
சங்கர நேத்ராலயா, சென்னை – 600006.
உலகம் முழுவதிலும் வாழும் இந்தியர்களால் ஒரே நாளில் அல்லது தொடர்ந்து ஒரு வாரம் வரை கொண்டாடப்படுகின்ற ஒரே பண்டிகை தீபாவளி. இந்தியர்கள் அனைவரும் ஏழை பணக்காரன், ஜாதி வேறுபாடு ஏதுமின்றி ஒரே சமுதாயம் என்பதை உலகிற்கே அறிவிக்கும் ஒப்பற்ற பண்டிகை தீபாவளி.
தீபாவளித் திருநாளை கொண்டாடுவதற்கு தீபாவளிக்கு சில வாரங்கள் முன்பே முன்னேற்பாடுகள் செய்யத் தொடங்கி விடுவது நம் வழக்கம். அதே வேளையில் நமது சுகாதாரத்தையும் பேணும் வகையில் சில முக்கிய ஏற்பாடுகளை செய்து கொள்வதும் அவசியம்.
தீபாவளி ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான தீபாவளியாக அமைந்திட சென்னை, சங்கர நேத்ராலயாவின் நிறுவனர்
பத்மபூஷன் டாக்டர் எஸ்.எஸ். பத்ரிநாத் அளித்த அறிவுரைகள்.
இனிப்பு வகைகள்:
மது இல்லா சந்திப்புகள்:
மது இல்லா தீபாவளி – அது மகிழ்ச்சியான தீபாவளி.
தீபாவளி அன்று மகிழ்ச்சியாக இருப்பதாக நினைத்துக் கொண்டு, ஒட்டுமொத்த குடும்பத்தின் மகிழ்ச்சியைக் குதறிவிடும் மதுபானங்களை, அது பீராக இருந்தாலும் சரி, ஒயினாக இருந்தாலும் சரி தவிர்த்து விட்டால் அதுதான் உண்மையிலேயே மகிழ்ச்சியான தீபாவளி.
தீபாவளி பரிசுகள்:
தீபாவளிக்கு முக்கியத்துவம் தருபவை பரிசுப் பொருள்கள். பொதுவாக அனைவரும் விரும்பி தரக்கூடிய பரிசுப்பொருள் "இனிப்பு" வகைகள். அவற்றை தேர்வு செய்யும் போது குறைந்த கலோரிகள் கொண்ட இனிப்பு வகைகள் அல்லது உலர்ந்த பழ வகைகள் (Dry fruits) பரிசாக அளிப்பது சிறந்தது. அவை நீண்ட நாட்கள் கெடாமலும் இருக்கும்.
பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க ஆலோசனைகள்:
குழந்தைகள் பெரியோர்கள் அனைவரும் விரும்பும் தீபாவளியில் பட்டாசுகளுக்கும் மத்தாப்புகளுக்கும் ஓர் முக்கிய இடம் உண்டு.
டாக்டர் எஸ்.எஸ். பத்ரிநாத், நிறுவனர் – தலைவர், சங்கர நேத்ராலயா, சென்னை.
முதல் உதவிக் குறிப்புகள் :
தவிர்க்க வேண்டிய தவறுகள்:
பல நேரங்களில் பட்டாசு மற்றும் தீ விபத்துகளின்போது 'முதல் உதவி' என்ற பெயரில் எதையாவது செய்து கண் உட்பட உடலின் பல உறுப்புகளையும் கெடுத்துக் கொள்வதும், யார் என்ன சொன்னாலும் உடனே அத்தனையையும் செய்துவிடுவதும்,மேலும் இது குறித்து பல ஊகங்களும் உள்ளன. உண்மை நிலையை முறையாகத் தெரிந்து கொள்வதே சிறந்தது.
தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் விபத்து ஏற்படுவது உடல் நலம் மட்டுமல்ல; ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் பாதித்துவிடும்.
ஆம், பாதுகாப்பான தீபாவளியே அனைவரும் விரும்புவது!
பாதுகாப்பான நடவடிக்கைகளோடு தீபாவளியை மிகச் சிறப்பாகக் கொண்டாடுவோம்!
அனைவருக்கும் ஒளிமயமான தீபாவளி நல்வாழ்த்துகள்.