வளர்ப்பவர்களை அடையாளம் கண்டு கொள்ளும் தங்க மீன்கள்! சுவாரஸ்ய தகவல்கள்!

Goldfish that recognize breeders!
golden fishImage credit - pixabay
Published on
gokulam strip
gokulam strip

தங்கம் போல் தனி சிறப்பு கொண்டவை, தங்க மீன்கள். அவற்றைப் பற்றி சில தகவல்கள்.

* தங்க வர்ணத்தில் ஜொலிப்பதால் இதற்கு தங்க மீன் என்று பெயர்.

* இவற்றின் பூர்வீகம் சீனா ஆகும்.

* கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இவை இருந்து வருகின்றன.

* தங்க மீன்களில் பல வகைகளும், குறிப்பாக வண்ணங்களும் உள்ளன.

* வீடுகளில் விரும்பி வளர்க்கப்படும் இந்த தங்க மீன்கள் காணும் பொழுது மகிழ்ச்சி உண்டாக்கும்.

* பெரிய ஹோட்டல்கள், நிறுவனங்களில் பெரிய கண்ணாடி தொட்டிகளில் அப்படியும், இப்படியும் நீந்தி சென்று பாரப்பவர்களை பரவசம் அடைய செய்கின்றன, தங்க மீன்கள்.

* தங்க மீன்கள் துள்ளி குதித்து மிதப்பதை காண்பது, மன அழுத்தம் குறைய, போக்க உதவுவதாக கூறுகிறார்கள்.

* இவை சராசரியாக 10 - 15 வருடங்கள் உயிர் வாழக் கூடியவை.

* சரியான பராமரிப்பில் அதற்கும் மேல் வாழ முடியும் என்கின்றனர்.

* வெள்ளை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு, பழுப்பு, கருப்பு ஆகிய கலவைகளிலும் தங்க மீன் வகைகள் உள்ளன.

* வால்கள், கண்கள் ஆகியவை இவற்றை வேறு படுத்துவத்துடன் பார்க்க அழகாகவும் இருக்கும். உதாரணம் சீனக் கண், வால்மீன், விசிறி வால் போன்றவை.

* 2008 ல் நெதர்லாந்தில் 19 அங்குலம் மிகப் பெரிய தங்க மீன் இருந்ததாக பிபிசி குறிப்பு அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
சாதாரண சென்னையை மாநகரமாக மாற்றியவர் யார் தெரியுமா?
Goldfish that recognize breeders!

* தங்க மீன்கள் சிறப்பான பார்வை திறன் கொண்டவை.

* சில வண்ணங்களை பிரித்து பார்க்கும் திறனும் கொண்டவை.

* வளர்ப்பவர்கள் பழகிவிட்டால், அவர்களை அடையாளம் கண்டுக் கொள்ளும் குணம் உடையவை.

* பல வகை நம்பிகைகளின் அடிப்படையிலும் தங்க மீன்கள் வளர்க்கப் படுகின்றன.

* பாசிடிவ் அலை கிட்ட, ஒரு பெரிய தொட்டியில் 9 அல்லது 5 தங்க மீன்கள் வளர்ப்பவர்களும் உள்ளனர்.

* பிற ஹாபிக்களைப்போல தங்க மீன்களை வாங்கி பெரிய கண்ணாடி தொட்டிகளில் வளர்த்து பராமரிப்பதற்கு செலவு ஆகும்.

* உடன் பொறுமையும், பராமரிக்க தேவையான திறனும் வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com