
ஒரு சிறு கிராமத்தில் பண்ணையார் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் தன் வீட்டில் ஒரு நாயையும் பொதிசுமக்க ஒரு கழுதையும் வளர்த்து வந்தார். கழுதையை வேலைக்காரன் ஒருவன் கவனித்து வந்தான்.
பண்ணையாருக்கு அவர் வளர்க்கும் நாய் மேல் அதிக அன்பு உள்ளது. ஏனென்றால் அது இரண்டு முறை திருடர்களைப் பிடித்து அவரிடம் ஒப்படைத்தது. அவர் வெளியே சென்று வீட்டிற்கு வந்தால் தன் வாலை ஆட்டிக் கொண்டே நன்றியை காட்டும்.
அவர் அமர்ந்திருக்கும் போது உரிமையாக சென்று அவர் மடியில் படுத்துக்கொள்ளும். அவர் முகத்தை ஆசையாக நக்கும். பண்ணையார் அதற்கு இறைச்சி துண்டுகளையும், உயர்தர உணவுகளையும் கொடுத்து மிகவும் அன்பாக வைத்திருந்தார்.
பண்ணையார் வீட்டில் வளரும் கழுதை, பண்ணையார் நாய்க்கு மட்டும் இவ்வளவு சலுகைகளை வழங்குகிறரே என்று பொறாமை பட்டது. பண்ணையார் நாய்க்கு கொடுக்கும் அத்தனை சலுகைகளையும் தான் பெற வேண்டும் என்று நினைத்தது.
நாய் போல தானும் ஒருநாள் பண்ணையார் மடியில் படுத்து அவர் முகத்தை நக்க வேண்டும் ,என திட்டம் தீட்டியது. கழுதையின் தீய எண்ணத்தை நாய் புரிந்து கொண்டது.