நூலகத்தின் அவசியம் பற்றி தெரிந்து கொள்வோமா குட்டீஸ்!

Let's learn about the need for a library, cuties!
Library article
Published on

ல்லாவிதமான புத்தகங்களையும்  நூலகம் சென்று படிக்கும்போது பல துறை அறிவும் நமக்கு வளர்ந்துவிடும். பல்துறை அறிவு இன்றி கல்வியின் முழு பயனையும் பெற முடியாது. ஒவ்வொரு துறையிலும் நுண்ணிய அறிவினை வளர்த்துக்கொள்ள வேண்டுமென்றால் நூல்களின் வாசிப்பு மிக மிக அவசியம். 

பாடப் புத்தகங்களுடன் அனுபவாய்வுகளின் மையமாக விளங்கும் நூலக அறிவு நிச்சயம் தேவை. அப்பொழுதுதான்  அனைத்து துறை போட்டி தேர்வுகளில் நன்றாக பங்கேற்று, அதிக மதிப்பெண் பெறலாம்.

பொது அறிவும் வளரும். கலை, இலக்கிய, பண்பாடு போன்றவற்றின் தாக்கத்தை பல்வேறு நாடுகளில் எப்படி பயன்படுத்துகிறார்கள், நம் நாடு எப்படி அதில் சிறந்து விளங்குகிறது என்று கண்டறிவதற்கு நூலகமே சாட்சி . சிறு வயது முதலே நூலக கல்வியை பள்ளியிலும், பெற்றோர்களும் கட்டாயப்படுத்தி குழந்தைகளுக்கு அதற்கான நூல்களை எடுத்துக் கொடுத்து படிக்க கற்றுத் தர வேண்டும். அப்படி படிக்க படிக்கத்தான்

தொட்டணைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத் தூறும் அறிவு என்பதற்கு இணங்க செயல்பட முடியும். 

நமக்கு ஏற்படும் பல்வேறு சூழல்களில் இருந்து நம்மை பாதுகாப்பது அறிவுதான் என்பதை அற்றம் காக்கும் கருவி என்றும் வலியுறுத்துகின்றார். நுண்மான் நுழைபுழம் பெற்றிட நாம் பயன்படுத்த வேண்டியது நூலகம்தான். 

இன்று உலகிலேயே மிகப்பெரிய நூலகமாக ரஷ்ய லெனின் மாநில நூலகமும், அமெரிக்க சட்ட மாமன்ற நூலகமும், இந்தியாவைப் பொறுத்தவரை கல்கத்தாவின் தேசிய நூலகமும், மும்பையின் மைய நூலகமும் மிகப்பெரியவையாகும். தமிழ்நாட்டளவில் தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகமும், கன்னிமார நூலகமும், சென்னை பல்கலைக்கழக நூலகமும் மிகப்பெரியவையாக போற்றப்படுகின்றன.

நூலகத்தின் பயன்கள்:

விரும்பும்  துறையில் புலமை பெற்றிட நூலகம் பெரிதும் துணை செய்கின்றது. ஆழ்ந்து படிக்கும் பழக்கத்தையும், சிந்திக்கும் திறனையும் வளர்க்கின்றது. ஆய்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கி தருகின்றது. பாடப்பொருள் சார்ந்த விரிவான அறிவாற்றலை பெற பெரிதும் உதவுகின்றது. ஆதலால் அந்த காலம் முதல் இந்த காலம் வரை நாம் சார்ந்துள்ள துறையின் வளர்ச்சியை புரிந்துகொள்ள பெரிதும் உதவி புரிவது நூலகங்கள்தான்.

இதையும் படியுங்கள்:
பூனைக்கு இரவில் கண் தெரியுமா?
Let's learn about the need for a library, cuties!

அதனால்தான் கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே என்றார் அதிவீர ராம பாண்டியர். 'நூல் அளவே ஆகுமாம் நுண்ணறிவு' என்றும் 'நூல் பல கல் 'என்றும் கூறியிருக்கின்றார் ஔவை பாட்டி. அதற்கு முன்பு வரை ஓலைச்சுவடிகளைதான் நாம் பெரிதும் போற்றி பாதுகாத்து வந்தோம். இப்பொழுதும் தொடர்கிறோம். என்றாலும், 19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர் வருகைக்குப் பின்னர் நூலகங்கள் பெருமளவு விரிந்து வளர தொடங்கியதை அனைவரும் அறிவோம் . 

 உடல் வளர்ச்சிக்கு உணவுக்கு செலவு செய்வது போல், அறிவு விருத்தி பெற புத்தகங்களுக்கு செலவு செய்தால் கலைமகள் என்றும் நம்முடன் பயணிப்பாள். நாம் நவராத்திரி நேரங்களில் கலைமகளுக்கு தனியாக பூஜை அலங்காரம் செய்து வழிபடுவதன் நோக்கம் நமக்கு நுண்ணறிவை தருவது நூல்களே என்பதை விளக்குவதற்குதான்.  நவம்பர் மாதத்தில் ஒரு வாரம் நூலக வார விழா கொண்டாடுவதன் நோக்கமும் இதுதான் .அதைப் புரிந்து கொண்டு நூலகம் செல்வோம்; நுண்ணறிவைப் பெறுவோம் குட்டீஸ்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com