
குருநாதர் தன்னிடம் படிக்கும் சீடர்களுக்கு ஒரு நேரத்தில் ஒன்றை மட்டுமே தெளிவாக புரியும் வகையில் சொல்லிக் கொடுத்து வந்தார். சீடர்களும் அழகாக கற்றுக் கொண்டு வந்தனர். ஆனால் அதில் ஒரு சீடன் மட்டும் குருநாதர் தங்களுடைய நேரத்தை அதிகம் விரயமாக்குவதாய் வருந்தினான்.
நிறைய விஷயங்களை எடுத்துக் கூறாமல் கொஞ்சம் கொஞ்சமாக சொல்லித் தருவது அவனுடைய நேரத்தை வீணடிப்பதாக எண்ணியதால் குருவிடம் தன்னுடைய எண்ணத்தை தெரிவித்தான்.
சீடனுக்கு எப்படி புரிய வைப்பது என்று யோசித்த குரு ஒரு விஷயத்தை செய்தார். சற்று தொலைவில் ஒரு கூண்டில் அடைக்கப்பட்டிருந்த ஐந்தாறு கோழிகளையும் திறந்து விடச் சொன்னார். சீடனும் ஓடிப்போய் திறந்து விட ஒவ்வொரு கோழியும் திசைக்கு ஒன்றாக ஓடிக்கொண்டிருந்தது.
இப்பொழுது குரு அந்தக் கோழிகளை போய் பிடித்து வரச் சொன்னார். சீடனும் அவைகளை துரத்திக் கொண்டு பிடிக்கச் சென்றான். ஆனால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையை நோக்கி ஓடின.