கையெழுத்து அழகாக இல்லையா? இதை ட்ரை பண்ணுங்க!

Handwriting
Handwriting
Published on

ஹாய் குட்டீஸ்! 

ஸ்கூல்ல நிறைய எழுத சொல்றாங்களா? எழுதி எழுதி கையெல்லாம் வலிக்குதா? எவ்வளவு எழுதினாலும் உங்க கையெழுத்து அழகாக இல்லையா? இதை ட்ரை பண்ணுங்க... நாளைக்கே உங்க கையெழுத்து அழகாக மாறிடும்! 

முதல்ல அம்மா கிட்ட சொல்லி நீங்க வசதியா உட்கார்ந்து எழுதுவதற்கு சின்னதா ஒரு டேபிள் வாங்கிக்கோங்க. விதவிதமான பென்சில், crayons, sketches, a4 sheet வாங்கிக்கோங்க. உங்களுக்கு தேவையானது எல்லாம் அம்மா வாங்கி கொடுத்துட்டாங்களா, நமக்கு தேவையானதெல்லாம் வாங்கி கொடுத்த அம்மாவுக்கு நாமளும் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுவோமா! 

முதல்ல அம்மா கிட்ட கொஞ்சம் கோதுமை மாவு வாங்கி, அதுல கொஞ்சமா தண்ணி விட்டுப் பிசைஞ்சு, கையில் இருக்கக்கூடிய முதல் மூன்று விரல்களை மட்டுமே உபயோகித்து சின்ன சின்ன சாக்லேட் செய்யுங்க. அந்த சாக்லேட்டை அம்மாவிடம் கொடுத்து எண்ணெயில் பொரித்து ஜீராவில் போட்டால் சத்து மிகுந்த கோதுமை சாக்லேட் ரெடி!

ஒரு பேப்பர் எடுத்து ஒரு அழகான பூ வரைந்து அதை வண்ணம் தீட்டி சிறிய கத்தரிக்கோல் கொண்டு பூ வடிவத்தை மெதுவாக வெட்டி எடுத்து அம்மா கிட்ட கொடுங்க! I love you amma சொல்லுங்க! 

உங்ககிட்ட விளையாட கார் இருக்கா, அம்மா கிட்ட கூர்மையான முனை இல்லாத சின்ன ஸ்க்ரூ டிரைவ் வாங்கி காரின் பாகங்களை ஒன்று சேர்க்கக் கூடிய சிறிய ஆணிகளை கழற்றி மறுபடியும் ஒன்று சேருங்க! அடடே நாமளும் கார் செய்ய கத்துக்கிட்டோமே! என்ன குட்டீஸ் இப்போ நீங்க ரொம்ப ஹாப்பியா!

இப்போ நம்ம சமையல், ஓவியம், மெக்கானிக் வேலை மூணுமே கத்துக்கிட்டோம்! மகிழ்ச்சிதானே! 

இதையும் படியுங்கள்:
Interview - Mehaa - The Skater Girl... Doing India Proud!
Handwriting

பெற்றோர்களுக்காக:

குழந்தைகளின் கையெழுத்து அழகாக இல்லாததற்கு கையில் உள்ள தசைகள் வலுவாக இல்லாததும் ஒரு காரணம். மேலே கூறிய பயிற்சிகளை தொடர்ந்து குழந்தைகளுக்கு கொடுக்கும்போது அவர்களது கையில் உள்ள தசைகள் வலுப்படும். இதனால் எழுதும்போது ஏற்படும் கை வலி குறைந்து இயல்பாகவே அவர்களுக்கு எழுதுவதில் ஆர்வம் அதிகரிக்கும். 

குழந்தைகள் எப்போதும் எழுதும் போது அவர்களுக்கு உகந்த சூழலை அமைத்து தருவது மிகவும் முக்கியம். அதற்காக அவர்களுக்கு சிறிய டேபிள், சேர், விதவிதமான எழுதுகோல் பொருட்கள்  முதலான வசதிகளை அமைத்துக் கொடுக்கும் போது எழுதுவதில் ஆர்வம் அதிகரிக்கும். 

தரையில் அமர்ந்து எழுதும் போது சில நேரங்களில் கழுத்து அதிகமாக வலிக்க கூடும். அதனால் சீக்கிரம் எழுதி முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கிறுக்கித் தள்ளுவார்கள். 

வாய்ப்புகள் கிடைத்தால் குழந்தைகளை அதிகமாக மணலில் விளையாட விடுங்கள். மணல் ஒருவித கொரகொரப்பு தன்மையுடன் இருக்கும். அதிகமாக மணலில் விளையாடும் போது கைகளில் இருக்கக்கூடிய தசைகள் வலுப்பெறும் வாய்ப்பு உண்டு. அதனால்தான் குழந்தைகளை அதிகமாக விளையாட வைக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்துகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com