ஸ்காட்லாண்ட் பற்றி சில தகவல்கள்!

Scotland
Scotland
வாசுதேவன்

எழுதுவதின் மேல் இருக்கும் ஆர்வம் காரணமாக, பல ஆண்டுகளாக என் பெயரிலும் ( வாசுதேவன் ), புனை பெயரிலும் ( மஞ்சுதேவன் ) (Pen name. Manjudevan) எழுதி வருகிறேன். பல்வேறு பத்திரிகைகளில் எனது படைப்புக்கள் வந்துள்ளன. பணி நிமித்தம் கர்நாடகா, தமிழ் நாடு, மேற்கு வங்காளம், குஜராத், மகாராஷ்டிரா பகுதிகளில் வேலை செய்யும் பொழுது, பல்வேறு மக்களை சந்திக்கவும், பழகவும் கிடைத்த வாய்ப்புக்கள், பெற்ற அனுபவங்கள் எழுத உதவுகின்றன

Updated on

ஸ்காட்லாந்து நாடு குறித்து நாம் அறியாத சில சுவாரஸ்ய விஷயங்களைப் பார்ப்போமா?

  • ஸ்காட்லாண்டின் தலை நகரம் எடின்பர்க்.

  • இந்த நாட்டின் ஒரே ஒரு பகுதி மட்டும் நிலப்பரப்பு இருக்கும். அதன் நீளம் கிட்டத்தட்ட 155 கிலோ மீட்டர். இங்கிலாந்தை ஒட்டி உள்ளது.

  • சுற்றிலும் கடற்கரைகளால் சூழப்பட்ட ஸ்காட்லாண்ட் சுற்றுலாப் பயணிகளை சுண்டி இழுக்கும் ரம்மியம் மிக்க இடம் ஆகும்.

  • ஒரு பக்கம் அட்லாண்டிக் கடலும், மறு பக்கம் வடக்கு கடலும் வியாபித்து உள்ளன.

  • இந்த அழகிய நகரத்தில் வசிப்பது இங்கிலாந்தில் வசிப்பதை விட குறைவாகவே செலவு செய்ய வேண்டியிருகின்றது.

  • இங்கு வசிப்பவர்கள் பழகுவதற்கு இனிமையானவர்கள்.

  • இங்கு பெரும்பான்மையான வருமானம் சேவை துறைகளின் மூலம் வருகின்றது.

  • இங்கு குறைந்த வருமானம் பெறுபவர்களின் குழந்தைக்கு 16 வயது வரையில் வாரம் குறிப்பிட்ட பராமரிப்பு தொகை வழங்கப்படுகின்றது.

  • பிரிட்டனின் மிக உயரமான நீர்வீழ்ச்சி ஈஸ் சுல் அலுயின் (Eas Chual Aluinn) ஸ்காட்லாண்டில் உள்ளது.

  • உலகின் முதல் தீயணைப்பு படை துவங்கியது எடின்பர்க்கில்.

  • கிட்டதட்ட ஸ்காட்லாண்டில் 790 தீவுகள் உள்ளன.

  • ஸ்காட்லண்டின் தேசிய மிருகம் யூனிகார்ன்.

  • ஹாக்கிஸ் என்ற தேசிய பாரம்பரிய உணவு வகை இங்கு மிகவும் பிரபலம்.

  • 5 முதல் 21 வயது வரையில் ஸ்காட்லண்டில் வசிப்பவர்களுக்கு பஸ்ஸில் பயணம் இலவசம்.

  • ஸ்காட்லண்டின் புகழ் பெற்ற விளையாட்டு அஸோஸியேஷன் கால்பந்து என்று அழைக்கப்படுகின்றது.

  • ஸ்காட்லாண்டில் சுற்றுப் பயணம் மே மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரையில் மேற்கொள்வது சால சிறந்தது.

  • இங்கு சரித்திரப் புகழ்பெற்ற அரண்மனைகள் உள்ளன.

  • ஸ்காட்லாண்டின் பாரம்பரிய உடை கில்ட் (Kilt) என்று அழைக்கப் படுகின்றது. இடுப்பிலிருந்து தொடை வரையில் ஸ்கர்ட் மாதிரி இருக்கும் இந்த உடையை அணிவதில் ஸ்காட்லாண்ட் வாசிகள் பெருமிதம் கொள்கிறார்கள்.

  • இங்கு ஜனதொகை கிட்டத்தட்ட 6 மில்லியன், இங்கிலத்தில் 66 மில்லியன்.

  • புகழ்பெற்ற போலீஸ் துறையில் அங்கம் வகிக்கும் ஸ்காட்லாண்ட் யார்ட் (Scotland Yard) இயங்குவது இங்கிலாந்திலிருந்துதான்.

இதையும் படியுங்கள்:
மரங்களின் மகத்துவத்தை மறவாதீர் குழந்தைகளே!
Scotland
logo
Kalki Online
kalkionline.com