சிறுகதை - நட்பு!

நட்பு
நட்புwww.estorybook.in
Published on

ரு ஏரியில் ஆமை ஒன்று வாழ்ந்து வந்தது.

அந்த ஆமைக்கு இரண்டு அன்னங்கள் நல்ல நண்பர்களாக  இருந்தன.

அவர்கள் மூன்று பேரும் ஒவ்வொரு நாளும் காலையில் இருந்து மாலை வரை சந்தித்து பேசி நட்புடன் இருந்தன.

ஓராண்டு மழை பெய்யாததால் ஏரி வறண்டு போகும் நிலை  நிலை வரப் போவதை அறிந்து மாற்று ஏரிக்குசெல்ல திட்டமிட்டன மூன்றும்.

ஆமை, பறவைகளைப் பார்த்து நீங்கள் முதலில்  பறந்து சென்று வேறு ஒரு ஏரியை கண்டுபிடித்து வாருங்கள்.

பின் நீங்கள் இருவரும் ஒரு குச்சியை பிடித்துக் கொள்ளுங்கள், நான் அந்தக் குச்சியை என் வாயால் இறுகக் கவ்விப்

பிடித்துக் கொண்டு அந்த ஏரிக்கு சென்று விடுவோம்  அங்கு மகிழ்வாய் இருக்கலாம் என்றது.

இரண்டு அன்னங்களும் பறந்து சென்று ஏரியைக் கண்டுபிடித்து ஆமை சொன்னபடி ஒரு குச்சியுடன் வந்தது.

அப்போது அன்னம், ஆமையிடம்  உங்கள் வாயை ஏரியை அடையும் வரை  வாயை இறுக்கமாக மூடிக் கொண்டு  பேசக் கூடாது.

ஆமையும் குச்சியை வாயால் கவ்வி இறுக்கமாக பிடித்து கொண்டது. அன்னங்கள் பறக்க ஆரம்பித்தது.

இந்த விசித்திர காட்சியை ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் கை தட்டியதைப் பார்த்து ஆமை  மகிழ்வுடன் இதனை நண்பர்களிடம் என்ன ஆச்சு? என்று வாயைத் திறந்து கேட்டதும், அடுத்த நொடியே கீழே விழுந்து இறந்தது.

அன்னங்களால் எதுவும் செய்ய இயலாமல் ஏரிக்கு சென்றது.

எந்த நேரத்தில் யாரிடம் எப்படி பேசவேண்டும். எப்பொழுது பேசக்கூடாது என்பதை இக்கதை உணர்த்துகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com