தென்னையின் சிறப்புகள் பற்றித் தெரியுமா குட்டீஸ்..!

Do you know about the benefits of coconut trees..!
Benefits of coconut
Published on

ரங்கள் ஒவ்வொன்றும் போதி மரங்கள் என்று கூறினால் மிகையாகாது. ஒவ்வொரு மரத்திலிருந்தும் பல்வேறு விதமான நன்மைகளை நாம் பெற்றுக் கொள்கிறோம். அதில் தென்னையின் பயன்களை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். அவ்வளவு நன்மைகள் உச்சி முதல் அடிவரை .அதனைப் பற்றிய சிறப்பை இப்பதிவில் காண்போம். 

 ஔவையார் எழுதிய பாட்டில்  நன்றிக்கு இலக்கணமாக "நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி என்று தருங்கொல் என வேண்டா- நின்று 

தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத் தலையாலே தான் தருதலான். 

என்று தென்னையின் நன்றிச் சிறப்பை கூறியுள்ளார். பலா, வாழை, கொய்யா, வேம்பு, தேக்கு என்று பல்வேறு வகையான மரங்களை வளர்த்து பாதுகாக்க  வேண்டும். 

மரங்களை வளர்ப்பதினால் சுத்தமான ஆக்சிஜன் கிடைக்கின்றது. மழை பொழிவு அதிகமாகின்றது. பசுமையான சூழ்நிலைகள் நமக்கு கிடைக்கின்றன. உலகில் உயிர் வாழக்கூடிய ஒவ்வொரு உயிரினமும் மரத்தினால் அதிக நன்மை பெறுகின்றன. ஓரறிவு உடைய உயிரினம் முதல் ஆறறிவு உடைய மனிதர்கள் வரை  சந்தோசமாக வாழ இறைவன் கொடுத்த ஒரு வரப்பிரசாதம் எதுவென்றால் மரமும் மரமடர்ந்த பகுதியான பசுமை நிறைந்த காடுகளும்தான்.

தென்னை மரத்தை எடுத்துக்கொண்டால் அதன் பூ, இளநீர், காய், ஓலை, மட்டை, தேங்காய், ஓடு ஆகிய அனைத்தும் மருத்துவ பயன் உடையதாக இருப்பதுடன் கலைப்பொருட்கள் செய்வதற்கும் அதன் பல்வேறு பகுதிகள் பயன்படுகின்றன. 

அதன் ஓலையில் தோரணம் கட்டுவர். அதன் ஓலையில் ஒளிந்திருக்கும் குச்சிகளை கிழித்து  சேர்த்து வார்கோல் செய்வார்கள். அதன் ஓலையில் காற்றாடி செய்வார்கள். சிறு குழந்தைகள் அவர்களுக்கு பிடித்த கிளுகிளுப்பை, பாம்பு வடிவம், கையில் வாட்ச் போன்று பல்வேறு விதமான கலைப் பொருட்களை செய்ய ஆசைப்படுவர்.

அதன் பாளையில் வேலி கட்டுவார்கள். அதன் பாளையில் ஒரு பகுதியில் பொரியல் செய்து சாப்பிடலாம். மிகவும் ருசியாக இருக்கும். நீரை நீர் குடத்தில், நிறை நெல் நாழியில் அதன் பிரித்த பாளையை வைப்பார்கள் அது நல்ல வரவேற்பு அளித்து  அழகுத் தோற்றத்தை அள்ளித் தரும்.

இதையும் படியுங்கள்:
உலக சிறுவர் கதைகள்: 4 - நிழல் பாவைக் கூத்து உருவான கதை! (சீனச் சிறுவர் கதை)
Do you know about the benefits of coconut trees..!

அதன் தேங்காயை உணவிற்கும், எண்ணெய்க்கும், மாட்டிற்கான புண்ணாக்கிற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதன் பன்னாடையை வடிகட்டியாக பயன்படுத்தலாம். தேங்காய்ப் பால் இதயத்திற்கு நல்ல பலம் தரும். வாய், வயிற்றுப் புண்ணை ஆற்றும். அதன் முழு மரத்தையும் உத்திரமாக பயன்படுத்தலாம். அறுத்து வாரையாகவும் பயன்படுத்தலாம். அதன் தேங்காய் ஓடுகளை அகழ்ப்பை செய்ய பயன்படுத்தலாம். அந்த சிரட்டைகளை தஞ்சாவூர் பொம்மை செய்ய பயன்படுத்துவர். என்ன குட்டீஸ் இனி தஞ்சாவூரு தலையாட்டி பொம்மையை பார்த்தால் அது சிரட்டையிலிருந்து செய்தது என்று புரிந்து கொள்வீர்கள் அல்லவா? இளநீர் எல்லா காலத்திற்கும் ஏற்புடையதாக நாம் பருகுவதற்கு சிறந்த ஊட்டச்சத்து நீராக செயல்படும். இப்படி தென்னையின் பயன்களை கூறிக் கொண்டே போகலாம். ஆதலால் வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம். அது எந்த மரமாக இருந்தாலும் நல்லதுதான். எல்லா மரத்தையும் வளர்க்க முடியாவிட்டாலும் ஒரு தென்னையையாவது வளர்த்தால் சிறந்த பயனை அடையலாம். 

என்ன குட்டீஸ் நீங்களும் இதனை படித்து தெரிந்து கொண்டு அதன்படி மரம் வளர்க்க ஆரம்பித்து விட்டீர்கள்தானே.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com