உங்களுக்காக சில சுவாரஸ்யமான விடுகதைகள்!

உங்களுக்காக சில  சுவாரஸ்யமான விடுகதைகள்!

விடுகதைகள் வாய்மொழியில் உருவாகின்றன. பின் அவை  எழுத்துருவம் பெற்று வளர்ந்து மக்களை பெரிதும் மகிழ்விக்கின்றன. விடுகதைகள் எப்பொழுதுமே சுவாரஸ்ய மானவை. அதற்கு விடை கண்டுபிடிப்பது அதைவிட சுவாரசியமானது.

1) அங்கே சிலுக்குவாள் இங்கே பிலுக்குவாள் கதவு ஓரத்தில் ஒண்டிக் கொள்வாள். அவள் யார்?

2) அச்சு இல்லாத சக்கரம் அழகு காட்டும் சக்கரம் அது யார்?

3) ஆள் இறங்காத கிணற்றிலே மரம் இறங்கி கூத்தாடுது. அது என்ன? 

4) அட்டைக்கரி பெண்ணுக்கு உச்சந்தலை மஞ்சள் அவள் யார்?

5) உமி போல் பூ பூக்கும் சிமிழ் போல் காய் காய்க்கும் அது என்ன?

6) அடித்தால் அழுவான் பிட்டால் சிரிப்பான் அவன் யார்?

7) அடிக்காத பிள்ளை அலறித் துடிக்குது அவன் யார்?

8) அந்தரத்திலே பறக்கும் பறவையும் அல்ல அழகான வால் உண்டு குரங்கும் அல்ல. அது என்ன?

9) அறைகளோ அறுநூறு அத்தனையும் ஒரே அளவில் அது என்ன?

10) இரவிலே பிறந்த ராஜகுமாரனுக்கு தலையிலே குடை அது என்ன?

11) ஆனை விரும்பும் சேனை விரும்பும்

அடித்தால் வலிக்கும் கடித்தால் இனிக்கும் அது என்ன?

12) கண் உண்டு பார்க்காது கால் உண்டு நடக்காது. அது என்ன? 

13) உலகமெங்கும் படுக்கை விரித்து உறங்காமல் அலைகிறான் அவன் யார்?

14) எந்நேரமும் கொட்டும் சத்தம் கேட்காது அது என்ன?

15) ஏழை படுக்கும் பஞ்சணையை எடுத்துச் சுருட்ட ஆள் இல்லை. அது என்ன? 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com