Traffic Rules
Traffic Rules

சாலை விதிகள் நமது உயிர்க்கவசம்! கடைபிடிப்போம், உயிர் காப்போம்!

Published on

இன்றைய நவீன உலகின் அத்தியாவசிய அங்கமாக வாகனங்கள் மாறிவிட்டன. பயண நேரத்தைக் குறைத்து, வசதியை அதிகரிக்கும் வாகனங்கள், அதே நேரத்தில் சாலை விபத்துக்கள் என்ற பெரும் அச்சுறுத்தலையும் உருவாக்கியுள்ளன. இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் சாலை விபத்துக்கள் பெரும் சவாலாக இருக்கின்றன. சாலைகளில் நாம் அனைவரும் பாதுகாப்பாக பயணிக்க, சாலை பாதுகாப்பு விதிகளை அறிந்து, அவற்றை சரியாக கடைபிடிப்பது மிக அவசியம்.

சாலை விபத்துகளுக்கான காரணங்கள்:

அதிவேகமாக வாகனம் ஓட்டுதல்: அதிவேகமாக வாகனம் ஓட்டுவதால் விபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது.  அதிக வேகத்தில் செல்லும் வாகனத்தை கட்டுப்படுத்துவது கடினம், எதிர்பாராத சூழ்நிலைகளில் வாகனத்தை நிறுத்துவதற்கான நேரமும் இருப்பதில்லை.

குடிபோதையில் வாகனம் ஓட்டுதல்: மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது மிகவும் ஆபத்தானது. மது அருந்துபவரின் கவனம் செலுத்தும் திறன் மற்றும் தீர்மானிக்கும் திறன் பாதிக்கப்படுவதால் விபத்துக்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

சாலை விதிகளை மதிக்காமல் வாகனம் ஓட்டுதல்: போக்குவரத்து சிக்னல்களை மதிக்காமல், தவறான பாதையில் வாகனம் ஓட்டுதல், சாலை விதிகளை மதிக்காமல் வாகனம் ஓட்டுவது ஆகியவை விபத்துக்களுக்கு வழிவகுக்கும்.

கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல்: கைபேசி பயன்படுத்துதல், படம் பார்த்துக்கொண்டு வாகனத்தை ஓட்டுதல், சாப்பிடுதல் போன்ற கவனச்சிதறல்கள் விபத்துக்களை ஏற்படுத்தும். வாகனம் ஓட்டும்போது முழு கவனமும் சாலையில் இருக்க வேண்டும்.

சாலைகளின் மோசமான நிலை: சாலைகளில் உள்ள குண்டும் குழியும், சரியான சாலை அடையாளங்கள் இல்லாமை போன்றவை விபத்துக்களை ஏற்படுத்தும்.

வாகனங்களின் பராமரிப்பின்மை: வாகனங்களில் பிரேக், லைட் போன்றவை சரியாக இல்லாதது விபத்துக்களுக்கு வழிவகுக்கும். வாகனங்கள் நல்ல நிலையில் பராமரிக்கப்பட வேண்டும்.

சாலை விபத்துக்களை தவிர்க்கும் வழிகள்: சாலை விபத்துக்களை முற்றிலுமாக தடுக்க முடியாது என்றாலும், விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் விபத்துக்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்க முடியும்.

இதையும் படியுங்கள்:
குறிஞ்சிப்பாட்டில் இடம் பெறாத பூ எது தெரியுமா?
Traffic Rules

சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடித்தல்: அனைத்து சாலை பாதுகாப்பு விதிகளையும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். சீட் பெல்ட் அணிவது, ஹெல்மெட் அணிவது, சிக்னல்களை பின்பற்றுவது, குறிப்பிட்ட வேகத்தில் வாகனம் ஓட்டுவது போன்றவை இதில் அடங்கும்.

குடிபோதையில் வாகனம் ஓட்டக்கூடாது: குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது தண்டனைக்குரிய குற்றம் மட்டுமல்ல, உயிருக்கு ஆபத்தானது. எனவே குடிப் பதையும், குடிபோதையில் வாகனம் ஓட்டுவதையும் தவிர்க்க வேண்டும்.

கவனமாக வாகனம் ஓட்டுதல்: வாகனம் ஓட்டும்போது முழு கவனமும் சாலையில் இருக்க வேண்டும். கைபேசி பயன்படுத்துவது, சாப்பிடுவது, சாலையில் கவனத்தை சிதறடிக்கும் எதையும் செய்யக்கூடாது.

வாகனங்களை நல்ல நிலையில் பராமரித்தல்: வாகனத்தின் பிரேக், லைட், ஹாரன் போன்ற அனைத்து பாகங்களும் சரியான நிலையில் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

சாலை பாதுகாப்பு என்பது நம் அனைவரின் கடமை. சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடித்து, கவனமாக வாகனம் ஓட்டுவதன் மூலம் நம்மையும், மற்றவர்களையும் விபத்துக்களில் இருந்து காத்து, பாதுகாப்பான சாலைப் பயணத்தை மேற்கொள்ள முடியும். சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.

சாலை விதிகள் நமது உயிர்க்கவசம்.

logo
Kalki Online
kalkionline.com