துபாய் எக்ஸ்போ 2020 விஸிட் – ஒரு நேரடி ரிப்போர்ட்.சுமிதா ரமேஷ் .உலகத்தையே ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நோக்கி வரவழைத்த துபாய் எக்ஸ்போ 2020 கடந்த அக்டோபர் முதல் தேதி 2021 முதல் மார்ச் 31ந்தேதி 2022 வரை வோர்ல்ட் எக்ஸ்போ அமைப்பினரால் நடத்தப்பட்டது..அக்டோபர் 20ந் தேதி 2020ஆண்டில் துவங்கி, ஏப்ரல் 10ந் தேதி 2021 வரை நடத்த முன்பு திட்டமிடப்பட்டு கோவிட் பெருந்தொற்றுக்காரணத்தால் தள்ளிப்போடப்பட்டது..நீண்ட பெருமூச்சுடன் துபாய் அரசு காத்திருக்கத் தொடங்கியது..ஏராளமான இடையூறுகள், கோவிட் தாக்குதல் சவால்கள், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு நடைமுறைகள் என மற்ற நாடுகள் சந்திக்காத சவால்களை இன்முகத்துடன் ஏற்க தொடங்கியது துபாய்..எப்படி உருவானது Dubai Expo2020?.5 வருடங்களுக்கு ஒருமுறை உலக நாடுகள் தங்களின் ஆகச்சிறந்த படைப்புகள், அறிவியல், தொழிற்சார்ந்த கண்டுபிடிப்புகளை பறைசாற்ற மனிதகுலத்தை அடுத்த நிலைக்குக்கொண்டு செல்ல 1851 ம் ஆண்டு இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் முதல் Expo- பொருட்காட்சி ஆரம்பிக்கப்பட்டது..Bureau of International Des Expositions என்ற அமைப்பு 1928ல் முதல் பொருட்காட்சி பெற்ற ஆதரவும், அதன் ஈடுஇணையற்ற ஈர்ப்பும், அறிவியல், தொழிற்நுட்பம், சமூக முன்னேற்றத்திற்கான ஆசைகள் கண்டுபிடிப்புகளை, ஒர் கருப்பொருளுடன்(Theme) உலக நாடுகளை ஒரு குடையின் கீழ் இணைக்க செய்தது..5 வருடங்களுக்கு ஒரு முறை ஒவ்வொரு நாட்டினையும் ஏலத்தில் தலையை நுழைக்கச் செய்து தங்கள் நாட்டிற்கு கிடைத்து உலகத்தின் போகஸ் லைட்டை தங்கள் நகரங்களின் மீது திருப்ப முயற்சித்தன..தற்போதைய இந்த துபாய் Expoவிற்கு முன்பு இத்தாலியின் மிலன் நகரில், 2015ம் ஆண்டில் நிகழ்ந்தது..இதற்குபின் ப்ரான்ஸ் தலைநகர் பாரீஸில், 2013, நவம்பர் 27ந் தேதி The Bureau International des Expositions, general assembly லில் மிக தாமதமாகத்தான் ஐக்கிய அரபு நாடுகள் ஏலத்தில் நுழைந்தது. பிரேசில், துருக்கி, ரஷ்யா நாட்டின் நகரங்களை பின்னுக்கு தள்ளி பல வாக்குகளைப் பெற்று துபாய் ஏலத்தில் வென்றது வரலாறு..ஏலத்தில் வென்றதாக செய்தி வெளியான நாளில் ஐக்கிய அரபு நாட்டின் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறையளித்து,பிரபல புர்ஜ் கலீபாகோபுரத்தில் வெளியிட்டு தெரியப்படுத்தியது துபாய் அரசு..கோலாகல கொண்டாட்டம் அன்றே துவங்கியது. பல ரெஸ்டாரண்ட்களில் இலவச உணவு என பல சலுகைகளால் களைக்கட்ட ஆரம்பித்தது..பல புதுப்புது நிறுவனங்கள், வேலை வாய்ப்புகள் என உலக மக்களை தம் பக்கம் திருப்ப அத்தனை வேலைகளிலும் சரியாக திட்டமிட்டு களமாட துவங்கியது துபாய் அரசு..அன்றிலிருந்து உலக மகா பொருட்காட்சியின் மூலம் 27,70,000 புது வேலைவாய்ப்புகள், 40 $ பில்லியன் பொருளாதார உயர்வு வரும் 25 கோடி முதல் 100 கோடி மக்களை வரவேற்க தயாரானது துபாய் நகரம்..துபாய் நகரின் வளர்ச்சி, வளர்ச்சி விகிதம் எப்படியிருக்கும் என்ற சரியான திட்டமிடலுடன், ரியல் எஸ்டேட் மற்றும் கட்டிடக்கலை வளர்ச்சியை முக்கிய இலக்காகக் கொண்டு கூடவே பல மாங்காய்களை இந்த சந்தர்ப்பத்தில் அடிக்க ப்ளான் செய்தது துபாய்..தற்போது அமைந்துள்ள Expo exhibition கட்டுமான இடத்தில் முதலில் 7 பில்லியன் டாலர் செலவில் கட்டடங்கள் எழுப்பவும் மக்களை சிறந்த முறையில் வரவேற்கவும் முக்கியத்துவம் தரவும் திட்டமிடப்பட்டது..இந்த Expo site துபாயின் இணை விமான நிலையமாகிய அல் மக்தும் இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டுக்கு அருகில், அனைத்து நாட்டு மக்களையும் ஈர்க்கும் வகையில் விமான நிலையமும் மேம்படுத்தப்பட்டு, பிற்காலத்திற்கும் உதவும் வகையில் தனி நகரமாக Expo city என்ற பெயரில், உயர்ந்த சோலார் பார்க்குகளை அமைத்து, வரும் தலைமுறையினரும் தன்னிகர்வடைய, sustainability ஐ உட்கருத்தாக கொண்டு அமைய ஆரம்பித்தது. 'ஏய்… சூப்பரப்பு…' என்று கைதட்டும் விதத்தில் அமைந்தது..துபாயின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் பாதுகாப்பாக, வசதியாக வந்துசெல்ல தனியாக மூன்று பாதைகள் அமைத்துத் தந்தது துபாய் மெட்ரோ ! நான்கு வழிச்சாலைகளிலும் கார்கள் ட்ராபிக் இன்றி வழுக்கிச்செல்ல உருவாக்கப்பட்டன..அதுமட்டுமின்றி, The Dubai Canal Project மூலம் மக்கள் Expo site ஐ அடைய படகுகள், தண்ணீர் டாக்ஸிக்கள், குட்டி ஆடம்பர கப்பல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதில் 450 உணவகங்கள், சைக்கிள் பாதைகள், நடைபாதைகள் ஒரு மெகா ஷாப்பிங் சென்டர் என அதகளப்படுத்தியது துபாய் அரசு..இதில் பச்சை பசுமை புல்வெளிகளை 12,000 ஹெக்டேரில் உருவாக்க மட்டுமே 6 billion dirhams பட்ஜெட்டில் ஒதுக்கியது அரசு எனில் பார்த்துக் கொள்ளுங்களேன்..தலைநகரான அபுதாபிக்கும் துபாய்க்கும் இடையில் ஓர் அமெரிக்க நிறுவனத்தின் மூலம், Opportunity, Mobility and Sustainability ஆகியவற்றை தீம் ஆகக்கொண்டு 1083 ஏக்கர் நிலப்பரப்பை 3 பிரிவுகளாகப் பிரித்து மாஸ்டர் ப்ளான் செய்யப்பட்டது..Orascom and BESIX என்ற இரு நிறுவனங்களால் 4.38 kmல் நிறுவப்ப்பட்ட உட்கட்டமைப்பில் , Isolation room, emergency care room, ambulances and helicopter services இப்படி தனித்தனியே திட்டமிட்டு கட்டப்பட்டிருப்பது. ROVE Expo 2020 என்ற ஒரு ஹோட்டல் மட்டுமே என்றால் அது எத்தனை காஸ்டலியாக இருக்கும் என எழுதிதான் புரிந்துக்கொள்ளவேண்டுமா!.Dubai Expo2020 – கடந்த 2021, செப்டம்பர் 30 ந்தேதி மிகப்பிரம்மண்டமான உலக புகழ்பெற்ற பிரபலங்களின் நிகழ்ச்சிகளுடன் ஆரம்பமானது. நம்மூர் ஏ.ஆர். ரஹ்மானின் நிகழ்ச்சியும் இருந்தது..துபாய் ஆட்சியாளர், நாட்டின் பிரதமர் Sheikh Mohammed bin Rashid al Maktoum அவர்களால் துவக்கிவைக்கப்பட்டது..மனங்களை இணைப்போம்- வருங்காலத்தை உருவாக்குவோம் என்பதை தீம் ஆகவும் opportunity, mobility and sustainability அகியவற்றைஉப உட்கருத்தாகவும் கொண்டு உருவாக்கப்பட்டன பெவிலியன்கள். இவற்றில் குறிப்பிடத்தக்க Alif – The Mobility Pavilion, உலகிலேயே 160 பேரை ஒரே நேரத்தில் தூக்கிச்செல்லும் மிகப்பெரிய மின் தூக்கி(lift) கொண்டது..191 பெவிலியன்கள்(கூடாரங்கள்)பல்வேறு நாடுகளின் சார்பில் அமைக்கப்பட. 9 பெவிலியன்கள் தனிப்பட்ட அமைப்புகளால் நிறுவப்பட்டது..அவற்றில் sustainability district ல் நமது பாரத் – இந்திய நாட்டின் பெவிலியன் நான்கு மாடிக்கட்டிடமாக, அற்புதமான ஆயுர்வேதம்,யோகக்கலை, விண்வெளித் திட்டம் மற்றும் வளரும் பொருளாதாரத்தை வெளிக்காட்டும் வகையில் நேர்த்தியாக அமைக்கப்பட்டது. எப்போதும் செம கூட்டம். 'அடிக்கடி பாரதமாதாவுக்கு ஜே' என்ற கோஷமும் கேட்கிறது. பல வெளி நாட்டினரையும் ஈர்ப்பதையும் காண முடிந்தது..இந்தியாவின் 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் கலை, கலாசாரம், உணவு பாரம்பரியம், இலக்கியம், திரைப்படத்துறைகளை லேட்டஸ்ட் டெக்னாலஜிக் கொண்டு காட்டி அசத்தியது. இங்குதான் தமிழக அரங்கை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..இந்த கண்காட்சியில் 150க்கும் மேற்பட்ட மெகா கலாசார, வர்த்தக நிகழ்வுகள், 26 பலதரப்பட்ட உச்சி மாநாடுகளும் நடப்பட்டது. அதில் வாரம் ஒரு மாநிலத்தை சிறப்பிக்கும் விதத்தில் நிறைவு வாரத்தில் தமிழகத்திற்கான அரங்கில் முக்கிய சுற்றுலா தளங்கள், கலாசாரத்தை சொல்லும் படங்கள் வெளியிடப்பட்டு, நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன..இதில் நிச்சியமாகத் தவற விடக்கூடாதென மக்களால் கருதப்பட்ட 10 பெவிலியன்கள்..1. ஜப்பான் – டெக்னாலஜி, டூரிஸம், ஜப்பானிய கலாசாரம் என மிரட்டி மக்களை உள் இழுத்துப்போட்டது..2. UAE – ஐக்கிய அரபு நாட்டின் பெவிலியனில், தேசிய பறவையான பருந்தின்(Falcon) வடிவில் வடிவமைப்பட்டது. அதன் இறகுகளை 3 நிமிடத்தில் மூடி திறக்கும் விதத்தில் அமைக்கப்பட்டது "ஆவ்சம்" என சொல்லவைத்தது..3. தென்கொரியா – இரவில் மயக்கும் 1500 சுழலும் சதுரங்களை கொண்டு ஈர்த்தது..4. சவுதி அரேபியா- 8000 LED வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கண்ணாடிகளால் பிரதிபலிக்கச்செய்து மிரட்டியது..5. நெதர்லாந்து – ஒரு குடையின் கீழ் நாம் நின்று பாலைவனக்காற்றிலிருந்து நீர்த்துளிகளைப்பெறும் அற்புதத்தை உணரலாம்..6. எகிப்து: கலாசாரத்திலும் உலக அதிசயமான பிரமிட்டை முன்வைத்தும் உள்ளது. எகிப்திய அரசரின் தங்க முகமுடி, மன்னர்களது சவப்பெட்டிகளும் கவர்ந்தன..7. ஜெர்மனி: டெக்னாலஜியில் உள்ளிழுக்கிறது. டப்பிங் கேம்பஸில் நமக்கு தரப்படும் tag மூலம் நாம் சென்றதும் நம் பெயர் நம் மொழியில், நாம் தொடர்புகொள்ளும் lab facilities ஈர்க்கும் பெரிய பெரிய ஊஞ்சல்களில் சுற்றிலும் மெகா ஸ்க்ரீன் சுழற்றியடிக்கும் அனுபவம் சிறப்பு..8. ஸ்வீடன் : ஸ்வீடன் காடுகளை நினைவுப்படுத்தும் காட்டு மரங்களின் நடுவே வாக்கிங் தான் ஹைலைட்ஸ்..9. சைனா: ஜொலிக்கும் விளக்குகள், லேட்டஸ்ட் ட்ரோன் டெக்னாலஜி, 3டி தொழிற்நுட்பத்தில் தினமும் இரவு 8 மணி முதல் 8-10 வரை நிகழும் லைட் ஷோ…ஆசம் லெவல்..10. Sustainability pavilion: பெரிய பெரிய உலோக மரங்கள் மேலே சோலார் பேனல்கள், உள் சென்றால் சுற்றிலும் நிஜமரங்கள் காடுகளின் தீவிரமும், சமுத்திரங்களின் ஆழமும் ஒரே இடத்தில், உலகை காக்க முன்னெடுக்கப்பட்டுள்ள ப்ராஜெக்ட்ஸ் குழந்தைகளும் இண்டர் ஆக்ட் செய்ய இண்டரெஸ்டிங் ஆன பெவிலியன்..11. Mobility pavilion: அரபு உலகின் விண்வெளி திட்டங்கள், வரும் காலத்தில் மார்ஸ் கிரஹத்தில் அடியெடுத்து வைக்கும் திட்டங்களை காட்சிப்படுத்தியது கவர்கிறது..இதை தவிர தினமும் பல்வேறு நாடுகளின் கலாசார நடனங்கள், ஊர்வலங்கள், பரேடுகள் என திருவிழாக்கோலம் தான்..அல் வாசல் ப்ளாசா , ஜூப்ளி பார்க்கிற்கும் இடையில் ஒரு மேஜிக்கல் நீர்வீழ்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது. கால்பந்தாட்ட மைதானத்தில் பாதியை கொண்ட இடத்தில் மேலிருந்து கீழ் வரும் தண்ணீர் கீழே வரும் முன் மாயமாகும் நீர்வீழ்ச்சி. குழந்தைகளை மட்டுமில்லை, பெரியவர்களையும் ஜில் என்று ஈர்க்கிறது!.வெளியே பிரம்மாண்டமான பல கார் பார்க்கிங்கள்….கார்பார்க் செய்யுமிடம் முறையான திட்டமிடலும்… Where I parked my car என்ற பார்கோர்ட் வசதிமூலம் ஸ்கேன் செய்யும் வசதி அசத்தியது..அடுத்து மூன்று நுழைவாயில்களில் மக்களை பார்க்கிங் பகுதியிலிருந்து கொண்டு சேர்க்க ஹை டெக் ஷட்டில் பஸ்கள் விடப்பட்டன..நுழைவாயிலில் உள் நுழைவுக் கட்டணம் தினம் செல்பவர்களுக்காக பாஸ் கட்டணமாக 95 dhs, ஒரு மாதத்திற்கான பாஸ் 195 dhs, ஆறுமாதத்திற்கான பாஸ் 495 dhs என்றும் நிர்ணயிக்கபட்டு அதன்படியே உள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்..18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கும், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், மாணவர்களுக்கும் இலவச அனுமதி, கடைசி 50 நாட்களுக்கும் ஒரு டிக்கெட் 50 திர்ஹாம்ஸ் என்று வசூலிக்கப்பட்டது..எத்தனைகூட்டம். தினமும் திருவிழாக்கூட்டம் தான் ! கோவிட் கால பாதுகாப்பு நடவடிக்கைகளான, வேக்ஸின் இடப்பட்ட சர்பிகேட்ஸ் அல்லது முந்தைய நாள் செய்த கோவிட் டெஸ்ட் ரிசல்ட் கையில் உள்ளதா என வரும் ஒவ்வொருவரையும் துளாவுகிறது செக்யூரிட்டி அமைப்பு..நம் பொருட்களை தனித்தனி கண்காணிப்பு அமைப்புகளின் மூலம் பரிசோதிக்கப்பட்டு, பெண்கள் தனியாக கருவிகளால் பரிசோதிக்கப்பட்டு உள்ளே அனுமதிக்கபட்டனர்..குட்டி குட்டி நாடுகளும் தங்கள் நாட்டின் சிறப்பை டூரிஸத்தை வளர்க்கும் விதத்தில் கிடைத்த இடத்தில் வாய்ப்பைப் பயன்படுத்தி மக்களை ஈர்த்தனர்..அந்த நாட்டின் பெவிலியன்களுக்கு அருகில் அவர்களது உணவினை வழங்கும் ரெஸ்டாரண்ட்கள் சிறிய அளவில் அமைக்கப்பட்டன..ஐஸ்க்ரீம்கள், ஆங்காங்கே தண்ணீர், குளிர்பானங்களை வழங்கும் தானியங்கி இயந்திரங்கள் அமைக்கப்பட்டது ஹைலைட்ஸ். அது சரி விலை என்ன என்றா கேட்கிறீர்கள். மூச்… !.சுற்றிலும் ஆங்காங்கே மருத்துவ வசதிகள், ஆம்புலன்ஸ் என நீக்கமற அனைத்தும் நிரம்பியிருந்தன..இந்த கண்காட்சி முடிந்த பிறகு இந்த பிரம்மாண்ட அமைப்பு என்னாகும்… இதானே உங்கள் கேள்வி? , 3,000,000 சதுர அடிகளில் அமையப்பெற்ற இது district2020 என உருவாக்கப்பட்டு, பல அலுவகங்கள், குடியிருப்புப்பகுதிகள் மாற இருக்கிறது..Terra – The Sustainability Pavilion குழந்தைகளுக்கான அறிவியல் மையமாகவும், Alif – The Mobility Pavilion அலுவலகங்களாகவும், Mission Possible – The Opportunity Pavilion அரேபிய கலாசார, விண்வெளி மையமாகவும் மாற்றமடைய இருக்கிறது. இரண்டு மருத்துவமனைகள், ஒரு பள்ளிக்கூடம், அலுவலகங்கள் என உருமாற இருக்கிறது..நம் வாழ் நாளில் ஒரு தரம் அவசியம் காணவேண்டியது, கொண்டாட வேண்டியது என காண்போரை துபாயின் Expo 2020 என்று பிரம்மாண்டத்தால் மிரட்டியது என்றால் மிகையாகாது. "Connecting Minds, Creating the Future," உண்மைதானே!