தொல்காப்பியர் கூறும் ஆறறிவுகள் பற்றித் தெரிந்து கொள்வோமா குட்டிஸ்!

Knowledge is multifaceted
Tholkapiyar!
Published on

அறிவு என்பது பல வகைப்படும்.

1) ஓரறிவு: தொடுதலால் உணர்வது

தாவரங்களுக்கு ஓர் அறிவு உண்டு. பிறர் தன்னை தொடுகிறார்கள் என்பதை உணரும் அறிவுதான் அது. ஒரே அறிவு மட்டும் கொண்ட தாவரங்களை "ஓரறிவுயிர்கள்" என்று அழைப்பார்கள். மரம் செடி, கொடி புல் பூண்டு போன்றவை தொடுதல் மூலம் உணரமுடியுமே தவிர இவற்றால் எதிர்வினை ஆற்ற முடியாது.

2) இரண்டறிவு: தொடுதல், சுவைத்தல்

நத்தை, சங்கு, சிப்பி, புழுக்கள் போன்றவற்றிற்கு உற்றறிகிற அறிவு உண்டு. அத்துடன் தன்னுடைய உணவை நாக்கினால் சுவைத்து அறிகின்ற இன்னொரு அறிவும் உள்ளது. எனவே இவற்றை "ஈரறிவுயிர்கள்" என்பார்கள்.

3) மூன்றாம் அறிவு: தொடுதல், சுவைத்தல், முகர்தல்

ஈசல், எறும்பு, கரையான்களுக்கு இந்த இரு அறிவுகளுடன் மூன்றாவதாக உணவை மோப்பம் பிடிக்கும் மற்றொரு அறிவும் உள்ளதால் இவற்றை "மூவறிவுயிர்கள்" என்று கூறுவார்கள்.

4) நான்காம் அறிவு: தொடுதல், சுவைத்தல், முகர்தல், பார்த்தல்

நண்டு, தும்பி, தேனி, வண்டு ஆகியவற்றுக்கு இந்த மூன்று அறிவுகளுடன் நான்காவதாக தங்களை சுற்றியுள்ளவற்றை கண்ணால் பார்க்கிற மற்றொரு அறிவும் உள்ளது. எனவே இவற்றை "நான்கறிவுயிர்கள்" என்று கூறுவார்கள்.

இதையும் படியுங்கள்:
Meet Gitanjali Rao: The Young Scientist and Inventor Changing the World!
Knowledge is multifaceted

5) ஐந்தாம் அறிவு: தொடுதல், சுவைத்தல், முகர்தல், பார்த்தல், கேட்டல்

ஆடு, மாடு, நாய் போன்றவை நான்கு அறிவுகளுடன் ஐந்தாவதாக தங்களைச் சுற்றி எழும் ஓசைகளை கேட்கும் திறன் பெற்றவை. எனவே இவற்றை "ஐந்தறிவுயிர்கள்" என்பார்கள்.

6) ஆறாம் அறிவு: தொடுதல், சுவைத்தல், முகர்தல், பார்த்தல், கேட்டல் மற்றும் சிந்திப்பது

மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் இந்த ஐந்து அறிவுகளுடன் ஆறாவதாக சிந்திக்கின்ற அறிவும் அதாவது பகுத்தறியும் அறிவும் உள்ளது. இதுதான் மனிதர்களை மற்ற உயிரினங்களிலிருந்து உயர்த்துகிறது.

தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியர் உயிரினங்களை பற்றி இவ்வாறு வகைப்படுத்தி உள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com