உன்னால் முடியும் தம்பி!

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

ந்தச் சிறுவனுக்கு ரொம்ப போரடித்தது.

எல்லாமே போர். வகுப்புக்குப் போனால் ஆசிரியர் ஒரே பாடத்தைத் திரும்பத் திரும்பப் படிக்கச் சொல்கிறார். சங்கீதம் கேட்கப்போனால் ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பப் பாடுகிறார்கள். விளையாடப் போனால் ஒரே மாதிரி திரும்பத் திரும்ப விளையாட வேண்டியிருக்கிறது.

அவனுக்கு எதுவும் பிடிக்கவில்லை சோர்ந்து படுத்துக்கொண்டான்.

மகன் இப்படியிருப்பதைப் பார்த்து அவனுடைய தாய் வருந்தினார். அவருக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.

அவன் எதிலும் ஆர்வமில்லாமலிருப்பதைப் பார்த்த நண்பர்கள், உறவினர்கள், பள்ளி ஆசிரியர்கள் அனை வரும் அவனை ‘முட்டாள்’ என்று கேலி செய்தார்கள். ஆனால், அவனுடைய தாய் அவர்களைக் கண்டித்தார், ‘என் மகன் பெரிய புத்திசாலி, அது உங்களுக்குப் புரியவில்லை’ என்றார் பெருமையுடன்!

நிஜமாகவே அவன் புத்திசாலிதானா? அல்லது, மற்றவர்கள் சொல்வதுபோல் முட்டாளா?

அவனுடைய அப்பா மகனை நெருங்கினார், ‘எப்படி இருக்கே?’ என்று விசாரித்தார்.

‘ஜலதோஷம் பிடிச்சிருக்குப்பா. வேற ஒண்ணு மில்லை’ என்றான் அவன்.

மகனுடைய சோர்ந்த குரலைப் பார்த்த அவர், பாக்கெட்டிலிருந்து ஒரு பெட்டியை எடுத்தார், ‘நான் உனக்கு ஒரு பரிசு கொண்டுவந்திருக்கேனே!’

‘என்னது?’

‘காம்பஸ்’ என்றார் அவர்.

‘அப்படீன்னா?’

‘அது ஒரு வித்தியாசமான பொம்மை’ என்று பிரித்துக் காண்பித்தார் அவனுடைய அப்பா. ‘இதுல ஒரு முள் இருக்கும், அதை நீ எந்தப் பக்கம் திருப்பி னாலும், மறுபடி இதே பக்கத்துக்குத் திரும்ப வந்துடும்!’

‘வாவ்! நிஜமாவா?’ அவன் அந்த முள்ளைத் திருப்பிப் பார்த்தான். சரேலென்று பழைய இடத்துக்குத் திரும்பியது. ‘இது எப்படிப்பா?’

‘காந்த சக்திதான் இதுக்குக் காரணம்’ என்றார் அவனுடைய தந்தை.

‘என்னது? காந்தமா? அப்டீன்னா?’

‘அது கண்ணுக்குத் தெரியாத ஒரு விசை. இந்த முள்ளைப் பிடிச்சு இழுக்குது!’

அவனுடைய கண்களில் புது வெளிச்சம் தெரிந்தது. அந்த முள்ளை மீண்டும் திருப்பிப் பார்த்தான். அதில் இருக்கும் மர்மத்தைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது. காந்தத்தைப் பற்றிப் படிக்க ஆரம் பித்தான்.

இதையும் படியுங்கள்:
நோய்களைத் துரத்தும் துத்திக் கீரை!
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

அதுதான் ஆரம்பம்... அன்றிலிருந்து அவன் பல அறிவியல் விஷயங்களைப் படித்தும், கேட்டும், தானே ஆராய்ச்சி செய்தும் தெரிந்துகொண்டான். உலகத்தையே இந்த நெறிமுறைகள்தான் இயக்குகின்றன என்பது அவனுக்குப் பரவசமூட்டியது. இதைப் பற்றி மேலும் மேலும் அறிந்துகொள்ளவேண்டும் என்று பாடுபட்டான். புதுப் புதுக் கோட்பாடுகளை உருவாக்கினான். ‘முட்டாள்’ என்று வர்ணிக்கப்பட்ட அவன், இன்று அறிவியல் துறையின் மிகப் பெரிய மேதையாக உலகெங்கும் பிரபலம்!

யார் அந்தச் சிறுவன்?

பின்னாளில் அண்டவெளி யின் பல மர்மங்களுக்கு விடை கண்ட மாபெரும் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்தான்  அந்தச் சிறுவன்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com