ஒட்டகச்சிவிங்கி...
ஒட்டகச்சிவிங்கி...

ஒட்டகச்சிவிங்கி – ஆச்சரியமான 13 தகவல்கள்!

Published on

*ஒட்டகச்சிவிங்கி ஆங்கிலத்தில் Girraffe என்று அழைக்கப்படுகின்றது. இந்த அரேபிய மொழிச் சொல்லுக்கு 'மிகவும் வேகமாக நடக்கும் விலங்கு' என்று அர்த்தம்.

*நிலத்தில் வாழும் பாலூட்டிகளில் மிக உயரமான பாலூட்டி ஒட்டகச்சிவிங்கி.  

*ஒட்டகச்சிவிங்கியானது பார்ப்பதற்கு ஒல்லியாக இருந்தாலும் மிகவும் பலம் வாய்ந்த ஒரு விலங்காகும். ஒட்டகச்சிவிங்கி கோபத்தில் ஒரு உதை உதைத்தால் சிங்கம் கூட இறந்து போகும். 

*ஒட்டகச்சிவிங்கிகள் அமைதியை விரும்பும் குணம் உடையவை.  ஒட்டகச்சிவிங்கிகள் பொதுவாக சத்தம் போடுவதில்லை.   

*ஒட்டகச்சிவிங்கியானது பிறக்கும் போது இரண்டு மீட்டர் உயரம் அளவுள்ளதாக இருக்கிறது. இது பின்னர் படிப்படியாக வளர்ந்து அதிகபட்சமாக சுமார் 19 அடி உயரம் வரைக்கும் வளரும்.  ஆண் ஒட்டகசிவிங்கியானது பெண் ஒட்டகச்சிவிங்கியைவிட சற்று அதிக உயரமாக வளரும்.   பெண் ஒட்டகச்சிவிங்கிகள் 15 அடி உயரம் வரை வளரும்.

*ஒட்டகச்சிவிங்கியின் நாக்கு சுமார் 27 அங்குல நீளமுடையதாக அமைந்துள்ளது.  இதன் நாக்கானது கறுப்பு நிறத்தில் காணப்படுகிறது.  ஒட்டகச்சிவிங்கியானது தன்னுடைய நீளமான நாக்கால் தன்னுடைய காதுகளைச் சுத்தப்படுத்திக் கொள்ளும்.   

*ஒட்டகச்சிவிங்கி தண்ணிரைக் குடிக்க வேண்டும் என்றால் அது தன்னுடைய  முன்னங்கால்கள் இரண்டையும் அகலமாக வைத்துக் கொண்டு பின்னரே தன் தலையைக் கீழே இறக்கித் தண்ணீரைக் குடிக்க முடியும். 

*ஒட்டகச்சிவிங்கிகளின் கழுத்துப் பகுதியில் மற்ற எந்த உயிரினங்களுக்கும் இல்லாத அளவிற்கு சிறப்பான வால்வுகள் அமைந்துள்ளன. ஒட்டகச்சிவிங்கியானது தண்ணீரைக் குடிக்கத் தலையை கீழே இறக்கும் போது, இந்த வால்வுகள் தானாகவே மூடிக் கொள்ளும் விதத்தில் அமைந்துள்ளன. இதனால் தலைக்கும் மூளைக்கும் வேகமாக இரத்தம் அனுப்பப்படுவது தவிர்க்கப்படும். இது தலையை மீண்டும் பழைய நிலைக்கு நிமிர்த்திய பின்னர் இந்த வால்வுகள் தானாவே திறந்து கொள்ளும். பிறகு தலைக்கும் மூளைக்கும் இரத்தம் அனுப்பப்படும். இந்த வால்வானது சரியாக வேலை செய்யவில்லை என்றால் ஒட்டகச்சிவிங்கியால் சரியாகத் தண்ணிரைக் குடிக்க முடியாமல் போய்விடும்.

*ஓட்டகச்சிவிங்கிகளின் கழுத்துப் பகுதியில் அமைந்துள்ள இரத்தக்குழாய்கள் வழக்கமான இரத்தக்குழாய்களைப்போல இல்லாமல் இரப்பர் போல அமைந்துள்ளன. இரப்பர் போன்ற இரத்தக்குழாய்கள் கழுத்தை மேலே தூக்கவும் கீழே சுலபமாக இறக்கவும் பயன்படுகின்றன. 

*ஒட்டகச்சிவிங்கியின் இதயம் சற்று பெரியதாகவே அமைந்துள்ளது. இந்தப் பெரிய இதயமானது ஒரு நிமிடத்தில் சுமார் 75 லிட்டர் இரத்தத்தை உடல் முழுக்க பம்ப் செய்து சுற்றிவரச் செய்கிறது. ஒட்டகச்சிவிங்கி சாப்பிட்டு முடித்த பின்னரோ அல்லது தண்ணீர் குடித்து முடித்த பின்னரோ இதயமானது இரண்டு மடங்கு வேகத்தில் செயல்பட்டு இரத்தத்தை தலைக்கு அனுப்பும் வேலையைச் செய்கிறது.  இல்லை என்றால் இரத்தமானது தலைக்குச் செல்லாமல் ஒட்டகச்சிவிங்கியானது இறக்க நேரிடும். 

இதையும் படியுங்கள்:
Give Respect, Take Respect!
ஒட்டகச்சிவிங்கி...

*அனைத்து முதுகெலும்பு உள்ள உயிரினங்களுக்கும் இருப்பதைப் போல ஒட்டகச்சிவிங்கிகளுக்கு ஏழு கழுத்து எலும்புகள் அமைந்துள்ளன.  ஆனால் ஒட்டகச் சிவிங்கிகளுக்கு இந்தக் கழுத்தெலும்புகள் மற்ற உயிரினங்களைக் காட்டிலும் சற்று அதிக  நீளமாக அமைந்துள்ளன.  

*ஒட்டகச்சிவிங்கிகளின் கழுத்தானது மிகவும் நீளமாக இருப்பதன் காரணமாக அதன் தலையானது உடம்பிலிருந்து மிகவும் தள்ளி அமைந்துள்ளது.   

*ஒட்டகச்சிவிங்கிக்கு வயது ஆக ஆக அதன் உடலில் காணப்படும் வண்ணத் திட்டுக்கள் மிகவும் அடர்த்தியான நிறமாக மாறத்தொடங்கும். இதை வைத்து ஒட்டகச்சிவிங்கிகளின் வயதை நாம் அறிந்து கொள்ளலாம்.

logo
Kalki Online
kalkionline.com