Kochi: அரபிக் கடலின் ராணி.. ஏன் தெரியுமா?

Kochi: அரபிக் கடலின் ராணி
Kochi: அரபிக் கடலின் ராணி
Published on

God's Own Country என அழைக்கப்படும் கேரளாவில் அமைந்திருக்கும் ஒரு வசீகரிக்கும் நகரம் கொச்சி. இந்த நகரம்தான் ‘அரபிக் கடலின் ராணி’ எனக் குறிப்பிடப்படுகிறது. ஏன் இதை இப்படி அழைக்க வேண்டும்? இதன் பின்னால் உள்ள வரலாறு உங்களுக்குத் தெரியுமா?. வரலாறு, கலாச்சாரம், இயற்கை அழகு என அனைத்திலும் மூழ்கியிருக்கும் கொச்சி பற்றிய ரகசியங்களை இந்தப் பதிவின் வாயிலாகக் கட்டவிழிப்போம் வாருங்கள். 

வரலாறு: கொச்சியின் வரலாறு பல நூற்றாண்டுகளுக்கு முந்தையது. பல்வேறு விதமான நாகரிகங்கள் மற்றும் கலாச்சாரங்களின் வளர்ச்சியைக் கண்டுள்ளது. பண்டைய முசிரிஸ் துறைமுகம் முதல் போர்த்தீசியம், டச்சு மற்றும் ஆங்கிலேயர்களின் காலனித்துவ காலம் வரை, பல வரலாற்று மிச்சங்களை இன்றளவும் அங்கு காணலாம். என்றாவது நீங்கள் அங்கு சென்றால், சீனர்களின் மீன்பிடி வலைகள், வரலாற்று சிறப்புமிக்க ஃபோர்ட் கொச்சி மற்றும் காலனித்துவ காலத்தின் அழகான கட்டிடங்கள் வரிசையாக இருப்பதைப் பார்த்தால், கடந்த காலத்திற்கே சென்று விடுவீர்கள். 

ஏன் அரபிக் கடலின் ராணி? 

கொச்சியை ஒரு கலாச்சார பொக்கிஷம் என்றுதான் சொல்ல வேண்டும். இதற்கு அரபிக் கடலின் ராணி என்ற பெயர் வந்ததற்கு முக்கிய காரணமாக இருப்பது, இது அரபிக் கடலின் கரையில் அமைந்துள்ளதால்தான். குறிப்பாக பல நூற்றாண்டுகளாக முக்கிய துறைமுகமாகவும், வர்த்தக மையமாகவும் கொச்சி இருந்ததால், உலகெங்கிலும் உள்ள வணிகர்கள், ஆய்வாளர்கள் மற்றும் சாகசப் பயணிகளுக்கு ஒரு கவர்ச்சியான இடமாக இருந்தது. இதன் மூலமாக கலாச்சார பாரம்பரியம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு கொச்சி பெரிதளவில் உதவியது. 

கொச்சி துறைமுகம்: அரபிக் கடலின் ராணி என்ற அந்தஸ்துக்கு முக்கிய பங்காற்றுவது கொச்சி துறைமுகம்தான். இது இந்தியாவின் பழமையான துறைமுகங்களில் ஒன்றாகும் மற்றும் 600 ஆண்டுகளுக்கும் மேலாக கடல் வர்த்தகத்தின் குறிப்பிடத்தக்க மையமாக உள்ளது. இந்தத் துறைமுகத்தின் இருப்பிடம் மற்றும் பெரிய கப்பல்களுக்குப் போதிய இட வசதி ஆகியவை, உலக வர்த்தகத்தில் கொச்சி முக்கியப் பங்களிக்க உதவியது. 

இதையும் படியுங்கள்:
கோடை வெயிலை சமாளிக்க நச்சுனு 5 டிப்ஸ்!
Kochi: அரபிக் கடலின் ராணி

இயற்கை அழகு: கொச்சியின் இயற்கை அழகு பல்வேறு வகையான சுற்றுலாப் பயணிகளையும், முதலீட்டாளர்களையும் அதன் பக்கம் ஈர்த்தது. குறிப்பாக சமீபத்திய ஆண்டுகளில் இந்நகரம் குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கு உட்பட்டு, அதன் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பில் கவனம் செலுத்துகிறது. அதே நேரத்தில் நவீனத்துவத்தையும் ஒதுக்காமல், வளர்ச்சியின் பாதையில் சீராக பயணிக்க முயற்சிப்பதால், இந்த ‘அரபிக் கடலின் ராணி’ நம்மை வெகுவாகக் கவர்கிறாள். 

கொச்சிக்கு ‘அரபிக் கடலின் ராணி’ என்ற பட்டம் மிகவும் பொருத்தமானதுதான். அதன் இயற்கை அழகு, முக்கிய துறைமுகம் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் போன்றவை, நாட்டின் பல கட்ட வளர்ச்சிக்கு பங்களித்துள்ளன. நீங்கள் உள்ளூர்வாசியாக இருந்தாலும் சரி, அல்லது வெக்கேஷனுக்கு பார்வையாளராக அங்கு சென்றாலும் சரி, இந்த அற்புதமான நகரத்தின் வசீகரிக்கும் அழகு உங்களை மெய் சிலிர்க்கவைக்கத் தவறாது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com