இலுமினாட்டிகள் நிறுவியதா இது?

இலுமினாட்டிகள் நிறுவியதா இது?
Published on
–  முனைவர் அருணன்

மெரிக்காவின் தெற்கு உட்டாவில் உள்ள பாலைவனத்தில் 12 அடி உயர மர்ம உலோகப் பொருள் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு சிலர் இது கலைப்பொருள் என்றும் , ஒரு சிலர் இது வேற்று கிரகவாசிகளின் பொருள் என்றும் கூறி வருகிறார்கள். அந்த இடத்திற்குச் சாகச வீரர்கள் குழுவினர் சென்றுள்ளனர். ரெட் ராக் பாலைவனத்தில் ஆடுகள் கணக்கெடுப்புப் பணியின்போது, ஒரு பள்ளத்தாக்கின் அருகே தரையில் செங்குத்தாகப் பொருத்தப்பட்டிருந்த மர்ம உலோகப்பொருளை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

இந்தக் கட்டமைப்பை முதன்முதலில் ஒரு ஹெலிகாப்டர் பைலட் மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் குழு கண்டுபிடித்தது. பிக்ஹார்ன் ஆடுகளின் வருடாந்திர எண்ணிக்கைக்காக அந்தப் பகுதிக்கு மேலே ஹெலிகாப்டரில் அவர்கள் பறந்து கொண்டிருந்தனர். ஒற்றைப்பாதையை உன்னிப்பாக ஆராய்ந்த பைலட் பிரட் ஹட்ச்சிங்ஸ், இது ஒரு கலைஞரின் படைப்பாக இருக்கலாம் என்று எண்ணி உள்ளார்.

ஆர்வ மிகுதியால் இந்த இடத்திற்கு மக்கள் செல்லக்கூடும் என்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக, பொருள் கண்டறியப்பட்ட துல்லியமான இடத்தை வெளியிட மறுத்துவிட்டனர்.

இந்நிலையில், டேவிட் சர்தார் என்ற ஆய்வாளர் தலைமையிலான குழுவினர் அந்த இடத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.

ஹாலிவுட் திரைப்பட இயக்குநர் ஸ்டான்லி குப்ரிக் 1987ல் இயக்கி வெளியான படம் "2001; ஸ்பேஸ் ஒடிசி". இந்தப் படத்தின் முதல் காட்சியில் குரங்குகள் மனிதனாகப் பரிணாம வளர்ச்சி அடையும் காட்சிகள் இடம் பெற்றிருக்கும். அதில் ஒரு காட்சியில் திடீரெனப் பாலைவனப் பகுதியில் உலோக மோனோலித் ஒன்று தோன்றுவது போலக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

அமெரிக்கப் பாலைவனப் பகுதிகளில் மோனோலித்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படாமல் இருந்த நிலையில் சமீபத்தில் அமெரிக்காவும் உட்டா பகுதியில் உள்ள மலைக்குன்று பக்கத்தில் உலோக மோனோலித் கண்டறியப்பட்டது பலருக்கு வியப்பை ஏற்படுத்தியது. உலோக மோனோலித்தை ஏலியன்கள், இலுமினாட்டிகளோடு இணைத்து சதிகோட்பாட்டாளர்கள் பேசி வந்தனர். இந்நிலையில் அங்கிருந்த மோனோலித் தற்போது மாயமாகியுள்ளது.

அதை யாராவது திருடிச் சென்றிருக்கலாம் என்றும், அது தனியாருக்குச் சொந்தமான பகுதி என்பதால் அதை ஆய்வு செய்வது பற்றி முடிவெடுக்காமலிருந்ததாகவும் கூறப்படுகிறது. மோனோலித் மாயமானது ஒருபுறம் இருக்க, மோனோலித் பற்றி ஸ்டான்லி குப்ரிக் எப்படி முன்பே தனது படத்தில் காட்சி வைத்தார் என்பதும்,
அது 2011இல் இறந்த கலைஞரான ஜான் மெக்ராக்கனின் படைப்பு அது என்பதும் தான் இப்போது  அமெரிக்கச் சமூக வலைத்தளங்களில் அலசப்படும்  ஹாட் டாபிக்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com