இந்த வாரம் இவர்

இந்த வாரம் இவர்
Published on

"பஞ்சாப் மக்கள் அனைவரும் ஆம் ஆத்மி கட்சியை ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கின்றனர். இது ஒரு பெரிய பொறுப்பு மற்றும் எல்லா பஞ்சாபி மக்களின் முகத்திலும் பகவந்த் மான் மீண்டும் புன்னகையை வரவழைப்பார் என்று நான் நம்புகிறேன்,"என்று பஞ்சாப் தேர்தல் முடிந்தவுடள் டிவிட் செய்தார் அரவிந்த் கெஜ்ரிவால்.

2014ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் இணைந்ததில் இருந்து கட்சியின் நட்சத்திர பிரசாரகராக பகவந்த் மான் இருந்து வருகிறார். பஞ்சாப் முழுவதிலும் மக்கள் ஆதரவை பெற்றுள்ள அக்கட்சியின் ஒரே தலைவர் இவர்தான். ஆம் ஆத்மி கட்சியின் மிகப்பெரிய பலமாகவும், பலவீனமாகவும் அவர் கருதப்படுகிறார்.

ஒரு ஸ்டான்ட்டப் காமெடியனாக வாழ்க்கையைத் தொடங்கிய பகவந்த் மான் 1994 முதல் 2015 வரை 13 பஞ்சாபி மற்றும் இந்தி படங்களிலும், விளம்பரங்களிலும் பணியாற்றியுள்ளார். தொடர்ந்து அரசியலில் நுழைந்த இவர் மிகக் குறுகிய காலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலத் தலைவரானார்.

"எனது நகைச்சுவையின் மூலம்  அரசியல்வாதிகளின் ஊழல்களை கிண்டல் செய்து கொண்டிருந்தேன்.  ஆனால் "சேற்றை சுத்தம் செய்ய, சேற்றில் இறங்க வேண்டும்" என்று இப்போது உணர்கிறேன். அதனால்தான் இப்போது தீவிர அரசியலுக்கு வந்துள்ளேன" என்று சொல்லும்  பகவந்த் மானை ஒரு நகைச்சுவை நடிகராகவும் தலைவராகவும் மட்டுமே பெரும்பாலான மக்கள் அறிவார்கள். ஆனால் அவர் மிகவும் அழகாகவும்  ஆழமாக எழுதும்  கவிஞம் கூட.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com