
ஜனவரி: ஜனுஸ் என்ற ரோமானிய சிறு தேவதையின் பெயரிலிருந்து உருவானது. ஜனுஸ் தெய்வம் இரண்டு தலைகளைக் கொண்டது. ஒரு தலை குனிந்து கடந்த ஆண்டை பார்ப்பதாகவும், ஒரு தலை மேலே பார்த்து புதிய ஆண்டை வரவேற்பதாகவும் கருதப்படுகிறது.
பிப்ரவரி: பீப்ரோ என்ற ரோமானிய தேவதையின் பெயரிலிருந்து உருவானது. பீப்ரோ என்றால் தூய்மை என்று பொருள்.
மார்ச்: ரோமானியர்களின் யுத்த தெய்வமாகிய மார்ஸ் என்ற பெயரிலிருந்து இம்மாதம் உருவானது. மார்ஸ் என்ற சொல்லுக்கு நீண்ட என்று பொருள் ஆரம்பத்தில் ரோமானிய காலண்டரில் மார்ச் மாதம்தான் ஆண்டின் முதல் மாதமாக இருந்தது.
ஏப்ரல்: புதியன வருவதற்காக திறக்கப்படும் என்ற பொருளைத் தரும். ஏப்ரிலிஸ் என்ற இலத்தீன் வார்த்தையில் இருந்து ஏப்ரல் உருவானது.
மே: ரோமானிய பெண் கடவுளான மர்யாவை கவுரவிக்கும் வகையில் மே என்ற பெயர் சூட்டப்பட்டது.
ஜூன்: ரோமானிய இளமை தெய்வமாகிய மெர்குரிக்கு ஜூனியஸ் என்ற பெயர் உண்டு அதிலிருந்தே ஜூன் உருவானது.
ஜூலை: ரோமானிய பேரரசர் ஜூலியஸ் சீசரின் நினைவாக பெயர் பெற்றது.
ஆகஸ்ட்: ரோமின் இரண்டாம் பேரரசர் அகஸ்டஸ் சீசரின் நினைவாக இப்பெயர் சூட்டப்பட்டது.
செப்டம்பர்: ரோமானிய மொழியில் செப்டம் என்றால் ஏழு என்று பொருள். ஆரம்பத்தில் மார்ச் மாதமே ஆண்டின் முதல் மாதமாக இருந்தபோது ஏழாவதாக வரும் மாதம் செப்டம்பர் என்று பெயர் பெற்றது.
அக்டோபர்: ஏழாவதாக வரும் செப்டம்பர் போலவே எட்டாவது மாதமாகிய அக்டோபர் என பெயர் பெற்றது.
நவம்பர்: நவம் என்றால் ரோமானிய சொல்லிற்கு ஒன்பது என்று பொருள்.
டிசம்பர்: பத்து என பொருள்படும் டிசம் என்ற ரோமானிய சொல்லிலிருந்து வந்தது.