உடலுக்கு நன்மை அளிக்கும் ஆரோக்கியமான பாரம்பரிய விளையாட்டுகள்!

பாரம்பரிய விளையாட்டுகள்...
பாரம்பரிய விளையாட்டுகள்...
Published on
gokulam strip
gokulam strip

பாரம்பரிய விளையாட்டுகளால் குழந்தைகளுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம். மூளைத்திறன், கவனத்திறன், பார்வைத்திறன், வர்ம புள்ளிகள் தூண்டபடுவது, அக்கு புள்ளிகள் இயக்கம் பெறுவது என ஒவ்வொரு விளையாட்டும் பல்வேறு மருத்துவ பலன்களைத் தருகின்றன. அவ்வாறு ஆரோக்கியமும், மகிழ்ச்சியையும் தரும் விளையாட்டுகளில் சிலவற்றை பார்க்கலாம்.

பல்லாங்குழி: 12 குழிகளில் புளியங்கொட்டை போட்டு வரிசையாக எடுத்து விளையாடும் விளையாட்டு. எண்களை சொல்லி கொண்டே விளையாடுவதால் சிந்தனைத்திறன் மேலோங்கும், கை விரல்களுக்கு நிறைய வேலை கிடைக்கும். குழந்தைகளின் மோட்டார் ஸ்கில்ஸ் நன்கு செயல்பட உதவும்.

மியூசிக் சேர்: பாடலை ஒலிக்க விட்டு சுற்றி வைத்திருக்கும் சேர்களை சுற்றி ஓடும் விளையாட்டு. குழந்தைகளுக்கு உடலுழைப்பு கிடைக்கும். ஓடுவது, உட்காருவது, கவனிப்பது போன்றவை இந்த விளையாட்டில் ஏராளம். கால் தசைகளுக்கு வலு கிடைக்கும்.

பச்சைக் குதிரை: ஒரு நபரை கீழே குனிய வைத்து மற்றொருவர் தனது இரு கைகளையும் குனிந்தவரின் முதுகில் வைத்து தாண்டி ஆடும் ஆட்டம்தான். இதனால் கை, கால்களுக்கு மிகுந்த பலம் கிடைக்கும். வளைவுத்தன்மை கிடைக்கிறது. பலமுடன் மற்றொருவரை தாங்கும் வாய்ப்பு கிடைக்கிறது. பலம் தரும் விளையாட்டு.

பாண்டி ஆட்டம்: செவ்வகம் வரைந்து அதில் கட்டங்கள்  வரைந்து ஒரு காலை மடக்கி இன்னொரு காலால் நொண்டி அடிப்பதுபோல் நடந்து கொண்டு விளையாடும் ஆட்டம் கால்களின் தசை நரம்புகளுக்கு சீரான இயக்கம் கிடைக்கிறது. உடல் சமநிலை சீராகிறது.

கில்லியாட்டம்: ஒரு சின்ன கட்டையை தரையில் வைத்து அந்த கட்டையை பெரிதான கட்டையைக் கொண்டு அடித்து எறிந்து  விளையாடுவது கில்லி விளையாட்டாகும். உடல் இயக்கங்கள் சீராக நடைபெறும்.

கும்மி ஆட்டம்; முளைவிட்ட தானியங்களை ஒரு மண் பாண்டத்தில் போட்டு நன்கு வளர்ந்து இருக்கும். அதனை முளைப்பாரி என்று கூறுவர். இதை நடுவில் வைத்து பெண்கள் தங்கள் இரண்டு கைகளையும் தட்டி கும்மி பாட்டு பாடுவர். இதனால் கைகளுக்கு ரத்த ஓட்டம் சீராக கிடைக்கிறது

பம்பரம்: ஒரு வட்டத்தில் 3 பம்பரங்கள் வைக்கப்படும். வட்டத்துக்குள் உள்ள 3 பம்பரத்தை தன் பம்பரத்தால் சுற்றி விளையாடி பம்பரத்தை வெளியே வர செய்ய வேண்டும். பார்வைத் திறன், கவனத்திறன், மேலோங்கும்

கோலிக்குண்டு:  கோலியை ஒரு முனையில் ஒருவர் வைத்துக் கொள்ள மற்றொருவர் தன்னுடைய கோலிகுண்டை தனது ஆட்காட்டி விரலைக் கொண்டு குறிப் பார்த்து அடிக்க வேண்டும். குழந்தைகளின்  பார்வைத்திறன் மேலோங்கும். கவனிப்பு திறன் அதிகரிக்கும். கைகளில் உள்ள வர்ம புள்ளிகள் தூண்டப்படும்.

கோலிக்குண்டு...
கோலிக்குண்டு...

பரமபதம்: ஏணி, பாம்பு என இரண்டு படங்கள் வைத்து 100 எண்ணிக்கை கொண்ட கட்டங்கள் இருக்கும். தாயக் கட்டையில் விழும் எண்களை வைத்து காயை நகர்த்த வேண்டும். இந்த விளையாட்டால் கணிப்பு திறன், கணித திறன் கிடைக்கும். வெற்றி, தோல்வி, ஏற்றம், இறக்கம் பற்றிய அறிவு கிடைக்கும்.

சுட்டி பிடித்தல்: வீடுகளில் திண்ணைகளில், அல்லது சற்று மேடான பகுதிகளில் சிறிய உருளை வடிவ கற்களை வைத்து ஆடுவர். இது மகளிர் விளையாட்டுகளில் ஒரு வகை ஆகும். பார்வைத்திறன், கவனத்திறன் மேம்படும். கை தசைகள் வலுவடையும்

பொன்னாலான கழங்கினை வைத்துத் திண்ணைகளில் ஆடிய செய்தி புறநானூற்றிலும், பெரும் பாணாற்றுப் படையிலும் சொல்லப்படுகிறது.

மறந்து இருக்கும் இந்த விளையாட்டுகளையும் நம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து அதன் பலனை பெறச் செய்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com