குட்டிக்கதை - நெல்லி மரம்!

ஓவியம்; ஓவியர்
ஓவியம்; ஓவியர்
Published on

-சாருநிவேதிதா

ன் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் ஒரு பெரிய நெல்லிக்காய் மரம் இருந்தது.  கார் நிறுத்துவதற்கு இடைஞ்சலாக இருக்கிறது என்று அந்த வீட்டுக்காரர் மரத்தை வெட்டிவிட்டார்.  மரம் இல்லாத அந்த இடம் வெறிச்சோடி என்னவோ போல் இருந்தது.  மாலையில் பள்ளிக்கூடம் விட்டு வந்த அந்த வீட்டுக்காரரின் பேத்தி (வயது ஆறு இருக்கும்) மரம் இல்லாததைப் பார்த்து அழ ஆரம்பித்து விட்டாள். எவ்வளவு சமாதானப்படுத்தியும் அழுகையை நிறுத்தவில்லை. நான் போய் சமாதானப்படுத்த முயற்சி செய்தபோது தேம்பியபடி அவள் கேட்டாள். “அங்கிள், இந்த மரத்தில் நிறைய்ய்ய அணில் இருந்தது.  காக்கா இருந்தது.  கிளி இருந்தது.  அது எல்லாத்துக்கும் அந்த மரம் தானே வீடு? இப்போ அது எல்லாம் எங்கே தங்கும்?”

அந்தச் சிறுமியின் கவலையும், கேள்விகளும் என் மனதை உருக்கின. சிந்தனையைத் தூண்டின.

மரத்தை வெட்டுவதால் அதில் வசிக்கும் ஜீவராசிகளுக்கு மட்டும் அல்ல; மனிதர்களாகிய நமக்கும் நஷ்டம்தான். எப்படி? நாம் ஆக்ஸி ஜனை சுவாசித்து கார்பன் - டை - ஆக்ஸைடை வெளியிடுகிறோம் அல்லவா? மரங்கள் இதற்கு நேர் எதிரான வேலையைச் செய்கின்றன. உணவு தயாரிக்கும் பணியான ஒளிச்சேர்க்கை என்னும் நிகழ்வின்போது கார்பன் - டை - ஆக்ஸைடை உட்கொண்டு ஆக் ஸிஜனை வெளியிடுகின்றன. எனவே நாம் சுவாசிக்கும் காற்றில் ஆக்ஸிஜன் இருக்க வேண்டுமானால் மரங்கள் இருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
குளிர்காலத்தில் முடி வறண்டு காணப்படுகிறதா?
ஓவியம்; ஓவியர்

மரங்களை மட்டும் அல்லாமல் நம்மைச் சுற்றி வாழும் எல்லா ஜீவராசிகளிடமும் நாம் அன்பு செலுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரே காரணம்தான். இந்த உலகத்தில் வாழ்வதற்கு நமக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதே உரிமை மற்ற ஜீவராசிகளுக்கும் உண்டு!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com