இந்த உயிரினங்கள் பற்றித் தெரியுமா உங்களுக்கு?

Animals...
Animals...

பெரிதும் அறியப்படாத சில இந்திய உயிரினங்களை பற்றி இப்பதிவில் பார்ப்போம். 

1. ஆசிய காட்டுக் கழுதை

ஆசிய காட்டுக் கழுதை
ஆசிய காட்டுக் கழுதை

ழுப்பு நிறத்தில் கம்பீரமாக குஜராத்தின் பாலை வனங்களில் ஓடியாடும் இந்த காட்டு கழுதை வீட்டு விலங்குகளான கழுதைகளை விட அளவில் பெரியவை. முன்பு மேற்கு இந்தியாவில் தொடங்கி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் வரை இருந்த காட்டு கழுதைகள் இப்போது ரான் ஆஃப் கட்ச் உப்பு பாலைவனத்தில் மட்டுமே வாழ்கின்றது. வேட்டையாடுதல் ஒட்டுண்ணி நோய்கள் போன்றவற்றால் முன்பு வேகமாக அழிந்தது. சமீப காலமாக இவற்றின் எண்ணிக்கை ஓரளவு அதிகரித்து வருகிறது.

2. ஆவுளியா

ஆவுளியா
ஆவுளியா

டற்பசு இனத்தைச் சேர்ந்த ஆவுளியா இந்தியாவில் கட்ச் வளைகுடா, மன்னார் வளைகுடா, அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகிய இடங்களில் காணப்படுகின்றது. இந்த கடல் பாலூட்டி வகையைச் சேர்ந்த ஆவுளியா மன்னார் வளைகுடாவில் ஓரளவுக்கு உள்ளது. ஆனால் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் மாநில விலங்கான இதன் எண்ணிக்கை இங்கு வேகமாக குறைந்து வருகின்றது. இதனை கடல் கன்னி, கடல் பசு, கடல் ஒட்டகம் என பல பெயர்களில் அழைக்கிறார்கள்.

3. கொம்புள்ள கிளி

கொம்புள்ள கிளி
கொம்புள்ள கிளி

கொம்புள்ள கிளிகள் இரண்டு கருப்பு இறகுகள் தலையிலிருந்து நீண்டு சிவப்பு முனைகளைக் கொண்டிருப்பதால் அவை கொம்புகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த வகை கொம்புள்ள கிளிகள் காட்டு பூனைகளாலும், கருப்பு எலிகளாலும், மரம் வெட்டுவதாலும் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகி அழிந்து வருகின்றன. இறகு நோய் என்பது கடுமையான ஒரு வைரஸ் வகை நோய்.இந்த இறகு நோய் பரவுவதும் இந்த கொம்புள்ள கிளிகள் அழிந்து வருவதற்கு மற்றொரு காரணமாகும்.

4. கானமயில்

கானமயில்
கானமயில்

மூன்றடி வரை வளரக்கூடிய பறவை இது. இந்தியாவின் தேசிய பறவையாக இதுதான் இருந்திருக்க வேண்டும் என்று பறவையியலாளர் சலீம் அலி அவர்கள் வாதிட்டிருக்கிறார். பார்ப்பதற்கு கம்பீரமாக இருக்கும் இந்த பறவைகள் அழியாமல் இருக்க கானமயில் பாதுகாப்பு திட்டம் 2013இல் தொடங்கப்பட்டது. நெருப்புக்கோழி களைப் போல தடித்த கால்களோடு இருக்கும் பறவை இது. உலகில் பறக்கக்கூடிய பறவைகளிலேயே மிகவும் எடை மிகுந்த பறவையாகும். ஒரு மீட்டர் உயரம் உள்ள இவை சுமார் 15 கிலோ வரை வளரக்கூடியதாகும்.

5. மீன் பிடிக்கும் பூனை

மீன் பிடிக்கும் பூனை
மீன் பிடிக்கும் பூனை

வை வீட்டு பூனைகளை விட இரண்டு மடங்கு பெரிதாக இருக்கும். 15 கிலோ வரை வளரக்கூடியது. நீருக்குள் டைவ் அடித்து மீன்களைப் பிடிக்கும். சதுப்பு நிலக்காடுகளில் வசிக்கும் இவை மேற்கு வங்கத்தின் மாநில விலங்காகும்.

6. கரும்வெருகு (Nilgiri Marten)

கரும்வெருகு
கரும்வெருகு

ந்தியாவில் காணப்படும் இரண்டு வெருகு இனங்களில் இதுவும் ஒன்று. மேற்கு தொடர்ச்சி மலைகளிலும் நீலகிரியின் குன்றுகளிலும் வசிக்கும் இவை பாலூட்டி இனத்தைச் சேர்ந்தது. பகலில் வேட்டையாடும் இவை மரத்தை வாழிடமாக கொண்டிருந்தாலும் அவ்வப்போது தரைக்கு வருகிறது. சிறு பறவைகள், பூச்சிகள் போன்றவற்றை உணவாக உட்கொள்கிறது.

7. நார்கொண்டம் இருவாச்சி (Hornbill)

நார்கொண்டம் இருவாச்சி
நார்கொண்டம் இருவாச்சி

ஹார்ன்பில் என்பது ஒரு வகையான மரம். இந்த மரத்தில் தான் இப்பறவைகள் கூடு கட்டுகிறது. அதனால் இப்பறவைக்கு ஹார்ன்பில் என பெயர் சூட்டி உள்ளனர். அந்தமான் தீவுகளில் மட்டுமே காணப்படும் பறவை இது. உலகில் வேறு எங்கிலும் காண முடியாது. ஆசிய இருவாட்சிகளிலேயே மிகச் சிறிய வாழ்விடத்தைக் கொண்ட பறவை இனம். இவை தங்களுடைய தடிமனான மூக்குகளால் அத்திப் பழங்களை பறித்து சாப்பிடும். நார்கொண்டம் என்பது ஒரு ஆளில்லா தீவு.

ஆழ்கடலிலும், அடர்ந்த காடுகளிலும் இன்னும் பல விலங்குகள் அதிகம் கண்டறியப்படாமல் இருக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com