ஆந்தைகளைப் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்!

Some interesting facts about owls!
Children articles
Published on

ஹாய் குட்டீஸ்!

லகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பறவைகள் உள்ளன. அதில் இரவில் விழித்திருக்கும் பறவைகளின் எண்ணிக்கை 174 ஆகும். இவ்வாறாக இரவில் விழித்திருந்து வேட்டையாடும் பறவைகளை இரவாடி பறவைகள் என்று அழைப்பர். இந்த இரவாடிப் பறவைகளில் ஆந்தையும் ஒன்று. கிட்டத்தட்ட 133 வகைகளைக் கொண்டிருக்கும் இந்த ஆந்தைகளைப் பற்றிய சுவாரஸ்யமான சில தகவல்களை இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்!

பொதுவாக ஆந்தைகள் என்றாலே இரவில் வேட்டையாடும் பறவை என்பதுதான் நாம் அனைவரும் அறிந்திருப்போம். ஆனால் சில வகை ஆந்தைகள்  பகலிலும் வேட்டையாடும் தன்மை உடையவை. ஆந்தைகளின்  பார்வைதிறன் மிகவும் அதிகம். அது மனிதர்களின் பார்வை திறனை போன்று கிட்டத்தட்ட 60 மடங்கு  நுண்ணிய பார்வை திறனைக் கொண்டது. உட்கார்ந்த இடத்திலிருந்து  தலையை திருப்பாமல் கிட்டத்தட்ட 360 டிகிரியிலும் கண்களை மட்டும் சுழற்றி நாலா  புறமும் பார்க்கும் திறமை வாய்ந்த பறவை ஆந்தை.

அளவில் பெரிய கண்களைக் கொண்டுள்ள ஆந்தைகள், முழு  இருட்டில் கூட ஒலியைத்  தொடர்ந்து சென்று  வேட்டையாடும் தன்மை உடையவை. சில ஆந்தைகள் தங்களுடைய இறக்கைகளை பயன்படுத்தி ஆழமான நீரிலும் கூட கடினமாக நீச்சல் போடும் தன்மை உடையவை. அவ்வாறு நீந்திய பின் இறகுகளை உலர வைக்கும்போது  மனிதர்களைக் கண்டால் இவை  அபாரமாக தாக்கும் திறன் உடையவை.

ஆந்தைகளின் கால் நகங்கள் மற்றும் அலகு  மிகவும் கூர்மையானவை. ஒரு எலியின் உடலை கிழித்து சாப்பிடும் அளவுக்கு கூர்மை தன்மையுடன் நகங்கள் காணப்படுகின்றன. மேலும் ஆந்தைகள் சத்தமிடாமல் தாக்கும் ஆற்றல் உடைய பறவை. ஆந்தைகளின் விருப்ப உணவாக எலிகள் உள்ளன. ஒரு நாளைக்கு ஒரு ஆந்தை 4  எலிகளை வேட்டையாடும் தன்மை உடையது.

பெண் ஆந்தைகளே  ஆண் ஆந்தைகளை விடவும் பெரியதாக இருக்கும். இவற்றின் இறகுகள் மிகவும் மிருதுவாக இருப்பதால் மழைக்காலத்தின்போது இவை வேட்டையாட  வெளியே வருவதில்லை. ஏனெனில் இறகுகள் நனைந்துவிட்டால் அவ்வளவு எளிதில் பறக்க முடியாது. மேலும் ஆந்தைகளுக்கு சொந்தமாக கூடு கட்டுவதில்லை. பிற பறவைகள் வசித்து கைவிடப்பட்ட கூடுகளையே ஆந்தைகள் வசிப்பதற்கு தேர்வு செய்கின்றன.

இதையும் படியுங்கள்:
What Kids Can Learn from 'The Magic School Bus'?
Some interesting facts about owls!

ஆந்தைகள் அதிக தொலைவு பறக்கின்றன. ஒரு ஆந்தை கிட்டத்தட்ட 3000 மைல் தொலைவு கூட நிற்காமல் பறக்கும் இயல்புடையவை. ஆந்தை தன்னுடைய தலைக்கு முன்புறம் இரண்டு கண்களையும் பின்புறம் இரண்டு கண்களையும் கொண்டிருக்கும்.  ஆனால் பின்புறம் உள்ள இரண்டு கண்களும் பொய் கண்கள் ஆகும். எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக அதனை பார்ப்பது போன்று பயன்படுத்துகின்றன.

மண்புழுவுக்கு அடுத்தபடியாக விவசாயிகளின் நண்பனாக பார்க்கப்படுவது ஆந்தைகள். ஏனெனில் வயலில் உள்ள எலிகளை கட்டுப்படுத்துவதில் ஆந்தைகளின் பங்களிப்பு மிகவும் அதிகம். எலிகளின் தொல்லை குறைந்து  விவசாயம் செழிப்பாக நடைபெறுவதால் ஆந்தைகள் விவசாயத்தின் நண்பனாக பார்க்கப்படுகின்றன. இவ்வளவு தனித்துவம் நிறைந்த ஆந்தைகள்  சில மூடநம்பிக்கைகளுக்காக மனிதர்களால் கொடுமையாக வேட்டையாடப்படுகின்றன. எனவே இனிமேலாவது  உலகில் உள்ள எந்த ஒரு உயிரினத்திற்கு பின்பும்  ஒரு அடிப்படையான நோக்கம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com