கோகுலம் / Gokulam
கவிதை - வீறு கொள் தோழா!
இளைஞனே வீறு கொள்
இன்முகத்தோடு இருந்திடு.
வன்முறையை எதிர்த்து
வலிந்தே குரலெழுப்பு.
தமிழர் என்றோர்
தனித்துவம் பெற்றோர்.
தன்மானம் நிறைத்தே
தளரினும் வாழ்வர்.
பெண்ணடிமை செய்யாதே
பேதலித்து அலையாதே
பிறர் உழைப்பில்
பகட்டாய் வாழாதே!
இல்லாமை அகன்றிட
இனிதே உழைத்திடு.
இருப்பதைப் பகிர்ந்தே
இயன்றவரை உதவிடு.
பெரியோரைப் போற்றிடு
பொறுப்பாய் இருந்திடு.
நச்சுசொல் பேசாது
நாவினைக் காத்திடு.
சுருங்கச் சொல்லிடு
சுறுசுறுப்பாய் இருந்திடு.
எளிமையாய் வாழ்ந்தே
ஏற்றம் பெற்றிடு.
ஏற்றத்தாழ்வை அகற்றிடு
ஏழ்மையை விரட்டிடு.
மனதை அடக்கியே
மகிழ்வாய் வாழ்ந்திடு.
உணவை வீணாக்காதே
உயரெண்ணம் கொண்டிடு.
நாட்டை உயர்த்த
நாளும் முயன்றிடு.
ஒழுக்கம் பேணிடு
ஒற்றுமையை விரும்பிடு.
தோழா!தோழமையோடு
தொண்டுகள் செய்திடு.
நாளைய தலைவன்
நீயென்றே உணர்ந்திடு.
வீறு கொள் தோழா
விரயமாக்காதே காலத்தை.
அன்றன்று வாழ்ந்திடு
அன்போடு பேசிடு.