ஜனநாயகக் காடு: ஒரு குட்டிக்கதை!

The Forest Votes
A Story About Civic ResponsibilityAI Image

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

அழகான நீலமலைக் காட்டில் சிங்கம், புலி, யானை முதல் சிறிய எறும்பு வரை அனைத்தும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தன. அந்தக் காட்டுக்கு ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நேரம் வந்தது.

வழக்கமாக, பலம் வாய்ந்த சிங்கமே ராஜாவாக இருக்கும். ஆனால், இந்த முறை காட்டின் மூத்தவரான ஆந்தை ஒரு புதிய யோசனையைச் சொன்னது. "இந்த முறை நாம் 'வாக்கெடுப்பு' நடத்தி தலைவரைத் தேர்ந்தெடுப்போம். யாருக்கு அதிக ஓட்டுகள் கிடைக்கிறதோ, அவரே தலைவர்!" என்றது.

காட்டில் இருந்த விலங்குகள் உற்சாகமடைந்தன. யானையும் கரடியும் போட்டிக்கு நின்றன. "யானை பெரியது, அதுதான் காட்டைப் பாதுகாக்கும்" என்றன சில விலங்குகள். "கரடி புத்திசாலி, அதுதான் உணவைத் தேடித்தரும்" என்றன மற்றவை.

தேர்தல் நாளன்று, காட்டின் நடுவே ஒரு பெரிய பெட்டி வைக்கப்பட்டது. ஒவ்வொரு விலங்குக்கும் ஒரு இலை வழங்கப்பட்டது. தங்களுக்குப் பிடித்த வேட்பாளரின் அடையாளத்தை அந்த இலையில் பதித்து, பெட்டிக்குள் போட வேண்டும்.

சிறிய முயல் குட்டி ஒன்று தயங்கி நின்றது. "தாத்தா, நான் ரொம்பச் சின்னவன். என் ஒருத்தன் போடுற ஓட்டு என்ன மாற்றத்தைச் செஞ்சிடப் போகுது?" என்று ஆந்தையிடம் கேட்டது.

இதையும் படியுங்கள்:
The Rescue!
The Forest Votes

ஆந்தை சிரித்துக்கொண்டே சொன்னது, "முயல் குட்டியே, ஒரு துளி மழையால்தான் கடல் நிறைகிறது. அதுபோல, ஒவ்வொரு தனிநபரின் வாக்கும் இந்த நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கும் வலிமை கொண்டது. உன் ஒரு ஓட்டு கூட வெற்றியாளரை மாற்றலாம். உன் உரிமையை நீ விட்டுக்கொடுக்கக் கூடாது."

முயல் குட்டிக்கு விஷயம் புரிந்தது. அது ஓடிச் சென்று உற்சாகமாகத் தன் வாக்கை அளித்தது. அன்று மாலை முடிவுகள் அறிவிக்கப்பட்டன. யானைக்கும் கரடிக்கும் இடையில் கடும் போட்டி நிலவியது. இறுதியில், மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் யானை வெற்றி பெற்றது.

அப்போதுதான் விலங்குகள் உணர்ந்தன—முயல் குட்டி போன்ற சிறியவர்களின் வாக்குகள் எவ்வளவு முக்கியம் என்று! அன்று முதல் அந்தக் காட்டில் 'வாக்காளர் தினம்' மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

logo
Kalki Online
kalkionline.com