நம் வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கக்கூடிய சில மரங்களும் அவற்றின் பயன்களும்!

Home garden trees
Home garden trees
A.N.ராகுல்

அனைவருக்கும் வணக்கம் என் பெயர் ராகுல் நான் ஒரு பொறியியல் பட்டதாரி, தமிழின் மீது உள்ள ஆர்வத்தால் எழுத்து துறையில் என்னை இணைத்துள்ளேன். என்னுடைய பொதுவான குறிக்கோள் நான் செய்யும் விஷயங்களால் மற்றவர்கள் பலனடைய வேண்டும் என்பதே, அதை என் தாய்மொழி மூலம் இந்த எழுத்து துறையின் வாயிலாக பங்காற்ற விரும்புகிறேன். ஆக வாசகர்களே நீங்கள் என் சேகரிப்புகளை பொழுதுபோக்கு, பொது அறிவு என்று எந்த கண்ணோட்டத்தில் பார்த்தாலும் இறுதியில் நீங்கள் பெரும் அந்த திருப்திகரமான உணர்வே, நான் எழுதுவதற்கு கிடைத்த பலன்.

Updated on: 
gokulam strip
gokulam strip

பப்பாளி:

  • பப்பாளிகள் வெப்பமண்டலம் சார்ந்த பழங்கள். அவை வெப்பமான காலநிலையில் வளரும்.

  • அவை வைட்டமின் சி, வைட்டமின் ஏ மற்றும் நம் உடலின் எதிர்ப்பு சக்தியை கூட்டும் Antioxidants நிறைந்தவை.

  • பப்பாளி மரங்கள் பெரிய இலைகளைக் கொண்டுள்ளன. நீளமான பச்சை-மஞ்சள் பழங்களை உற்பத்தி செய்கின்றன.

  • பப்பாளி செடிகளை பராமரிக்க கூடிய உயரத்தில் வளர்த்தால், அவை பழ உற்பத்தியை மேலும் பெருக்கும்.

வாழை:

  • வாழைமரம் எந்த இடத்தில் வைத்தாலும் அசராமல் வளரும்.

  • வாழை செடிகளுக்கு வெப்பம், சூரிய ஒளி மற்றும் வழக்கமான நீர்ப்பாசனம் தேவை.

  • உங்களிடம் குறைந்த இடம் இருந்தால், குள்ளமாக வளரக்கூடிய வாழை வகையை கூட தேர்ந்தெடுக்கலாம்.

  • வாழைப்பழங்கள் முழுவதுமாக மஞ்சள் நிறமாக இருந்தாலும் நல்ல பழுத்த நிலையில் இருக்கும் போது அறுவடை செய்வதுதான் நல்லது.

கொய்யா:

  • கொய்யா மரங்கள் பசுமையானவை, நறுமணமுள்ள வெள்ளை பூக்களை உற்பத்தி செய்கின்றன.

  • கொய்யா பழத்தில் ‘வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் Antioxidants’ நிறைந்துள்ளன.

  • கொய்யா மரங்கள் வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல காலநிலையில் செழித்து வளரும்.

  • அவைகளுக்கு நன்கு வடிகட்டிய மண் மற்றும் வழக்கமான பராமரிப்பு இருந்தால் நன்றாக வளரும்.

  • கொய்யாவை முதலில் தொட்டியில் வைத்து அது வளர தொடங்கியப் பின்னர் நேரடியாக நிலத்தில் ஊன்றி வளர்க்கலாம்.

சீத்தாப்பழம்:

  • சீத்தாப்பழ மரங்கள் பளபளப்பான இலைகள் கொண்டவை. அதன் பழங்கள் இதய வடிவில் இருக்கும்.

  • கிரீம் போன்று கூழ் பதத்தில் இனிப்பு கூடி மிகுந்த சுவையுடன் இருக்கும்.

  • இந்த மரங்கள் வளர சூடான காலநிலை மற்றும் நன்கு வடிகட்டிய மண் தேவை.

  • வழக்கமான பராமரிப்பு செய்தால் நல்ல நிலையில் பழங்களை உற்பத்தி செய்யலாம்.

  • இளம் மரங்களை குளிர்காலங்களில் கொஞ்சம் பாதுகாக்க வேண்டும்.

அத்தி:

  • அத்தி மரங்கள் பெரிய, மடல் கொண்ட இலைகள் மற்றும் தனித்துவமான பழங்களை உற்பத்தி செய்கின்றன.

  • அத்திப்பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.

  • அவை மத்திய தரைக்கடல் காலநிலையில்(Mediterranean climates) செழித்து வளரும்.

இதையும் படியுங்கள்:
மா உற்பத்தியில் மகசூலை அதிகரிக்கும் உத்திகள்!
Home garden trees

பயன்கள்:

புதிய, சத்தான பழங்கள்:

வீட்டில் பழ மரங்கள் இருந்தால், உங்களால் இயற்கையான சுவையில் பழங்களை அனுபவிக்க முடியும். இது ஆரோக்கியமான உணவுக்கு பங்களிக்கின்றன.

நிழல் மற்றும் குளிர்ச்சி:

பழ மரங்கள் இயற்கையான நிழல் தருகின்றன உங்கள் வீட்டைச் சுற்றியுள்ள வெப்பத்தைக் குறைக்கின்றன. அவை டிரன்ஸ்பிரேஷன்(Transpiration) எனப்படும் ஒரு செயல்முறையின் மூலம் காற்றை குளிர்விக்கின்றன.

வனவிலங்கு வாழ்விடம்:

பழ மரங்கள் பறவைகள், தேனீக்கள் மற்றும் பட்டாம்பூச்சிகளை ஈர்க்கின்றன. அவை சுற்றுச்சூழல் அமைப்புகளாக மாறி, வாழ்க்கை சுழற்சி பெருக்கத்தை ஆதரிக்கின்றன. மகரந்தச் சேர்க்கையை( Pollination) ஊக்குவிக்கின்றன.

நேர்மறை அதிர்வுகள்:

தோட்டம் மற்றும் பழ மரங்களைப் பராமரிப்பது ஒரு மன சிகிச்சையாக இருக்கும். இது உங்களை இயற்கையோடு இணைத்து சாதனை செய்தது போல் உணர்வை கொண்டு வருகிறது.

logo
Kalki Online
kalkionline.com