ஐஸ்லாந்து நாட்டுப்புறக் கதை: பாறைகளுக்குள் வசிக்கும் குள்ள மனிதர்களின் உலகம்!

ஐஸ்லாந்தின் எரிமலைப் பாறைகளுக்குள் வசிக்கும் ஹுல்டுஃபோல்க் எனப்படும் குள்ள மனிதர்களைப் பற்றிய நாட்டுப்புறக் கதை
குள்ள மனிதர்கள் | Dwarfs
குள்ள மனிதர்கள் | DwarfsAI Image
ஷாராஜ்

இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 6 சிறுகதைத் தொகுப்புகள், 5 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, மூன்று சிறார் கதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். இவரது உலக சிறுவர் கதைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகள், 2024-ல், ஓர் அங்குலச் சிறுவன், அமேஸான் கானகத்தில் வழி மறந்த சிறுமி, ஆகாயத்தைத் தின்ற மனிதர்கள் ஆகிய மூன்று நூல்களாக வெளியாகியுள்ளன. இவ் வரிசையில் இன்னும் சில தொகுப்புகள் வரவுள்ளன.

Updated on

ஐஸ்லாந்து மக்களின் வாழ்வியலோடும் கலாச்சாரத்தோடும் பின்னிப் பிணைந்த ஒரு விசித்திரமான நம்பிக்கை, 'ஹுல்டுஃபோல்க்' (Huldufólk) எனப்படும் மறைக்கப்பட்ட மனிதர்கள் (Elves).

இவர்கள் அமானுஷ்யமானவர்கள், குள்ள குள்ள மனிதர்கள். இவர்கள் எரிமலைக் குழம்பினால் உருவான பசால்ட் (Basalt) வகைப் பாறைகளுக்குள் வசிப்பதாக சொல்லப்படுவதுதான் அதைவிட, மிக விந்தையானது. குறிப்பாக, பெரிய பாறாங்கற்கள் (Boulders) மற்றும் உயரமான செங்குத்துப் பாறைகளை அவர்கள் தங்களது மாளிகைகளாகவோ, தேவாலயங்களாகவோ பயன்படுத்துவார்களாம்.

ஐஸ்லாந்து எரிமலைத் தீவு என்பதால் எங்கு நோக்கினும் உறைந்துபோன லாவா பாறைகள் காணப்படும். புல்வெளிகளிலோ அல்லது சமவெளிகளிலோ தனியாகத் தெரியும் இவ்வகைப் பெரிய பாறாங்கற்களை ‘ஆல்ஃபாஸ்டீனர்’ என்றும், சிறு குன்றுகளை 'ஆல்ஃபஹோல்' அல்லது 'எல்ஃப் ஹில்ஸ்' என்றும் அழைப்பர்.

இவற்றுக்குள் ஹுல்டுஃபோல்க்குகள் வசிப்பதால், அவற்றை நகர்த்துவது அல்லது உடைப்பது கெடுதல் உண்டாக்கும் என்பதும் நம்பிக்கை.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com