்கா கேட்கிறேன். என் குதிரைக்கு அல்லவா கேட்கிறேன்!” என்றான் தெனாலிராமன்.

என்ன! உன் குதிரைக்கா! அது இன்னும்  வேடிக்கையாயிருக்கே! உன் குதிரை மாமிசம் சாப்பிடுமா என்ன! என்று கத்தினார்கள்.

“குதிரையோ மழையின் நனைந்து பட்டினியால்  வாசலில் நிற்கிறது. வேண்டுமென்றால் நீங்களே கொண்டு கொடுத்து பாருங்களேன்! என்றான் தெனாலிராமன்.

உடனே சிலர் பொரித்த மாமிசத்தைக் கையில் எடுத்துக் கொண்டு குதிரையிடம் ஓடினார்கள். மற்றவர்களும் வேடிக்கை பார்க்க பின் தொடர்ந்தனர்.

அப்போது அந்த இடம் காலியாகிவிட்டது. தெனாலிராமன் உடனே கணப்புக்கருகில் சாவகாசமாய் உட்கார்ந்து நன்றாய்ச் குளிர் காய்ந்துக் கொண்டான். அவன் நடுக்கமும் நின்றது. துணியும்  நன்கு உலர்ந்து விட்டது. முன்பே இடம் விட்டிருந்தால் கூட இத்தனை சௌகரியமாக அமைந்திராது! உள்ளுக்குள்ளே சிரித்து கொண்டான் தெனாலிராமன்.

வெகுநேரம் கழித்து வெளியே போனவர்கள் திபுதிபுவென்று உள்ளே வந்தார்கள். “என்னய்யா இது! என்னவோ உளறி எங்களை முட்டாளாக்கி விட்டாய்! உன் குதிரை மாமிசத்தை சாப்பிடாமல் தலையை திருப்பிக் கொண்டது என்றார்கள்.

இதையும் படியுங்கள்:
எஸ்கிமோவர்கள் வாழும் பனிக்கட்டிக் குடில்கள்!
Children's Story: Easy to get!

“உண்மையாகவா!” என்று வெளியே எட்டிப் பார்த்தான் தெனாலிராமன். அப்போது மழை விட்டிருந்தது.

“மழையுந்தான் நின்று விட்டதே! புல் பிடுங்கி போடட்டுமே! என்று அது மாமிசத்தை மறுத்திருக்கிறதாக்கும்!” என்று நமட்டுச் சிரிப்புடன் சொன்னான் தெனாலிராமன்.

அது கேட்ட அரண்மனை பிரதானிகள் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

பிறகு தெனாலிராமன் மலையேறி சென்றான். அங்கு தங்கியிருந்த அரசனைக் கண்டு வணங்கினான். “வா! நீ இங்க இருந்தால் நன்றாயிருக்குமே! என்று இப்போதுதான் எண்ணினேன். எதிரில் வந்து நிற்கிறாய்!” என்றார் அரசர்.

அதன் பிறகு மலையடிவாரத்தில் நடந்த நிகழ்ச்சியை விவரித்தான்  தெனாலிராமன். அது கேட்ட மன்னன் விழுந்து விழுந்து சிரித்தான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com