வெட்டிவேரின் அரிய பயன்கள்!

வெட்டிவேர்...
வெட்டிவேர்...

ண் அரிமானத்தைப் பெருமளவு  கட்டுப்படுத்தும் அற்புதமான தாவரம் வெட்டிவேர். இது போசியே எனப்படும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் தாவரவியல் பெயர் க்ரைசோபோகன் ஜிஜினியாய்டெஸ் (Chrysopogon zizanioides). இதை ஒரு வகைப் புல் என்றும் சொல்லலாம். இதன் தனிப்பட்ட வெளிப்புற அமைப்பு, திசு வடிவம், மற்ற தாவரங்களோடு இணக்கமாய் ஒன்றாகச் சேர்ந்து வாழும் வாழ்க்கை முறை ஆகியவற்றால் பல்வேறு தட்ப வெப்ப நிலைகளிலும், மண் வகை களிலும் செழித்து வளர முடியும். வறட்சியைத் தாங்கும்; தண்ணீரில மூழ்கினாலும் அழுகிவிடாது. அமிலத்தன்மை, காரத்தன்மை கொண்ட மண்ணிலும் வெட்டிவேர் வளரும். மண்ணில் இருக்கும்  மங்கனீஸ், ஆர்சனிக், கேட்மியம், க்ரோமியம், நிக்கல், தாமிரம், பாத ரசம், ஈயம், துத்தநாகம் போன்ற வேதியியல் மூலக்கூறுகள்  இருந் தாலும் அவற்றையும் தாங்கி வள ரும். கறையான், எறும்பு, பூச்சி புழுத் தாக்குதல், தீ போன்ற அழி வுகளில் மற்ற தாவரங்கள் முற்றாக அழிந்தாலும், வெட்டிவேர் அவற் றைத் தாங்கி வளரக் கூடியது.

வெட்டிவேருக்குத் தாய்நாடு இந்தியாதான். ஜாவா, சீனா, ஜப்பான், பிரேசில் போன்ற நாடுகளில் இதை ஏராளமாக உற்பத்தி செய்கி றார்கள். வெட்டிவேர் என்னும் தமிழ்ப் பெயரைத்தான் எல்லா நாடுகளிலும் பயன்படுகிறார்கள். உலக வங்கி, தான் கடன் கொடுக்க விரும்பும் நாடுகளில் இயற்கைச் சமநிலையைப் VGT (Vettiver Grass Technology) என்னும் பெயரில் வெட்டிவேரை அதிக அளவில நடச் சொல்லி வற்புறுத்துகிறது.

இது 1.5 மீட்டர் உயரம் வரை வளரும்; நிறையத் தூர்கள் விடும்; தண்டுகள் உயரமாயும் இலைகள் நீளமா கவும் மெலிந்தும், பளபளப்பாயும் இருக்கும். பூக்கள் பழுப்புக் வண்ணத்தில் இருக்கும்.

வெட்டிவேருக்கும்  மற்ற புல் இனங்களுக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கிறது. இதர வகைகளில், வேர் கிடைமட்டத்தில் -  நிலப் பரப்புக்கு இணையாகவே - பரவி இருக்கும். ஆனால் வெட்டிவேரின் வேர்கள், பூமிக்குக் கீழ செங்குத்தாய் இரண்டிலிருந்து 4 மீட்டர் வரைக்கும் ஆழமாய்ச் செல்லும். எனவே இதனுடைய வேர்கள் மண் அரிமானத்தைப் பெரிதும் கட்டுபடுத்து கின்றன. ஆற்று ஓரங்களில், கரைகள் அரிக்கப்படாமல் இருக்க இவற்றை நடுவது பெரும் பலனைக் கொடுக்கும். மலைப்பாங்கான இடங்களில் நிலச்சரிவுகளைப் பெரு மளவு கட்டுப்படுத்தும். நெருக்க மாக வளரும் இதன் தூர்கள், ஓடி வரும் தண்ணீரின் வேகத்தையும் குறைக்கும்.

வெட்டிவேர் எண்ணெய்...
வெட்டிவேர் எண்ணெய்...

மழை நீரைத் தடுப்பதால், நீர் பூமிக்குள் ஊடுருவ உதவுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர வழி ஏற்படுகிறது. இதன் இலைகளைப் பறித்து மற்ற பயிர்கள் வளரும் நிலத்தில் போட்டு வைத் தால் பூமியில் இருக்கும்  தண்ணீர் ஆவியாகமல், நிலத்தில் ஈரப்பதம் எப்பொழுதும் இருக்க உதவுகிறது. கால்நடைகளுக்குத் தீவனமாகவும் பயனாகிறது. காளான் வளர்க்க மீடியமாகவும் உபயோகப்படுகிறது. பைரீன் மாதிரியான ஆபத் தான கெமிக்கல்களை அழிக்கவும் வெட்டிவேர் பயன்படுகிறது.

இதையும் படியுங்கள்:
போட்டோக்ஸ் ஊசி போட்டுக்கப் போறீங்களா? அப்போ கட்டாயம் இதைத் தெரிஞ்சிக்கணும்!
வெட்டிவேர்...

வெட்டிவேரைப் பாயாக முடைந்து, கதவுகளில் போட்டு வைத்துக் கோடையில் பெருமளவு வெப்பத்தைத் தவிர்க்கலாம். அதில் அவ்வப்போது நீரைத் தெளித்து வைத்தால்  வீடே ஏ.ஸி. செய்ததைப் போலக் குளிர்ச்சியாக இருக்கும். குடிநீர்ப் பானையிலும் இதைப் போட்டு வைப்பது வழக்கம். 

அழகழகான கைவினைப் பொருட்களை வெட்டி வேரில் இருந்து தயாரிக்கிறார்கள். கொசு விரட்டியாகவும் பயன்படுகிறது. 

வெட்டிவேரில் இருந்து ஒருவித எண்ணை கிடைக்கும். அது மிகவும் மணமாக  இருக்கும். குழந்தைகளுக்குப் பயன்படுத்தும் பவுடர், பொடுகு நீக்கும் ஷாம்பூக்கள், சோப்புகளில் சேர்க்கப்படும் வாசனைத் திரவியம் போன்ற வற்றுக்கெல்லாம் இந்த எண்ணை பயனாகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com