கேள்விக்குறி பிறந்த கதை தெரியுமா குட்டீஸ்?

கேள்விக்குறி (?) எப்படி உருவானது? நிறுத்தற்குறிகளின் வரலாறு மற்றும் அதன் பரிணாம வளர்ச்சி குறித்த வியக்க வைக்கும் தகவல்களை அறிந்துகொள்ளுங்கள்.
கேள்விக்குறி | question mark
கேள்விக்குறி | question markAI Image
எம். ஆர். ஆனந்த்

I am a retired Bank officer. I have written articles in English for News Papers. I have written poems in English and Tamil 

Updated on

நம்மில் யாருக்காவது புரியாத விஷயம் என்றால் உடனே நாம் கேட்பது என்ன? "ஏன்?", "எப்படி?" என்ற கேள்விகள் தானே! அப்படி நம்மைப் பேச வைக்கும், சிந்திக்க வைக்கும் 'கேள்விக்குறி' (?) இன்று நேற்று கண்டுபிடிக்கப்பட்டது அல்ல தெரியுமா?

நாம் எழுதும் பாடம் எது, கேள்வி எது, பதில் எது என்று குழப்பம் இல்லாமல் படிக்க நமக்கு உதவுவது இந்தக் கேள்விக்குறிதான். ஒரு தாத்தா தடியும் புள்ளியும் போல இருக்கும் இந்தச் சின்னக் குறியின் பின்னணியில் ஒரு செம இன்ட்ரஸ்டிங்கான வரலாறு இருக்கு! ஒரு காலத்தில் "quaestio" என்ற பெரிய லத்தீன் வார்த்தையை எழுதிதான் நம் முன்னோர்கள் கேள்வி கேட்டார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

அப்படியிருந்த இந்த வடிவம் எப்படி இன்று நாம் பார்க்கும் கேள்விக்குறியாக மாறியது? இதைக் கண்டுபிடிக்கிய வினோதமான கதையையும், மற்ற நிறுத்தற்குறிகள் எப்படி வந்தன என்பதையும் இந்தக் கட்டுரையில் படித்து தெரிந்து கொள்வோமா!

கேள்விக்குறி மட்டும் இல்லை என்றால், நாம் படிக்கையில் எது கேள்வி, எது பதில், எது முட்டுச்சந்து வரி என்று தெரியாமல் போய்விடும் அல்லவா.

பஞ்சுவேஷன்களில் (Punctuation) மிக முக்கியமானது QUESTION MARK (?) அதாவது கேள்விக்குறி. தாத்தா தடியும் ஒரு புள்ளியும் சேர்ந்த சைன் போன்று இருக்கும். இதை முதல் முறையாக டிசைன் செய்தவர் Alcuin of York என்ற பாதிரியார் ஆவார். இவர் ஒரு latin புலவர்.

இதையும் படியுங்கள்:
ஆக்டோபஸுக்கு மூன்று இதயங்கள் ஏன்? தெரிஞ்சுக்கோங்க!
கேள்விக்குறி | question mark

ஆரம்பத்தில் இந்த குறி தற்போது இருப்பதுபோல இல்லை. ஏதோ ஒரு கிறுக்கலும் புள்ளியும் சேர்ந்த தோற்றத்தில் தான் இருந்தது. அல்குயின் தொடங்கி வைத்ததை ஒழுங்கு படுத்தி வளைவு ஏற்படுத்தி ஒரு பொட்டையும் கீழே வைத்து சரி செய்தவர்கள் பதிமூன்றாம் நூற்றாண்டுகளை சேர்ந்த பெயர் தெரியா அறிவாளிகள் தான்.  

கேள்விக்குறி ORIGIN பற்றிய இன்னொரு தியரி இது தான்! 

கேள்விக்குறி | question mark
கேள்விக்குறி | question markAI Image

இந்தக் குறி வடிவமைப்பதற்கு முன்பு எழுத்தாளர்கள் தாங்கள் எழுதும் வரி கேள்வியடங்கியது என்பதை உணர்ந்து அப்படி பட்ட வரிகளின் இறுதியில் லத்தீன் வார்த்தையான quaestio என்று தான் எழுதுவார்கள். என்ன ஒரு கஷ்டம்? பின்னர், இந்த கொடுமையை தாங்காது அதையே O போட்டு அதன் மேல் Q போட்டு ஒரு குறியாக்கினார்கள். இந்த குறி தான் காலம் செல்ல செல்ல தற்போதைய கேள்வி குறியாக மாறியது. 

கி. பி 1400 முதல் தான் தற்போதைய இந்தக் குறி (?) நடைமுறைக்கு வந்தது. மொத்தத்தில் இந்தக் குறியை யார் கண்டு பிடித்திருந்தாலும் நாம் நன்றி சொல்ல வேண்டும். கேள்விக்குறி மட்டுமல்ல மற்ற பஞ்சுவேஷன் குறிகள் இல்லாமல் படிக்க, புரிந்து கொள்ள நாம் மிகவும் திணறி இருப்போம்.  

இதையும் படியுங்கள்:
32 மூளைகள், 10 கண்கள்: அட்டைப் பூச்சியைப் பற்றி அதிர்ச்சியூட்டும் உண்மைகள்!
கேள்விக்குறி | question mark

Aldus Manutius என்பவர் 15 ஆம் நூற்றாண்டில் தன்னுடைய பேரனுடன் இணைந்து Comma, semicolon, மற்றும் Full Stop ஆகிய மூன்றையும் அறிமுகபடுத்தினார். இந்த தாத்தாவும் பேரனும் PRINTING துறையில் இருந்தவர்கள். என்ன குட்டீஸ், இப்போது கேள்விக்குறி எப்படி உருவானது என்பதை தெரிந்து கொண்டீர்களா

இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம், குழந்தைகள் எழுத்துக்களின் அமைப்பை ஆழமாகப் புரிந்து கொள்ள முடியும். மேலும், வாசிப்புத் திறனை மேம்படுத்தி, மொழி வரலாற்றின் மீதான புரிதலை முழுமையாகப் பெற முடியும்.

logo
Kalki Online
kalkionline.com