ஹாரி பாட்டர் ஸ்னீக்கர்கள் பற்றி தெரியுமா?

Harry Potter sneakers
Harry Potter sneakers

ரீபொக் நிறுவனம், ஹாரி பாட்டர் குழுமத்தோடு இணைந்து,   ஹாரி பாட்டர் தொடரால் ஈர்க்கப்பட்டு வடிவமைக்கப்பட்ட ஸ்னீக்கர்கள் மற்றும் ஆடைகள் வரிசையை வருகிற டிசம்பர் 2023 இல் அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ஹாரி பாட்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலக பிரசித்தி பெற்ற ஹாரி பாட்டர் தொடரின் பிரபலமான கதாபாத்திரங்கள், மற்றும், ஹாக்வார்ட்ஸ் மாயாஜால பள்ளியின் நான்கு தனித்துவமான அணிகளின் வடிவமைப்புகளை ஊக்கமாக வைத்து காலணிகள் தயாரிக்கப்படுகின்றன.

ஹாரி பாட்டர்-தீம் ஷூக்களின் வரிசையால் ரசிகர்கள் இப்போது தங்களுக்குப் பிடித்த ஹாக்வார்ட்ஸ் வீட்டை பிரதிநதித்துவப்படுத்த மந்திரவாதி - வகை ஆடைகளை அணியாமல், காலனிகளின் மூலம் கதாபாத்திரங்களை பிரதிபலிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

நான்கு ஸ்னீக்கர் வகைகள்

ஹாரி பாட்டர் ஸ்னீக்கர் தொகுப்பில் ரீபொக் நான்கு வகை ஷூக்களை வெளியிட உள்ளது.

முதல் மாடலாக கிளப் சி 85 வகை, நான்கு ஹாக்வார்ட்ஸ் வீடுகளை பிரதிபலிக்கும் வகையில்,  நான்கு வண்ணங்களில் மாற்றக்கூடிய ஷூ லேஸ்கள் மற்றும் எம்ப்ராய்டரி க்ரெஸ்ட் பேட்ச்களுடன் வருகிறது. இதன் விலை $110 (ரூ. 9150). ஹஃப்பிள் பஃப் (Hufflepuff), ராவன்க்ளா (Ravenclaw), ஸ்லிதரின் (Slytherin), மற்றும் க்ரிஃபிண்டோர்  (Gryffindor) அணிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த வகை காலணிகள் ஹாரி பாட்டர் ரசிகர்களிடையே  நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நான்கு வகை ஷூக்கள்
நான்கு வகை ஷூக்கள்

இரண்டாவதாக இன்ஸ்டாபம்ப் ப்யூரி 95 மாடல் , தொடரின் வில்லன் வால்டர் மார்ட் கதாபாத்திரத்தால்  ஈர்க்கப்பட்டது. இதன் விலை $250  (ரூ. 20,750). டெத் ஈட்டர்ஸ் சின்னம் பொறிக்கப்பட்ட இந்த வகை ஸ்னீக்கர்ஸின் நேர்த்தியான வடிவமைப்பு ரசிகர்களை கவரும் வண்ணம் அமைந்துள்ளது.

தினமும் அணியக்கூடிய ஹாரி பாட்டர் ஸ்னீக்கர்களுக்கு பொருத்தமான மாடல்,மூன்றாவதான    கிளாசிக் லெதர்  மாடல். இதன் விலை $100 (ரூ.8300). மூன்று டெத்லி ஹாலோ சின்னங்களான மாய க்ளோக்,  அதிசக்தி வாய்ந்த மந்திர கோல் மற்றும் இறந்தவரை மீட்க்கும் கல்,  இந்த வகை ஷூக்களில் அச்சிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
ஆவாரை பூத்தால் சாவாரை கண்டதுண்டா?
Harry Potter sneakers

நான்காவது மாடல் தி கிளாசிக் லெதர் ஹெக்சலைட். இதன் விலை $120 (ரூ.9960) . வெள்ளி நிறமும், நீல நிறமும் சேர்ந்து வடிவமைக்கப்பட்ட இந்த ஷூ, இரவு நேரங்களில் ஒளி வீசும் (glow-in-the-dark) தன்மையுடையது. இந்த ஸ்னீக்கர் வகை, ஹாரி பாட்டருக்கு பிடித்த மந்திரமான பட்ரோனஸ் மந்திரத்தை அடிப்படையாக வைத்து வடிவமைக்கப் பட்டுள்ளது.

ரீபொக் நிறுவனம் இந்த ஹாரி பாட்டர் வரிசை வர்த்தக பொருட்களுக்களின் அறிமுகத்திற்கு முன்பாகவே இதே பாணியில் அயர்ன் மேன், ஏலியன், கோஸ்ட்பஸ்டர்ஸ் மற்றும் ஜுராசிக் பார்க் போன்ற பிற திரைப்படங்கள் மற்றும் கதாப்பாத்திரங்களால் ஈர்க்கப்பட்ட ஸ்னீக்கர்களை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரீபொக்கின் ஹாரி பாட்டர் வரிசை டிசம்பர் 1, 2023 அன்று கடைகளிலும் அமேசானிலும் வெளியிடப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com