இந்த அதிசயப் பறவை பூமிக்கே வராதாம்!ஆச்சரியமா இருக்கே!

swift bird
swift bird
Published on

வானத்தில் சாப்பிட்டு, வானத்திலேயே தூங்கும் ஒரு அதிசயப் பறவை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 10 மாதங்கள் தொடர்ந்து பறக்கும் இந்தப் பறவை, ஒரு முறைகூட மரத்தில் கூட உட்காராது தெரியுமா?

பொதுவாக பறவைகள் என்றாலே உணவுக்கு, தூங்குவதற்கு என்று கூடு கட்டி வாழும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் எந்த ஒரு வீடும் இல்லாமல் வானத்திலேயே பறக்கும் பறவையை பற்றி கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்.

ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி, 'காமன் ஸ்விஃப்ட்' பறவைகள் பல மாதங்கள் தொடர்ச்சியாக வானத்திலேயே பறக்கக்கூடியவை. இதில் ஒரு வகை 'காமன் ஸ்விஃப்ட்' (common swift bird) பறவை, 10 மாதங்கள் தொடர்ச்சியாக பறக்குமாம். இந்த அதிசயப் பறவைகள் பொதுவாக ஐரோப்பாவில் அதிகமாக காணப்படுகின்றன.

இந்த 'காமன் ஸ்விஃப்ட்' பறவை பார்க்கறதுக்கு ஒரு தும்பி மாதிரி இருக்குமாம். வேகமாக பறப்பதில் அட்டகாசமான திறமை கொண்ட இந்தப் பறவை, எப்படி தூங்கும் என்று பலருக்கும் சந்தேகம் இருக்கும். இந்தப் பறவைகள் மிக உயரத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக கீழே இறங்கும்போது, தூங்கி கொண்டே வரும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அப்போ இதோட உணவு என்னவென்று தானே யோசிக்கிறீர்கள். வானத்தில் பறந்து செல்லும் பூச்சிகள் தான் இதன் உணவாம்.

ஏன் இனப்பெருக்கம் கூட வானத்திலேயே நடக்கும் என்பது பலருக்கும் ஆச்சரியமாக தான் இருக்கும்.

பொதுவாக தரையிலேயே இறங்காத இந்தப் பறவைகள், சில சமயங்களில் மோசமான வானிலை நிலவும்போது மட்டும் தரையில் இறங்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்தப் பறவைகளோட உடலமைப்பு, டார்பிடோ ஏவுகணை தோற்றத்திலும், இறக்கைகள் கூர்மையாவும், நீளமாகவும் இருக்கும். இந்த அமைப்புதான் காற்றில் சிரமம் இல்லாத வகையில் இந்த பறவைகளுக்கு  பறக்க உதவி செய்கிறது.

தொடர்ந்து 10 மாதங்கள் பறக்கும் இந்த அதிசயப் பறவை, கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது. அப்படி மரத்திலோ, தரையிரங்கும் சமயத்தில் குறிப்பிட்ட சில மணி நேரங்கள் மட்டுமே இருக்கும் என்றும் மீண்டும் பறக்க ஆரம்பித்துவிடும் எனவும் கூறுகின்றனர்.

ரொம்பவும் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா குட்டீஸ்? இது போன்ற ஆச்சரியங்கள் இயற்கையில் நிறைய உண்டு! உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com