மாமிச உண்ணியான டாஸ்மேனியன் டெவில் பற்றி தெரிந்து கொள்வோமா குழந்தைகளே!

டாஸ்மேனியன் டெவில்
டாஸ்மேனியன் டெவில்Image credit - pixabay.com

பாலூட்டிகளில் வயிற்றில் பை உள்ள மாமிச உண்ணி இனத்தைச் சேர்ந்த விலங்கு இது. ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா பகுதியில் மட்டும் காணப்பட்டதால் இதற்கு டாஸ்மேனியன் டெவில் என்று பெயர் வந்தது. இது மார்சுபியல்கள் எனப்படும் ஒரு குழுவை சேர்ந்த பாலூட்டியாகும். இது 20 முதல் 30 அங்குல அளவு வரை வளரும். இதன் எடை 8 கிலோ வரை இருக்கும். உலகின் மிகப்பெரிய மாமிச உண்ணி (சதை உண்ணும்) மார்சுபியலாகும்.

இந்த அணில் அளவுள்ள பாலூட்டியின் பூர்வீகம் ஆஸ்திரேலியாவில் உள்ள டாஸ்மேனியா என்னும் ஒரு சிறிய தீவாகும். கனமான முன் பகுதிகள், பலவீனமான பின்பகுதிகள் மற்றும் பெரிய சதுர தலையுடன் கரடி போன்ற தோற்றம், அடர்த்தியான கருப்பு ஃபர் கோட், வலுவான மற்றும் கூர்மையான பற்கள் கொண்டவை. இறந்த செம்மறி போன்ற கேரியன்களை உண்பதுடன் சில வண்டுகளின் லார்வாக்களையும் உட்கொள்கின்றன. இப்படி இறந்த உடல்களை உண்ணும் பழக்கம் கொண்ட இந்த டெவில்கள் பயம் ஏற்படுத்தும் அளவுக்கு பயங்கரமாக அலறுவதால் இப்பெயர் உண்டானது. 

இதன் கர்ப்ப காலம் மூன்று வாரங்களாகும். இவை சுமார் ஐந்து மாதங்கள் பையில் இருக்கும். இந்த வகை உயிரினங்கள் பை போன்ற அமைப்பில் இளம் உயிர்களை பாதுகாக்கிறது. கங்காரு, வாலபி, கோவாலா போன்றவை இவ்வகை உயிரினங்களில் நன்கு அறியப்பட்ட விலங்கு களாகும். புதிதாகப் பிறந்த குட்டிகள் இளஞ்சிவப்பு நிறத்தில் ரோமங்கள் இல்லாமல் தெளிவற்ற முக அம்சங்கள் கொண்டு பிறக்கும்.

டாஸ்மேனியன் டெவில்களின் (பிசாசு) பற்கள் மற்றும் தாடைகள் பல அம்சங்களில் ஹைனாவைப் போலவே உள்ளன. இந்த விலங்கு ஆஸ்திரேலியாவில் 3000 ஆண்டுகளுக்கு முன்பு அதிக எண்ணிக்கையில் இருந்ததாகவும் பின் படிப்படியாக குறைந்து அழிவின் விளிம்புக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது. 

இதையும் படியுங்கள்:
வடிகஞ்சியின் ஆரோக்கிய பலன்கள்!
டாஸ்மேனியன் டெவில்

இந்நிலையில் இந்த விலங்கை பாதுகாக்கவும், அதிகரிக்கவும் "ஆஸி ஆர்க்" என்ற அமைப்பு டாஸ்மேனியன் டெவில் விலங்குகளை இனப்பெருக்கம் செய்தது. அதன் பயனாக தற்பொழுது 25 ஆயிரம் டெவில் விலங்குகள் இருப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com