மகிழ்ச்சி பொங்க... சிறு வீட்டு பொங்கல் கொண்டாடலாம் வாங்க!

சிறுவீட்டு பொங்கல்...
சிறுவீட்டு பொங்கல்...www.vikatan.com

பொங்கல் பண்டிகைக்கு பின்னர் சிறுவர் திருமகள் சேர்ந்து கொண்டாடும் சிறுவீட்டு பொங்கல் என்பது நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற ஒன்றாகும்.

குழந்தைகளுக்கான பொங்கலை சிறு வீட்டு பொங்கல் என்று சொல்வார்கள். தை மாதத்தில் வரும் ஞாயிற்றுக் கிழமையில் இந்த பொங்கலை வைப்பார்கள். அன்று அதிகாலையில் வாசலில் சாண பிள்ளையார் பிடிப்பதுபோல சாணத்தை உருட்டி வைத்து அதில் பூவரசு பூசணி செம்பருத்தி பூக்களால் அலங்காரம் செய்வார்கள். மணலால் சிறு வீடு போல ஓவியம் வரைந்து அதன் நடுவே பொங்கல் பானை வைத்து பொங்கல் இட வைப்பார்கள். ஒரு முறத்தின் பின்பக்கம் சிறு சிறு வாழை இலையை விரித்து அதில் சிறிதளவு பொங்கல் பழம் வைத்து அதன் மீது கற்பூரம் ஏற்றி நீர் நிலையில் மிதக்க விடுவார்கள்.

இதையும் படியுங்கள்:
காதல் கரை என்றழைக்கப்படும் சினேகதீரம் கடற்கரைக்கு ஓர் பயணம்!
சிறுவீட்டு பொங்கல்...

சிறுவர்கள் வேஷ்டியும் பெண் குழந்தைகள் பட்டு பாவாடை சட்டை தாவணி போன்ற பாரம்பரிய ஆடைகளையும் அணிவார்கள்.

சில வீடுகளில் மார்கழி மாதத்தில் வீட்டு வாசலில் வைத்த சாணப் பிள்ளையாரை பத்திரமாக எடுத்து வைத்திருப்பார்கள். அதனை பொங்கலுக்கு பின்னர் நீர்நிலைகளில் கரைப்பார்கள்.

சிறுவீட்டு பொங்கல் முடிந்ததும் ஒரு மாதமாக சேர்த்து வைக்கப்பட்ட அந்த சாணத்தை தாமிரபரணி ஆற்றில் கரைப்பார்கள். பிறகு வீட்டில் சர்க்கரை பொங்கல் வைத்து இலை போட்டு சாப்பிடுவார்கள். இந்த சிறு வீட்டு பொங்கல் நெல்லையிலும் கன்னியாகுமரி மாவட்டத்திலும் தூத்துக்குடியிலும்  மட்டுமே மிகச் சிறப்பாக கொண்டாடப்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com