
பாலுவின் நண்பன் வினோத் மிகவும் நல்ல பையன்; ஆனால் அவன் எப்பொழுதும் காரணமே இல்லாமல் வளவளவென்று பேசுவான். இவன் பாலுவுக்கு மிகவும் பிடித்த நண்பன். எனவே அவனை நல்வழிப்படுத்திட எவ்வளவோ முறை "தேவையற்ற பேச்சு பேசாதே. நேரத்தை பயனுள்ள வழியில் செலவிடு" என்று பாலு கூறினாலும் கேட்க மாட்டான்.
வினோத்தின் பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்வதால் வினோத் பள்ளி விட்டு வந்ததும் வீட்டில் தனியாக இருப்பான். எனவே அவன் வீட்டு பாடங்களை செய்வதற்கு தினமும் பாலுவின் வீட்டிற்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.