
கதை 1:
பாதுஷாவிடம் முல்லாவிற்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. முக்கியமான விஷயங்களில் முல்லாவிடம் ஆலோசனையும் கேட்பது வழக்கம். இதனால் பாதுஷாவின் அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்த சிலர் கூட முல்லாவின் மீது கோபத்தில் இருந்தனர். சமயம் கிடைக்கும் போது முல்லாவை பழி வாங்க வேண்டும் என்று காத்திருந்தார்கள்.
ஒரு முறை பாதுஷா முல்லாவிற்கு விருது ஒன்றை வழங்கத் தீர்மானித்து, அரசவையைக் கூட்டி அமைச்சர்களிடம் கருத்து கேட்டார்.
முல்லாவின் மீது வெறுப்பில் இருந்த சிலர் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தினர்.
“நீங்கள் நினைக்கும் அளவிற்கு முல்லா ஒன்றும் பெரிய திறமைசாலி அல்ல. அவர் சாதாரண மனிதர்களைப் போலவே பேசுகிறார். சாதாரண மனிதர்கள் செய்யக் கூடிய செயல்களையே செய்து வருகிறார். அவரிடம் மனித இயல்பிற்கு மீறிய எந்த ஒரு விசேஷ திறமையும் இல்லை. எனவே, அவர் விருதுக்குத் தகுதியானவர் இல்லை” என்றார்கள்.