தேர்வினில் பாஸ் செய்வது எப்படி? தேவை...முயற்சியா? பயிற்சியா?

EXAM
EXAM

ஒவ்வொரு மனிதனும் பிறக்கும்போதே தனித் திறமையுடனும், அறிவுடனும்தான் பிறக்கிறான். சரியான அறிவை, சரியான நேரத்தில், சரியான இடத்தில் பயன்படுத்துபவர்களே வெற்றி பெறுகிறார்கள். மாணவர்களில் பாடங்களில் மட்டும் கவனம் செலுத்துபவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுப்பது இயல்பான ஒன்றே.

ஒரு மாணவன் நல்ல மதிப்பெண் பெறுவது என்பது  அவனுடைய முயற்சியில்தான் இருக்கிறது. நல்ல மதிப்பெண் பெற வேண்டுமென்றால், வீண் விளையாட்டுக்கள், பொழுது போக்குகள் போன்றவற்றை தவிர்த்து படிப்பில் முழுக் கவனம் செலுத்த வேண்டும்.

பொறாமை இல்லாமல் பிறருக்கு கற்றுக் கொடுப்பதன் மூலமும் மாணவனின் அறிவும் வளர்ச்சி அடையும்.

மாணவர்கள் படிப்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.  தன்னிடமுள்ள தவறுகளை  திருத்திக் கொள்ள வேண்டும்.  

பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உரிய கண்ணியத்தையும், மரியாதையும் கொடுக்க வேண்டும். எவனுக்கு ஒழுக்கம் இல்லையோ அவனுக்கு கல்வி வராது.

படித்ததை நடைமுறைப்படுத்தி பார்ப்பது ஒரு மனிதனின் படிப்பை முழுமையாக்கும்.

சோம்பேறித்தனமாக இருப்பது தேவையில்லாத தீய விளைவுகளை உருவாக்கும்.

கடின முயற்சியுடன் பயிற்சியையும் மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும். 

படிப்பதற்கு  மிக உகந்த நேரம் விடியற்காலைதான்.

ஒவ்வொரு பாடத்தையும் படிக்கத் துவங்குமுன் பத்து நிமிடங்களாவது இடைவெளி விட்டுக் கொள்ள வேண்டும்.

மனதை ஒருமுகப்படுத்திப் படிப்பது மிகவும் அவசியம்.

படிக்கும் இடம் முறையான காற்றோட்டம் மற்றும் சரியான அளவு வெளிச்சத்துடன் அமைதியாகவும் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

படிப்பில் வாசித்தலும் எழுதுதலும் முக்கியமானவை. பாடத்தை படிக்கும்போதே முக்கிய குறிப்புகளையும், வார்த்தைகளையும் பென்சிலால் குறித்துக்கொள்ள வேண்டும். 

பாடங்களை மாற்றி மாற்றி படிக்க வேண்டும். உற்சாகமாக இருக்கும்போது கடினமானபாடங்களையும்,  சோர்வாக இருக்கும்போது இலகுவான பாடங்களையும்  படிக்க வேண்டும்.

வினா வங்கியில் கேட்டுள்ள வினாக்களுக்கு விடைகளை எழுதிப் பழக வேண்டும்.

ஒரு பாடத்தின் மொத்த கருத்தையும் மாணவர்கள் மன வரைபடம் மூலம் தம் மனதில் இருத்திக் கொள்ள பழக வேண்டும்.

வகுப்புத் தேர்வுகளில் திருத்தி தரப்படும் விடைத்தாள்களை  பாடப்புத்தகத்துடன் ஒப்பிட்டு  தவறுகளை  திருத்திக் கொள்ள வேண்டும்.

வகுப்புகளில் நடைபெறும் தேர்வுகள் சிறிய சிறிய பகுதிகளாக நடத்தப்படுவதால்,  இவற்றில் எளிதில் முழு மதிப்பெண் பெறலாம். இது அவர்களுடைய தன்னம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும்.

தேர்வுக்கு முதல் நாள் இரவு நன்றாகத் தூங்க வேண்டும். அதிகாலையில் எழுந்து, படித்த பாடங்களை ஒரு முறை திருப்பிப் பார்த்துக் கொள்ள வேண்டும். 

இதையும் படியுங்கள்:
ஆரோக்கியம் நம் கையில்...
EXAM

தேர்வறைக்கு அரை மணிநேரத்திற்கு  முன்னதாகவே செல்ல வேண்டும்.

வழக்கமாக எழுதிப் பழகிய பொருட்களை கொண்டு சென்று தேர்வில் எழுதுவது நேரத்தை மிச்சப்படுத்தும்.

தேர்வுக் கேள்வித்தாளில் கேள்வியை முழுமையாக வாசித்து தன்னம்பிக்கையோடு பதிலளிக்க வேண்டும்.   

உரிய வினா எண்ணை சரியாக எழுதிய பின்னரே அந்த வினாவிற்குரிய விடையை எழுதத் தொடங்க வேண்டும்.

தேர்வு எழுதும்போது வேறு சிந்தனைக்கு இடமளிக்கக்காமல் தெளிவாகவும், அழகாகவும் எழுத வேண்டும்.

தேர்வுத் தாளில் பக்கக் கோடு போடுதல், வார்த்தைக்கு வார்த்தை இடமிடுதல், கூடுதல் விடைத் தாள்களில் பக்கமிடுதல்  ஆகியவை அவசியம்.

முக்கியமான குறிப்புகளை தேர்வுத் தாளில் அடிக்கோடிடுவதும், சரியான நேரப் பயன்பாடும் நல்ல மதிப்பெண்களை பெற உதவும்.  

அந்தந்த தேர்வுகள் முடிவு பெற்றவுடன் அந்தத் தேர்வை பற்றிய சிந்தனை அவர்களுடைய அடுத்த தேர்வில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே அதை தவிர்க்க வேண்டும்.

முறையான உணவுப் பழக்கம் மாணவரது உடல் ஆரோக்கியத்திற்கு உதவி செய்யும். 

மாணவர்கள் தங்களது உடம்பை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

தோற்றத்தை அழகாக அமைத்திடும் உடையை அழகாகவும், தூய்மையாகவும் அணியவேண்டும். அதனால் மனம் ஒருமைப்பட்டு படிப்பதற்கு தூண்டுகோலாக இருக்கும். 

கற்றலில்  முறையான தொழில் நுட்பங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த திறமைகளை வளர்த்துக் கொண்டால்  எந்த மாணவனும் நல்ல மதிப்பெண் எடுப்பது சாத்தியமே.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com