சாக்லேட் கேக் செய்வது எப்படி?

chocolate cake
chocolate cake

குட்டீஸ்க்கு சாக்லேட் கேக் ரொம்பப் பிடிக்குமே!

ரொம்ப  ஈசி  இதை செய்வது.

ஒரு கப் சக்கரை  ஒரு கப் பால் பவுடர். ஒரு எலுமிச்சை சைஸ் வெண்ணை, 7 சின்ன ஸ்பூனில் கொக்கோ பவுடர்.  அவ்வளோதான்.

அடுப்பில் வாணலி வச்சி  சக்கரையைப் போட்டு கொஞ்சமா தண்ணி விடுங்க... கெட்டிப்பாகு அதாவது தட்டுல ஒரு துளி  ஊற்றினா ஓடாம இருக்கணும். அப்போ  அடுப்பை நிறுத்தி  வாணலி சக்கரைப் பாகுல  வெண்ணை போடுங்க. அது  உருகுவதற்குள் பால் பவுடரையும்  கோக்கோபவுடரையும் போட்டு நல்லாக் கிளறுங்க.    தீ இல்லாத  அடுப்பில்தான்  வாணலி சூட்டில்தான் கலவையைக் கிளறணும்.   5 நிமிஷம்… விளம்பரத்தில் காட்டறமாதிரி சுருண்டு கரண்டில தூக்கிப் பிடிச்சா  ரிப்பன் மாதிரி விழற  பதத்தில்  நெய் தடவின தட்டில் கலவையைக் கொட்டவும். அரைமணியில் ஆறியதும் கத்தியால் சிறு  சதுரங்களாய்  வெட்டவும்… சுவையான  சாக்லேட் கேக்ரெடி!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com