
காட்டுக்குள் வேட்டையாடச் சென்ற அந்த வேட்டைக்காரர் வீடு திரும்பவில்லை. அவரை சிங்கம் அடித்துக் கொன்று தின்றுவிட்டது. இதை அறிந்த குடும்பத்தார் அவரை மறந்துவிட்டனர். ஆனால், அவரது கடைசி மகளான சிறுமி அவரை மறக்காமல், 'அப்பா எங்கே?, அப்பா எங்கே?' என்று கேட்டு அழுதுகொண்டே இருந்தாள்.
வேட்டைக்காரரின் மூத்த மகன்கள் மூவரும் மாந்தரீகர்கள். தங்கையின் அழுகையை நிறுத்துவதற்காக அவர்கள் காட்டுக்குச் சென்று தந்தையின் எலும்புகளைத் தேடி எடுத்து வந்தனர். மூத்த மகன் எலும்புகள் யாவற்றையும் சரியாக ஒருங்கிணைத்தான். இரண்டாவது மகன் அதில் சதைகளை சரியானபடி சேர்த்தான். மூன்றாவது மகன் அந்த உடலுக்கு உயிரூட்டினான். அப்படியாக அந்தத் தந்தை மீண்டும் உயிர்த்தெழுந்து வந்தார்.