குட்டிக் கதை - எதிரியின் வலிமை!

ஓவியம்: பிள்ளை
ஓவியம்: பிள்ளை

டர்ந்த காடு ஒன்றில் யானை தனது குட்டியுடன் வசித்து வந்தது. இரண்டும் தண்ணீர் குடிப்பதற்காக நீரோடையை நோக்கிச் சென்றன. வழியில் குள்ளநரி ஒன்று எதிர்ப் பட்டது. குட்டி யானைக்கு ஆபத்து வந்து விடக் கூடாது என்பதற்காகக் குள்ளநரியைத் தாய் யானை விரட்டியடித்தது. மீண்டும் நீரோடையை நோக்கி இரண்டும் நடக்க ஆரம்பித்தன.

திடீரென்று தாய் யானை, “சிங்கம் உறுமும் கர்ஜனை ஓசை கேட்கிறது செல்லம்! அந்த மரங்களுக்குப் பின்னால் ஒளிந்துகொள்ளலாம். சிங்கம் தாகம் தணித்த பிறகு நாம் நீரோடைக்குப் போய்த் தண்ணீர் குடிக்கலாம்” என்றது. அடர்த்தியாக வளர்ந்திருந்த மரங்களின் பின்னால் குட்டியானையுடன் மறைந்துகொண்டது தாய் யானை.

சிங்கம் தண்ணீர் குடித்துச் சென்றவுடன், குட்டி யானை தாயிடம் கேட்டது: “நரியைத் துரத்தியடித்த தைரியத்தை சிங்கத்திடம் காட்ட முடியாதா அம்மா?”

இதையும் படியுங்கள்:
இனிக்கும் கரும்பில் இத்தனை ஆரோக்கியமா?
ஓவியம்: பிள்ளை

தாய் யானை பரிவுடன் விளக்கியது: “இரண்டும் மாமிசம் உண்பவை என்றாலும், நரியை எதிர்க்கும் வலிமை நமக்கு உண்டு. ஆனால் சிங்கம் மிகப் பலம் வாய்ந்தது. நம்மைக் காப்பாற்றிக்கொள்ள ரொம்பவே போராட வேண்டி இருக்கும். ஆபத்து ஏற்படாமல் காத்துக் கொள்ள வேண்டுமே தவிர, நாமாக வலியச் சென்று மாட்டிக்கொள்ளக் கூடாது. எதிராளியின் வலிமை அறிந்து செயல்பட வேண்டும். புரிந்ததா?”

புரிந்ததற்கு அடையாளமாகத் தலையை ஆட்டிய குட்டி யானை, நீரோடையில் தண்ணீர் குடித்ததோடு

உற்சாகமாகக் குளியலும் போட்டது.

-செளமியா, தேவனாங்குறிச்சி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com