

ஒரு நாடு என்றால் அதற்கு குறிப்பிட்ட எல்லையும், நிலப்பரப்பும், அரசாங்கமும் அதனை நிர்வகிக்க ஆட்சியும் இருக்க வேண்டும். அந்நாட்டிற்கு என்று ஒரு தேசியக் கொடியும் இருக்க வேண்டும். அதன்படி, உலகிற்கு தேசியக் கொடியை அறிமுகப்படுத்தியது டென்மார்க் நாடு தான்.
டென்மார்க் அரசர் வால்டிமார், போர் ஒன்றில் வென்றதும் வானத்தை பார்த்தார். வானம் சிகப்பாக இருந்தது. அதில் வெள்ளை நிறம் அவருக்கு சிலுவை போல் காட்சியளித்தது. இதையே தன் நாட்டு தேசியக் கொடியாக அறிவித்தார். 1219ம் ஆண்டு முதல் டென்மார்க் அந்த நாட்டின் தேசியக் கொடியாக அதைப் பயன்படுத்தியது. உலகின் மிகவும் பழமையான தேசியக் கொடியும் டென்மார்க் தேசியக் கொடி தான்.
உலகில் இரண்டாம் நாடாக தேசியக் கொடியை அறிமுகப்படுத்தியது சுவிட்சர்லாந்து நாடு தான். 1339ம் ஆண்டு அது தனது தேசியக் கொடியை அறிமுகப்படுத்தியது. அதன் பின்னர் அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகள் அறிவித்தன.
இதனையடுத்து 100 ஆண்டுகளுக்கு பிறகு பிரிட்டன் தனது "யூனியன் ஜாக்" கொடியை அறிமுகப்படுத்தியது.
அமெரிக்காவின் தேசியக் கொடியில் 50 நட்சத்திரங்கள் இருக்கும். அது அதன் மாநிலங்களை குறிக்கிறது.
ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மேற்கு சகாரா நாடு சுத்தமான வெள்ளைத் துணியை தான் தன் நாட்டு தேசியக் கொடியாக பயன்படுத்தி வந்தது. பின்னர் தான் மாற்றியது.
தேசியக்கொடியே இல்லாமல் இருந்த நாடு- மாசிடோனியா. 1995ம் ஆண்டு தான் எட்டுக்கதிர் சூரியக் கொடியை தனது தேசியக் கொடியாக அறிமுகப்படுத்தியது.
பொலிவியா (Bolivia) நாடு இரண்டு தேசியக் கொடிகளைப் பயன்படுத்துகிறது.
உலகிலேயே ஒரே ஒரு நாட்டின் தேசியக் கொடி மட்டும் தான் அகலத்தை விட உயரம் அதிகமாக இருக்கும். அதுதான் நேபாள நாட்டின் தேசியக் கொடி.
உலகின் ஒரே செவ்வக வடிவமற்ற (இரட்டை பென்னன்ட்) கொடியைக் கொண்டுள்ளது, இது ஒரு தனித்துவமான தேசியக் கொடி. பொதுவாக எல்லா நாடுகளிலும் உள்ள தேசியக் கொடிகள் செவ்வக வடிவில் இருக்கும். ஆனால் வாடிகன் நாட்டின் கொடி சதுர வடிவில் இருக்கும்.
உலக நாடுகளில் உள்ள தேசியக் கொடிகளில் அதிக அளவில் இடம் பெற்றுள்ள சின்னம் நட்சத்திரம் தான். 41 நாடுகளின் தேசியக் கொடியில் இது இடம் பெற்றுள்ளது. அடுத்தது பிறைச் சந்திரன், இது 9 நாடுகளின் தேசியக் கொடியில் இடம் பெற்றுள்ளது.
தேசியக் கொடியில் எழுத்து இடம் பெற்று இருக்கும் ஒரே நாடு ருவாண்டா. இதன் கொடியின் நடுவில் 'R' என்ற எழுத்து மட்டும் இடம் பெற்றுள்ளது.
ஒரு நாட்டின் தேசியக் கொடியில் அதன் முன் பக்கமும், பின் பக்கமும் ஒரேயொரு ஒரு சின்னத்தை தான் கொண்டிருக்கும். ஆனால் ‘பாரகுவே’ நாட்டின் தேசியக் கொடியில் முன்புறம் ஒரு சின்னமும், பின்புறம் வேறு ஒரு சின்னமும் இருக்கும்.
கம்போடியா தன் நாட்டு தேசியக் கொடியில் அங்கோர்வாட் கோயில் சின்னம் கொண்டுள்ளது. ஆலமரத்தை தன் தேசியக் கொடியில் கொண்ட நாடு - லெபனான்.
லெசோதோ எனும் ஆப்பிரிக்க நாட்டின் மக்கள் அனைவரும் தொப்பியை அணிகிறார்கள். அதனால்தான் அவர்களின் தேசியக் கொடியிலும் இந்தத் தொப்பியின் சின்னம் உள்ளது. துப்பாக்கி சின்னத்தை தன் நாட்டு தேசியக் கொடியில் வைத்திருக்கும் நாடு மொசாம்பிக். உலகில் ஒரே ஒரு நாட்டின் தேசியக் கொடியில் மட்டும் "ஹார்பர்" என்ற வாத்தியக் கருவியை சின்னமாக பொறித்து உள்ளது. அந்த நாடு அயர்லாந்து.
நம் நாட்டில் உள்ள தேசியக் கொடியை போன்றதே தாய்லாந்து நாட்டின் தேசிய கொடியும் மூன்று கலர்கள் தான். ஆனால் என்ன? அவர்கள் கொடி மேலே சிகப்பு, அதையடுத்து வெள்ளை அதனை அடுத்து நீலம். நீலம் அங்கே தூய்மையை குறிக்கிறது. இதை போன்று உலகின் வேறு சில நாடுகளிலும் மூவர்ண கொடிகள் உள்ளது. அவை இத்தாலி, ஈரான், அயர்லாந்து, தஜிகிஸ்தான், நிகார், கோட் டிவார்(ஆப்பிரிக்கா).
அரபு நாடுகளின் ஒற்றுமையை குறிப்பதற்காக அந்த நாடுகளின் கொடிகளில் சிவப்பு, பச்சை, வெள்ளை, கருப்பு ஆகிய நிறங்கள் இடம் பெற்றுள்ளது. ஈராக், ஜோர்டான், குவைத், சூடான் ஆகிய நாடுகளின் தேசியக் கொடிகளில் இந்த நான்கு நிறங்களும் உண்டு. சிங்கப்பூர், இந்தோனேசியா, மலேசியா, மற்றும் தாய்லாந்து ஆகிய தேசியக் கொடிகளில் பொதுவாக ஓர் ஒற்றுமை உண்டு. சிகப்பு மற்றும் வெள்ளை பட்டைகள் தான் அது.
பண்டைய காலத்தில் 'சைப்ரஸ் 'நாட்டில் ஏராளமான' செம்பு ' கிடைத்தது. இந்த தீவிலிருந்து தான் ரோம் ஏராளமான செம்பு தனிமத்தை எடுத்தது. இதன் காரணமாகத்தான் சைப்ரஸ் நாட்டின் தேசியக் கொடியில் செம்பு தனிமத்தின் உருவம் அதே நிறத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.