சுட்டெரிக்கும் வெயிலில் நம்மைக் குஷிப்படுத்தும் கோடை மழை! ஆனால்...

சுட்டெரிக்கும் வெயிலில் நம்மைக் குஷிப்படுத்தும் கோடை மழை! ஆனால்...

-மதுவந்தி

மது பள்ளி படிப்பில் பருவங்கள் நான்கு என படித்திருப்போம். ஆனால், தமிழில் பருவங்கள் மொத்தம் ஆறு - இளவேனில், முதுவேனில், கார், குளிர், முன்பனி, பின்பனி. இளவேனில் வசந்த காலத்தையும், முதுவேனில் கோடை காலத்தையும், கார் மழை காலத்தையும், குளிர் இலையுதிர் காலத்தையும், முன்பனி மற்றும் பின்பனி குளிர் காலம் அல்லது பனிக்காலத்தையும் குறிக்கும். இதில் கோடை காலத்தில் வரும் மழையே கோடை மழை.

சூரியனின் தாக்கம் உச்சத்தில் இருக்கும் கோடைக் காலம் இந்தியாவைப் பொறுத்தவரை மனிதனை வாட்டி எடுக்கும் ஒரு பருவக் காலம். சூரியனின் வெப்பம் பூமியை அதிக அளவில் தாக்கும். ஒரு சில இடங்கள் தீயில் இட்டு சுடுவதற்குச் சமமாக இருக்கும். தென் இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. அப்படி சூரியனின் தாண்டவத்தைத் தணிக்கப் பெய்யும் கோடை மழை அனைத்து ஜீவராசிகளாலும் வரவேற்கப்படும் பருவநிலை என்பதில் சந்தேகமில்லை.

பொதுவாக ஏப்ரல் தொடங்கி செப்டம்பர் வரை கோடை மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம். கோடையில் பெய்யும் மழைக்குக் காரணம், இந்திய பெருங் கடலிலிருந்து வரும் அதிக ஈரப்பதம் நிறைந்த தென்மேற்கு பருவக்காற்று. நிலத்தில் உயரும் வெப்பத்தின் அளவு, கடல் நீரிலிருந்து எழும்பும் நீராவியின் அளவை உயர்த்துவதால், நிலத்தை நோக்கி வரும் காற்றானது மழை மேகங்களை அதிகப்படுத்தி விடுகிறது. இதன் காரணமாகவே கோடையில் பெய்யும் மழையின் அளவும் அதிகம்.

கோடையில் பெய்யும் மழையானது இந்தியாவில் விவசாயத்திற்கு மிகவும் முக்கியமாக அமைகிறது. பயிர்கள் வளருவதற்கும் நிலத்தடி நீரின் அளவை உயர்த்துவதற்கும் கோடை மழை மிகவும் அவசியமாகிறது.

இதையும் படியுங்கள்:
பெண்கள் அணியும் விதவிதமான 'ஸ்கர்ட்' வகைகள் பற்றி பார்க்கலாம் வாங்க!
சுட்டெரிக்கும் வெயிலில் நம்மைக் குஷிப்படுத்தும் கோடை மழை! ஆனால்...

கோடை மழையின் அளவு மற்றும் தாக்கம் ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடுகிறது. இந்தியாவின் மேற்கு பகுதிகளான கேரளா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், கர்நாடகா போன்ற மாநிலங்கள் அதிகம் பயன் பெறுகின்றன. இதனைத் தொடர்ந்து இமய மலை பகுதிகளிலும், கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளிலும் மழை பெய்கிறது. இறுதியாக தென் திசைக்கு வருகிறது. அதனால் தமிழகத்தில்தான் மழை பிற மாநிலங்களைக் காட்டிலும் குறைவாக இருக்கிறது.

சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து மக்களைப் பெரிதும் காப்பது இந்தக் கோடை மழைதான். இப்படி பெய்யும் வருடத்தின் முதல் மழையில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை குளிக்க விரும்புவது இயல்பானதே.

ஆனாலும் கோடை மழை சில தீமைகளையும் உடன்கொண்டு வருகிறது. உதாரணமாக காற்றின் மாசுக்காரணமாக அமில மழை பெய்ய வாய்ப்புகள் அதிகம். இது சருமம் சம்பந்தப்பட்ட வியாதிகளை உண்டாக்கும். அதனால்தான் பொதுவாக முதல் மழையில் நனைய வேண்டாம் என்று கூறுவார்கள்.

எதிர்ப்பு சக்தி குறைவது...
எதிர்ப்பு சக்தி குறைவது...

மழை  அதிகமாக அல்லது மிக அதிகமாக பெய்ய வாய்ப்பிருப்பதனால் வேளாண் பாதிப்புகள் ஏற்படவும் காரணமாகிறது.

மனிதர்களின் எதிர்ப்பு சக்தி குறைவதும் இந்த மழை காலத்தில் அதிகம். அதற்குக் காரணம் திடீரென ஏற்படும் பருவநிலை மாற்றம். சுட்டெரிக்கும் வெயிலின் சூடு திடீரென மழையினால் குறைவதால் காற்றில் ஈரத் தன்மை அதிகமாகிறது. அதனால் நோய்க்கிருமிகளின் பரவும் தன்மை அதிகமாகி மக்களை தாக்குகிறது. இந்த நோய் ஒருவரிடமிருந்து அடுத்தவரிடம் பரவுவதற்கும் இந்தப் பருவநிலை மாற்றம் மிக முக்கியக் காரணம்.

எனவே, இந்தக் கோடை மழையின் நன்மைகளை எவ்வாறு கொண்டாடுகிறோமோ அந்த அளவிற்கு நாம் நம்மைப்  பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com