‘மரியா சிபில்லா மெரியன்’ பற்றித் தெரியுமா?

பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி

* பட்டாம்பூச்சிகள், தேனீக்களை போன்றே வன வளம் காக்க உதவுகின்றன.தேனீக்களும், பட்டாம்பூச்சிகளும் இல்லாவிட்டால், பூ காய் ஆகாது, காய் இன்றி கனி இல்லை, கனியின்றி விதையில்லை, கடைசியில் வனவளமே இல்லை.

* உலகளவில் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வகை வண்ணத்துப் பூச்சிகள் இருப்பதாக விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.உலகில் அண்டார்டிகா கண்டம் தவிர்த்து அனைத்து கண்டங்களிலும் பட்டாம்பூச்சிகள் இருக்கின்றன. நம் நாட்டில், அசாம், மணிப்பூர், மேற்குவங்கம் ஆகிய வடகிழக்கு பகுதிகளில் அதிக பட்டாம்பூச்சி இனங்கள் காணப்படுகின்றன.

* நிறம், உடல் அமைப்பு, அளவு ஆகியவற்றின் அடிப்படையில், வால் வண்ணத்திகள் (Swallowtails), வெண் மஞ்சள் வண்ணத்திகள் (c), தூரிகை கால் வண்ணத்திகள் (Brush footed Butterflies), நீலன் வண்ணத்திகள் (Blues), துள்ளி வண்ணத்திகள் (Skippers) என பட்டாம் பூச்சிகள் 5 குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

* வண்ணத்துப் பூச்சிகளின் வாழ்க்கை முட்டைப் பருவம், இளம் புழு பருவம், கூட்டுப்புழு பருவம், வண்ணத்துப் பூச்சி பருவம் என நான்கு பருவங்களைக் கொண்டது.

* பொதுவாக பட்டாம்பூச்சிகளின் இறகுகள் வெளிர் நிறத்தில் இருக்கும். குட்டி குட்டி வடிவமைப்புகளில் வண்ணம் மாறுபடும். அவைகளின் இறக்கைகள் மிக மெலிதானவை என்பதால் தான் அவற்றால் வேகமாக பறக்க முடிகிறது.

* பட்டாம்பூச்சிகள் தனது கால்களால் ருசியை உணர்கின்றன. மலர்களின் தேன் தான் அதன் உணவு.

* பட்டாம்பூச்சிகளுக்கு சுவாசிக்க நுரையீரல் கிடையாது. அதனால் ஒரு மணி நேரத்தில் 30 மைல்கள் தூரம் பறக்கும் ஆற்றல் உடையவை.

பட்டாம்பூச்சி...
பட்டாம்பூச்சி...

* பட்டாம்பூச்சிகளுக்கு  நான்கு இறக்கைகள் உள்ளன. தனது சிறகை முதல் முறை விரிப்பதற்கு மட்டும் சில மணிநேரங்கள் எடுத்து கொள்ளும். உடலுக்குள் ரத்தம் பாய்வதற்கும் இறக்கை உலர்வதற்கும் தான் இந்த அவகாசம். அதன் பிறகு ஜிவ்வென்று பறந்துவிடும்.

* பட்டாம்பூச்சிகள் சுறுசுறுப்பாக இயங்கும் நேரம் காலை 10முதல் 11 மணி வரை என்பது தெரியுமா? சுற்றுச்சூழலில் 24 டிகிரி வெப்பநிலையில் தான் அவை சுறுசுறுப்பாக இயங்கும். அதேபோல் வெப்ப நிலை உயர உயர அதன் செயல்திறனும் அதிகரிக்கிறது என்பதை ஆய்வில் கண்டறிந்துள்ளனர். கடும் வெப்பத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள சூரிய ஒளியை தடுக்க தன்னுடைய சிறகுகளை ஒரு வித கோணத்தில் வைத்துக் கொண்டு பறக்கும் இந்த பட்டாம்பூச்சிகள் பட்டாம்பூச்சிகள்!

* வண்ணத்துப்பூச்சிகள் மழைக் காலத்திற்கு முன்னரே தன் இருப்பிடங்களை விட்டு வெளியேறி வேறு இடங்களுக்கு சென்று விடும். காரணம் வண்ணத்துப் பூச்சிகளால் மழைநீரை தாக்குப்பிடிக்க முடியாது. அதன் இறக்கை நீரை கிரகிக்காது. எத்தனை தீவிரமான சூரிய ஒளியையும் தாங்கும் வண்ணத்துப்பூச்சி மீது மழை பெய்து விட்டால் அது விரைவில் இறந்துவிடும். இதன் காரணமாக மழை பெய்து கொண்டே இருக்கும்போது ஏதாவது ஒரு செடியின் அடியில் பதுங்கிக்கொள்ளும். பனி காலத்தில் பட்டாம்பூச்சிகள் குகைகளிலும், அடர்ந்த மர இலைகளின் பின் புறத்திலும், வீடுகளிலும் வாழும்.

* பட்டாம்பூச்சிகள் மழை காலத்திற்கு முன்னரே வலசை செல்லும் .அப்போது ஒரு பட்டாம்பூச்சியின் வாழ்வு பெரும்பாலும் ஒருவழிப்பாதையாக முடிந்துவிட, அவற்றின் வாரிசுகள் அதே பாதையில் திரும்பி தங்கள் முன்னோர் புறப்பட்ட இடத்துக்கு வருகின்றன. இவ்வாறு பலநூறு ஆண்டுகளாக தன் உணவு, இனப்பெருக்கம், சீதோஷ்ண நிலை மாற்றத்துக்காக வலசை செல்லும் பயணப்பாதையை தக்கவைத்துக் கொண்டுள்ள பட்டாம்பூச்சிகளின் செயல், இயற்கையின் அற்புத நிகழ்வாக உயிரியலாளர்களால் பார்க்கப்படுகிறது.

* வருடந்தோறும் ஆண்டில் உலகம் முழுவதும் 14.6 கோடி பட்டாம்பூச்சிகள் சராசரியாக இடம் பெயர்ந்து செல்கின்றன.

* மொனாக்கோ, பெயிண்ட் லேடி வகை பட்டாம்பூச்சிகள் நீண்ட தூரம் பறக்கும் ஆற்றல் உடையவை.  புலம்பெயரும் சமயத்தில்  மொனார்க்’ என்கிற வண்ணத்துப் பூச்சி இனங்கள் 5000 கிலோமீட்டர் வரை கூட பறந்து செல்லுமாம்.

மரியா சிபில்லா மெரியன்
மரியா சிபில்லா மெரியன்

* பொதுவாகப் பறவைகள் எந்தப் பூச்சியைப் பார்த்தாலும் சாப்பிட்டுவிடும். ஆனால் பட்டாம்பூச்சிகளை பறவைகள் பெரும்பாலும் வேட்டையாடுவதில்லை.

* மத்திய அமெரிக்காவில் அன்மையில் மிக அரிதான கருப்பு நிற பட்டாம்பூச்சியை கண்டறிந்துள்ளனர். இந்த பட்டாம்பூச்சிக்கு "மரியா சிபில்லா மெரியன்"எனும் 17 ம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண் விஞ்ஞானியின் பெயரை வைத்து அவரை கெளரவபடுத்தினார்கள். இந்த விஞ்ஞானி தான் முதன் முதலாக பட்டாம்பூச்சிகள் பற்றி ஆய்வு செய்து இரண்டு வால்யூம் புத்தகங்கள் எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com