மற்றவர்களுடன் நம் குழந்தைகளை ஒப்பிடுவதும், போட்டி போடச் செய்வதும் சரியா?

விவேகானந்தர்...
விவேகானந்தர்...
Published on

ரு சிறுவன் குதிரைவண்டி மூலமாக தினமும் பள்ளிக்கு செல்வான். அந்தக் குதிரை வண்டி மீதும், குதிரை ஒட்டி மீதும் மிகுந்த அன்பு.

ஒரு நாள் வகுப்பறையில் ஆசிரியர்  ஒவ்வொரு மாணவர்களிடமும் 'நீங்கள் பெரியவன் ஆனதும் என்னவாக ஆசைப்படுவீர்கள்? என்று கேள்வி கேட்டார்.

மாணவர்கள் போலீஸ், வக்கீல், டாக்டர் என பல பதில்களை கூறினார்கள்.

குதிரை வண்டி மீது தீரா காதல் கொண்ட சிறுவன் "நான் குதிரை ஓட்டியாக  ஆகவேண்டும்" என்று கூறியதும் வகுப்பில் மாணவர்கள் அனைவரும் சிரித்தனர்.

சிறுவனிடம், ஆசிரியர் "எப்போதும் உயர்ந்த லட்சியங்களை சொல்ல வேண்டும். குதிரை வண்டிக்காரனாக மாறுவதெல்லாம் லட்சியமாகாது" என அறிவுரை கூறினார்.

அந்த சிவனுக்கு ஒரே குழப்பம்.ஏன் இது உயர்ந்த லட்சியமாக இல்லை, என வீட்டுக்குச் சென்றதும் தாயிடம் கேட்டான்.

உடனே தாய் 'நீ ஏன் குதிரை வண்டிக்காரனாக ஆசைப்படுகிறாய்?" என்றாள்.

"அம்மா நான் தினமும் பள்ளிக்குச் செல்லும்போது குதிரை வண்டிக்காரர் குதிரை ஓட்டுவது என் மனதுக்கு பிடித்தமானதாக இருக்கும்.

மனதுக்கு பிடித்ததை செய்வதில் ஆர்வம் உள்ளதால் ஆசிரியர் கேட்டதும் இதைச் சொன்னேன் என்று கூறினான் சிறுவன்.

உடனே தாய், கோபப்படாமல் பூஜை  அறைக்குள் சென்று கிருஷ்ணர், அர்ஜுனுக்குத் தேர் ஒட்டும் மகாபாரத படத்தை எடுத்து வந்து, மகனிடம் காட்டி மகனே, நீ குதிரை வண்டிக்கரான் ஆவேன் என்பதில் தவறில்லை.

ஆனால் மகாபாரதத்தில் அர்ஜுனனுக்கு தேர் ஓட்டிய கிருஷ்ணனைப் போன்று மிகச்சிறந்த சாரதியாக நீ திகழ வேண்டும்" என்றாள்.

அந்த சிறுவன்தான்  இந்தியாவின் தலை சிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவரும், வேதாந்த தத்துவங்களையும், பல சொற்பொழிவுகளையும் நிகழ்த்தியவரும் இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான மக்களை ஆன்மிகப் பாதையில் வழி நடத்திய சாரதியுமான சுவாமி விவேகானந்தர்.

இதையும் படியுங்கள்:
கணினி பயன்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த உள்ள AI!
விவேகானந்தர்...

அவரின் தாய் புவனேஸ்வரி தேவியின் நேர்மறையான உயர்ந்த எண்ணமும், பிற குழந்தைகளுடன் , ஒப்பிட்டு கண்டிக்காமலும், பிறரது கிண்டலை நியாயப்படுத்தி யிருந்தாலும் இது மாதிரி விவேகானந்தர் எனும் ஞானி கிடைத்திருக்க மாட்டார்.

குழந்தையின் நன்மை, எதிர்காலம் சிறப்பாக அமையவேண்டுமே தவிர மற்ற குழந்தைகளோடு ஒப்பிடுவதும், போட்டி போடவும் செய்யாதீர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com