சிறுவர் சிறுகதை: குருவிக்கு கடன் பட்ட காகம்!

The Crow and the Sparrow
The Crow and the SparrowImg credit: AI Image
எம். ஆர். ஆனந்த்

I am a retired Bank officer. I have written articles in English for News Papers. I have written poems in English and Tamil 

Updated on

அது ஒரு கொடிய கோடை காலம். வெயில் மண்டையை பிளக்கும் உச்சி நேரம்.

பாவம்..! ஒரு அண்டங்காக்கை. அதற்கு அப்படி ஒரு தாகமோ தாகம். தொண்டை உலர்ந்து போயி கரைய முடியவில்லை. அங்கும் இங்கும் அலைந்து தண்ணியைத் தேடியது. ஒரு சிறிய மண் குடம் கண்ணில் பட்டது. அதனுள் ஆழத்தில் இருந்தது ஜலம். அதை எப்படி குடிப்பது என்று தவித்தது காகம்.

காக்கை அன்று செய்தது போல செய்யலாம் என எண்ணி கற்களைத் தேடியது. கற்கள் ஒன்று கூட இன்று காணவில்லை.

தாகத்தால் தவிக்கும் காக்கையை குருவி ஒன்று பார்த்தது. எங்கிருந்தோ ஒரு ஸ்ட்ராவை கொண்டு வந்தது. அதை வச்சு தண்ணியை உறிஞ்சி குடிச்சு காகம் தாகத்திலிருந்து பொழச்சது.

"உனக்கு நான் கடன் பட்டிருக்கேன். நீ என் தாகம் தீர வழி காட்டினாய். இல்லையென்றால், நான் நிச்சயமாய் பரலோகம் போயிருப்பேன். எனக்கு நீ இத்தனை பெரிய உதவி செய்திருக்கே. இதை நான் மறக்க மாட்டேன் என் இனிய குருவி" என்று தன் இரு ரெக்கைகளையும் ஒன்றாக குவிச்சு, நன்றி சொல்லி விடை பெற்றது காகம்.

logo
Kalki Online
kalkionline.com