
முதலாளி ஒருவரிடம் வீட்டு வேலை செய்து கொண்டிருந்த பாபு என்னும் வேலைக்காரன் அதிகம் படிக்காதவன்; சுயமாக சிந்திக்கத் தெரியாதவன். ஆனால் முதலாளி இடும் கட்டளைகளை சிறிதும் சிரமம் பாராமல் செய்து முடிப்பதால் அவனை வேலையில் வைத்துக் கொண்டிருந்தார் அந்த முதலாளி. எந்த கடினமான வேலையை சொன்னாலும் சிறிதும் முகம் சுளிக்காமல் செய்து வந்தான் பாபு.
ஒரு நாள் முதலாளிக்கு வெளியூர் செல்ல வேண்டிய வேலை வந்ததால் பாபுவிடம் வீட்டை பத்திரமாக பார்த்துக் கொள்வதுடன் தான் வளர்க்கும் நாயையும் பத்திரமாக பார்த்துக் கொள்ளும் படியும், இரண்டு நாட்களில் வந்து விடுவதாகவும் கூறி சென்றார். பாபுவும் பலமாக தலையாட்டி வைத்தான்.