உலகின் படு பயங்கரமான 10 உயிரினங்கள் எவை?

scariest creatures in the world
scariest creatures in the world

1. கோல்டன் டார்ட் தவளை (Golden Dart Frog):

* மேற்கு கொலம்பியாவின் அடர்ந்த மழைக்காடுகளில் காணப்படுகிறது.

* அதன் தோலில் இருந்து 10 முதல் 20 மனிதர்களைக் கொல்லும் அளவுக்கு விஷத்தை இதனால் சுரக்க முடியும்.

* சில அரிதான எறும்புகள் மற்றும் வண்டுகளை உண்ணும் போது அதன்மூலம் கடும் விஷத்தை உற்பத்தி செய்கிறது.

2. பிரேசிலிய சிலந்தி (Brazilian Wandering Spider):

* தென் அமெரிக்காவின் வெப்பமண்டல பகுதிகளில் வாழ்கிறது.

* பாதிக்கப்பட்டவர்களை முடக்கி, கழுத்தை நெரிக்கும் அளவிற்கு ஆற்றல் வாய்ந்த விஷத்தை (நியூரோடாக்சினை) உடலுக்குள் செலுத்திவிடும்.

* அரிதாகவே மனிதர்களைத் தாக்குகிறது, இதனால் உடனடி உயிரிழப்புகள் மிகவும் அரிதானவை பாதிக்கப் பட்டவர்களுக்கு உடனடி வைத்தியம் அளித்து காப்பாற்ற முடியும்.

3. Fierce Snake:

* ஊர்ந்து செல்லும் உயிரினங்களில் மிகவும் சக்திவாய்ந்த விஷம் கொண்ட ஆஸ்திரேலியா பாம்பு இது   .

* ஒரே கடியில் நூறு மனிதர்களைக் கொல்லும் அளவுக்கு இரசாயன விஷம் கொண்டது.

* விஷத்தில் நியூரோடாக்சின்கள் (neurotoxins), ஹீமோடாக்சின்கள் (hemotoxins), மயோடாக்சின்கள்(myotoxins) மற்றும் நெஃப்ரோடாக்சின்கள்(nephrotoxins) உள்ளன.

4. கல்மீன்(Stone fish):

* இது தெற்கு பசிபிக் கடலில் காணப்படும் மீன். ஒரு பாறை போல் காட்சி அளிக்கும்.

* கடற்கரைக்கு செல்பவர்கள் இதனால் எளிதில் பாதிக்கப்படலாம்.

* இதன் கொடுக்கால் (sting) கால்களின் அடிப்பகுதிக்கு ஒரு சக்திவாய்ந்த நச்சுத்தன்மையை செலுத்திவிடும்.

* சரியான உடனடி வைத்தியம் செய்தால் உடல் வலி மற்றும் வீக்கத்துடன் பிழைத்துவிடலாம்.

* அதன் உருமறைப்பு சில நேரங்களில் வேட்டையாடு பவர்கள் இடமிருந்து அதை பாதுகாக்கிறது.

Blue-Ringed Octopus
Blue-Ringed Octopus

5. நீல-வளைய ஆக்டோபஸ் (Blue-Ringed Octopus):

* பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களில் அலைக் குளங்கள்(tide pools) மற்றும் பவளப்பாறைகளில் காணப்படும்.

* சிறியது ஆனால் கொடியது. பல மனிதர்களைக் கொல்லும் அளவுக்கு விஷம் உள்ளது.

* இதன் நியூரோடாக்சின் (Neurotoxin) பக்கவாதம் மற்றும் சுவாச செயலிழப்பை ஏற்படுத்துகிறது.

* இதன் விஷத்திற்கான மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆகவே, உடனடி மருத்துவக் கவனிப்பு முக்கியமானது.

6. பெட்டி ஜெல்லிமீன்(Box Jellyfish):

* ஆஸ்திரேலியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவைச் சுற்றியுள்ள நீரில் இது காணப்படும்.

* கொடுக்கு போன்ற உடல் பகுதியால்(Tentacles) இதயம், நரம்பு மண்டலம் மற்றும் சருமத்தைத் தாக்கி, நச்சுகள் செலுத்துவிடும்.

* மிகவும் வலிமிகுந்த கொடுக்கு தாக்குதலால் சில நிமிடங்களில் மரணத்தை உண்டாக்கிவிடும்.

* வினிகர் மூலமாக இதன் நச்சுகளின் வீரியத்தை சிலமணி நேரம் குறைக்கமுடியும். ஆனால், உடனடியாக மருத்துவ உதவியை அணுகவேண்டும்.

Cone Snail
Cone Snail

7. கூம்பு நத்தை (Cone Snail):

* சூடான வெப்பமண்டல நீரில் இது வாழ்கிறது.

* ஹார்பூன்கள்(Harpoons) என்ற விஷமுள்ள பல் போன்ற அமைப்புடன் வேட்டையாடும்.

* நரம்புகள் மற்றும் தசைகளை பாதிக்கும் நச்சுகளின் கலவை இதன்  விஷத்தில் உள்ளது.

8. பஃபர்ஃபிஷ்(Puffer Fish) 

* பஃபர்ஃபிஷ் அவற்றின் சக்திவாய்ந்த டெட்ரோடோடாக்சின்(tetrodotoxin) நம்பமுடியாத அளவிற்கு ஆபத்தானது, 

* இது மனிதர்களுக்கு ஆபத்தானது. ஒரு பஃபர்ஃபிஷில் 30 வயது தக்க  மனிதர்களைக் கொல்லும் அளவுக்கு நச்சு உள்ளது, மேலும் மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. 

* அவற்றுக்கு அழகான தோற்றம் இருந்தபோதிலும், அவை உலகின் இரண்டாவது முதுகெலும்புகள் இல்லாத மிக நச்சு உயிரினம் ஆகும்.

Deathstalker Scorpion
Deathstalker Scorpion

9. டெத்ஸ்டாக்கர் ஸ்கார்பியன் (Deathstalker Scorpion):

* வட ஆப்பிரிக்க  மற்றும் மத்திய கிழக்கு நாடுகள்தான் இதன் தாயகம்.

* விஷத்தில் நியூரோடாக்சின்கள்(neurotoxins) உள்ளன. இது கடுமையான வலியை ஏற்படுத்தும்.

* குறிப்பாக குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு மிகவும் ஆபத்தானது.

* இதற்கான மருந்து  உள்ளது; ஆனால், உடனடியாக, அது கொடுக்கப்பட வேண்டும்.

இதையும் படியுங்கள்:
கம்மி பட்ஜெட்டில் மேகமலை கோடை சுற்றுலா செல்லலாம்!
scariest creatures in the world

10. நீல விஷ டார்ட் தவளை (Blue Poison Dart Frog):

* தென் அமெரிக்காவில் காணப்படும் மற்றொரு பயங்கர நச்சுத் தவளை.

* பிரகாசமான நீல நிறம் அதன் ஆபத்தைப் பற்றி வேட்டையாடுபவர்களை எச்சரிக்கிறது.

* ஆல்கலாய்டு நச்சுகள் (Alkaloid toxins) நரம்பு செயல்பாட்டில் பிரச்னையை ஏற்படுத்தக்கூடும் .

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com