
ஒரு நாள் ஒரு ஆடு புல் மேய்ந்து விட்டு தன்னுடைய இருப்பிடத்திற்கு திரும்பி கொண்டிருந்தது. அப்போது வழியில் இருந்த ஆற்றங்கரையில் ஒரு சிங்கம் காலில் அடிபட்டு படுத்திருந்தது. இந்த ஆட்டிற்கோ பயமாக இருந்தது, பக்கத்தில் போனால் சாப்பிட்டு விடுமோ என்று... அதே சமயம் பார்ப்பதற்கும் பாவமாக இருந்தது. ஆகவே என்ன ஆனாலும் பரவாயில்லை, என்ன நடந்தாலும் நடக்கட்டும் என்று நினைத்து அதனருகில் சென்றது.
"சிங்க அரசரே, என்ன ஆயிற்று? ஏன் இப்படி இருக்கிறீர்கள்?" என்று ஆடு கேட்டது.
"முதலையை வேட்டையாட ஆற்றிற்குள் போன போது முதலை என் காலை பிடித்து கொண்டு விடவில்லை, எப்படியோ நீந்தி கொண்டு ஆற்றங்கரைக்கு வந்தேன், முதலை ஜோராக கடித்து விட்டதால் நடக்க முடியவில்லை" என்றது சிங்கம்.
"அப்படியா... ஒரு நிமிஷம் இருங்கள்" என்று கூறி விட்டு அருகிலிருந்த ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் ஆற்றிலிருந்து தண்ணீரை நிரப்பி சிங்கத்திற்கு கொடுத்தது ஆடு.